பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

நோய்கள்

 

ராகிப் பயிரைத் தாக்கக் கூடிய பூச்சிகள்


  1. இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்

  2. வெள்ளை தண்டு துளைப்பான்

  3. இலை சுருட்டுப்புழு

  4. வெட்டுப்புழு

  5. துள்ளும் வண்டு

  6. கருப்பு கம்பளி புழு

  7. வெட்டுக்கிளி

  8. பச்சாடைப் பூச்சி

  9. கதிர் நாவாய் புழு

  10. கதிர் நாவாய்ப் பூச்சி

  11. வேர் அசுவுணி

  12. ராகி தத்துப்பூச்சி

  13. வேர் வண்டுப்புழு

  14. மஞ்சள் அசுவுணி

  15. பழுப்பு நிற அசுவுணி

  16. கூன் வண்டு

மேலே செல்க

 

1. இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • இலைச் சுருள்களில் புழுக்கள் தங்கி, நடு இலைகளை உண்ணுவதால் துவாரங்கள் தெரியும்.

  • அடி இலைகள் பச்சையாக இருந்தாலும், நடுக்குருத்து மட்டும் பழுப்பு நிறமாக மாறி, பிறகு காய்ந்து விடும்.

  • துளையிடப்பட்ட துவாரங்களில் பூச்சிகளின் கழிவு அடைத்துக் கொண்டிருக்கும்.

  • கதிர் வெளிவரும் பருவத்தில் வெண்கதிர் அறிகுறி தோன்றும்.  கதிர் மணிகள் நிரம்பாமல் வெள்ளை நிறத்தில் நட்டமாக தெரியும்.  அதனால் இந்த கதிர்களை வயலில் எளிதாக கண்டறிய முடியும்.

 

ii.பூச்சியின் விபரம்

முட்டை: இலைகள் மற்றும் தண்டுகளில் பழுப்பு வெள்ளை நிறத்தில், உருண்டையான வடிவத்தில் முட்டைகள் கொத்து கொத்தாக காணப்படும். முட்டை வளர்ச்சி காலம் 8 நாட்கள் ஆகும்

புழு: இளஞ்சிவப்பு பழுப்பு நிறத்தில் மென்மையான உருண்டை வடிவத்தில், கருஞ்சிவப்பு நிறத் தலையுடன் கூடிய புழுக்கள் காணப்படும். புழுப்பருவத்தின் காலம் 22 நாட்கள் ஆகும்.

கூட்டுப்புழு: அடர் பழுப்பு நிறத்தில், தலையில் ஊதா புள்ளியுடன் கூடிய கூட்டுப்புழுக்கள் தண்டுகளில் காணப்படும்.  கூட்டுப்புழுக்களின் காலம் 8 நாட்கள் ஆகும்.

முதிர்ச்சி பூச்சி: நடுத்தர அளவிலான, மங்கிய  மஞ்சள்  மற்றும் பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் பயிரில் காணப்படும்.  முன் இறகுகள் லேசான பழுப்பு நிறத்தில், இரண்டு கருப்பு புள்ளிகளுடன் இருக்கும்.  பின் இறகுகள், வெள்ளை நிறத்தில், நரம்புகளில் மஞ்சள் நிற செதில்களுடன் காணப்படும்.

 

iii.கட்டுப்பாட்டு முறைகள்

உழவியல் முறைகள்:

  • பூச்சித் தாக்கத்தின் துவக்கத்திலேயே காய்ந்த குருத்துகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.

  • குறுகிய கால, தானிய வகையல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சி முறையை கையாள  வேண்டும்.

உயிரியல் முறைகள்: உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகளான டிலோனோமஸ், டிரைகோகிராமா மைனுாடம் (முட்டை ஒட்டுண்ணிகள்), அபன்டிலஸ் பிலேவிபெஸ், பிரேகன் டிரைனென்சிஸ் (புழுப்பருவ ஒட்டுண்ணி) மற்றும் டெட்ராஸ்டைகஸ் அய்யரி (கூட்டுப்புழு ஒட்டுண்ணி) போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.




இரசாயன முறைகள்:

  • சரியான அளவு தழைச்சத்து உரங்களை முறையாக பகிர்ந்து அளிக்க வேண்டும்.

  • மிதைல் பாரத்தியான் 50 EC 1 மில்லி/லிட்டர் அல்லது பாஸ்பமிடான் 85 WSC 0.5 மில்லி/லிட்டர் அல்லது டைமேத்தோயேட் 30 EC 1.7 மில்லி/லிட்டர் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும்.

  • 20 நாட்கள் இடைவெளியில் எண்டோசல்பான் 35 EC பூச்சிக்கொல்லியை 1 லிட்டர்/எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

  • கார்பரில் 50 WP @ 1 கிலோ/எக்டர் தெளிக்க வேண்டும்.

கைவினைக் கட்டுப்பாட்டு முறைகள்: விளக்குப்பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறியினை வைக்கவேண்டும்.

மேலே செல்க

 

2. வெள்ளை தண்டு துளைப்பான்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • மற்ற தண்டு துளைப்பான் போலவே அறிகுறிகள் தோன்றும். ஆனால் இதன் புழு செடியின் வேர்ப்பகுதியை தாக்கும்.

  • பூச்சியின் தாக்கம் தீவிரமாகும் பொழுது, “நடுக்குருத்து காய்தல்” ஏற்படும். நோய்த் தாக்கம் மத்திமமாக இருக்கும் பொழுது செடிகள் மஞ்சளாகிவிடும்.

  • மண் தளத்திற்கு அருகில் துார்களின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு, புழுக்கள் செடிகளின் அடிப்பாகத்தைத் தாக்கும்.

ii.பூச்சியின் விபரம்

முட்டை: முட்டைகள் கூட்டம் கூட்டமாக சுமார் 100 எண்ணிக்கையில் செடியில் காணப்படும். முட்டைகளின் மீது பட்டு சாம்பல் நிற முடிகள் மூடியிருக்கும்.  அவை மஞ்சள் தண்டு துளைப்பான் முட்டைகள் போன்று இருக்கும்.  முட்டை வளர்ச்சி காலம் 8 நாட்கள் ஆகும்.  இலையின் நுனியில் பெண் வெள்ளை தண்டு துளைப்பான் முட்டைகள் இடும்.

புழு
: பழுப்பு நிறத்தில் மஞ்சள் தலையுடன் காணப்படும்.

கூட்டுப்புழு
: பழுப்பு நிறத்தில், ஓட்டினால் மூடப்பட்ட கூட்டுப்புழு  தண்டிற்கு உள்ளே காணப்படும்.


முதிர்பூச்சி
: அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.  முன் இறகுகளின் ஓரத்தில் வெள்ளை பட்டை காணப்படும்.

 

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • கார்பரில் 50 WP என்ற பூச்சிக் கொல்லியை ஒரு எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

  • மீதைல் பாரத்தியான் 50 EC 1 மில்லி/லிட்டர் (அ) பாஸ்பமிடான் 85 WSC 0.5 மில்லி/லிட்டர் (அ) டைமெத்தோயேட் 30 EC 1.7 மில்லி/லிட்டர் தெளிக்கவேண்டும்.

மேலே செல்க

 

3. இலை சுருட்டுப்புழு

i.பாதிப்பின் அறிகுறிகள்

  • இளம் புழுக்கள் இலைகளை உண்ணும். 

  • பின்னர் பெரிதாகும் பொழுது, இலையின் இரு பக்கங்களையும் சுருட்டி குழாய் போன்று அமைத்துக் கொள்ளும்.

  • இலையின் மடிப்பிற்குள் இருந்து கொண்டு புழுக்கள் பச்சைப்பகுதியை சுரண்டித் திண்ணும்.

  • சுரண்டப்பட்ட இலைகள் நரம்பு போல் ஆகி, வெண்மையாகி பின்பு உதிர்ந்துவிடும்.

 

ii.பூச்சியின் விபரம்

முட்டை:  ஒவ்வொரு பெண் பூச்சியும் இலையின் இரு பக்கங்களிலும் சுமார் 300 முட்டைகள் இடும் தன்மையுடையது.  முட்டைகள் நீளமாகவும், வெண் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். முட்டைக்காலம் 4-6 நாட்கள் ஆகும்.

புழு:
  மஞ்சள் பச்சை நிறத்தில், பழுப்பு அல்லது கருப்பு நிறத் தலையுடன் புழுக்கள் இருக்கும்.  நடுப்பகுதியின் மேற்புறத்தில் இரு புள்ளிகள் காணப்படும்.  புழுப்பருவம் 15-20 நாட்கள் ஆகும்.

கூட்டுப்புழு:
  கூட்டுப்புழு முதலில் பழுப்பு நிறத்தில் தோன்றி பின்னர், அடர் பழுப்பு நிறத்திற்கு மாறும்.  இலை மடிப்பில் கூட்டுப்புழு உண்டாகிறது.  கூட்டுப்புழுக்காலம் 6-10 நாட்கள் ஆகும்.

முதிர் பூச்சி:
  வெண் மஞ்சள் அல்லது தங்க மஞ்சள் நிறத்தில் முன் இறகுகளில் மூன்று கரும்கோடுகளுடன் காணப்படும்.  பூச்சியின் பின் பகுதி அகன்று காணப்படும்.  முதிர் பூச்சிப் பருவம் ஒரு வாரம் ஆகும்.

 

iii.கட்டுப்பாட்டு முறைகள்

உழவியல் முறைகள்:

  • தானிய வகையல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சி முறையை கடைபிடித்தல்

  • சரிவிகித  உர அளவை பின்பற்றவும்.  அதிகமான தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கவேண்டும்.

  • வயலைச் சுற்றிலும் உள்ள புல்வெளியை பராமரிக்கவேண்டும்

  • மிக அருகில் நடவு செய்வதை தவிர்க்கவேண்டும்

  • பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவேண்டும்

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

உயிரியல் முறைகள்:

  • நடவு செய்த 15 ஆம் நாளில் இருந்து டிரைகோகிராமா கைலோனிஸ்  என்ற முட்டை ஒட்டுண்ணியை @ 1 லட்சம்/எக்டர் என்ற அளவில் 7-10 நாட்கள் இடைவெளி விட்டு, 5 முதல் 6 முறை வயலில் வெளியிடவேண்டும்

  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் சார்ந்த உயிரியற் பூச்சிக் கொல்லிகளை @ 1 கிலோ  அல்லது 1 லிட்டர்/எக்டர் (டைபெல், டெல்பின், பையோடார்ட், துரிசைடு, பையோஸ்ப், ஹில் பிடிகே 7-10 நாட்கள் இடைவெளியில் மாலை நேரத்தில் தெளிக்கவேண்டும்.

இரசாயன முறைகள்:

  • மோனோகுரோட்டோபாஸ் 1.6 மில்லி, குளோர்பைரிபாஸ் 2.5 மில்லி அல்லது, குயினெல்பாஸ் 2.5 மில்லி அல்லது அசிபேட் 1 கிராம் அல்லது கார்பரில் 3 கிராம் அல்லது கார்டாப் ஹைடிரோகுளோரைடு 2 கிராம்/லிட்டர் போன்ற பூச்சிக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை 10 நாட்கள் இடைவெளியில், இருமுறை தெளிக்கவேண்டும்.  பின்னர் கார்டாப் ஹைடிரோகுளோரைடு 4 G 10 கிலோ/ஏக்கர் இடவேண்டும்.

  • 5% வேப்பங்கொட்டை கரைசல் அல்லது 0.5% வேப்பெண்ணெய் அல்லது பிற உயிரியற் பூச்சிக் கொல்லியை 300 பிபிஎம் @ 1.5 லிட்டர்/எக்டர் அல்லது 1500 பிபிஎம் 1.5 லிட்டர்/எக்டர் என்ற அளவில் தழைகளில் தெளிக்கவேண்டும்.

இயந்திர முறைகள்:

  • விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சிப் பொறி பொருத்தவேண்டும்.

  • வயலின் குறுக்கில் கயிறு போட்டு இழுத்து, இலைச் சுருள்களில் இருக்கும் புழுக்களை கீழே விழ வைக்கலாம்.

மேலே செல்க

 

4. வெட்டுப்புழு

i.பாதிப்பின் அறிகுறிகள்

புழுக்கள் நாற்றங்கால் பயிரை அதிகம் உண்கின்றன.  இலையின் சதைப் பகுதியை மட்டும் சுரண்டி உண்பதால்,  இலைகளின் நரம்புகள் மட்டும் தெரியும்.  இளம்புழுக்கள் இலைகளையும் தண்டையும் வெட்டாமல் உண்ணும்.  பிறகு பெரிதாகும் பொழுது இலைகளை வெட்டி உண்ணத் தொடங்கும்.  புழுக்கள் ராகிச் பயிரின் வேர் மற்றும் தழைகளை உண்பதற்கு இரவில் வெளியே வரும்.  பகல் நேரத்தில் மண்ணில் மறைந்து கொள்கின்றன.

 

ii.பூச்சியின் விபரம்

முட்டை: இளம் செடிகளின் அடிப்பாகத்தில் பழுப்பு நிறத்தில் உருண்டையான வடிவத்தில் முட்டைகளை கூட்டம் கூட்டமாக காணலாம்.

புழு: தடித்த, மென்மையான உடலுடன், பழுப்பு கலந்த பச்சை நிறத்தில் காணப்படும்.  இவற்றின் மேற்புறத்தில் வளைவான கோடுகளும், பக்கவாட்டில் மஞ்சள் நிற கோடுகளும் தெரியும். புழுக்காலம் 10-16 நாட்கள் ஆகும்.

கூட்டுப்புழு:  மண் கூடுகளில் கூட்டுபுழு உருவாகிறது. கூட்டுப்புழுவின் காலம் 7-11 நாட்கள் ஆகும்.

முதிர்பூச்சி: அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற பின் இறகுகளுடன் இருக்கும்.

 

iii.கட்டுப்பாட்டு முறைகள்

உழவியல் முறைகள்:

  • களை மற்றும் எஞ்சிய பயிர் கழிவுகளை அகற்றவேண்டும்.

  • பசுந்தாள் உரங்களை தவிர்த்து, மக்கிய தொழு உரம் இடவேண்டும்.  இதனால் பூச்சிகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.

  • நடவு பாத்திகளுக்கு அருகில் உணவுத் தொட்டிகள் அமைத்து பசியான பறவைகளின் வரவை அதிகப்படுத்தவேண்டும்.

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

உயிரியல் முறைகள்:

  • ஸ்டீனிமேரா கார்போகேப்சே என்ற பயனுள்ள நுாற்புழு அல்லது பூச்சியைத் தாக்கக்கூடிய பூஞ்சாணம் பியுவேரியா பேசியானா ஆகியவற்றை வெட்டுப் புழுக்கள் தோன்றும்  முதல் தருணத்திலேயே வயலில் விடவேண்டும். நுாற்புழுக்கள் புழுக்களின் உள்ளேயே முட்டையிட்டு புழுக்களைத் தாக்குகிறது.

  • நடவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் உமியுடன் பேசில்லஸ் துரிஞ்சென்சிஸை கலந்து நடவுப் பாத்திகளில் விட்டு இயற்கை வழியில் புழுக்களைக் கட்டுப்படுத்தவேண்டும்.

  • டிரைகோகிராமா குளவிகளை வாரம் ஒரு முறை மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக வெளியிட்டு வெட்டுக்கிளி முட்டைகளை அழிக்கவேண்டும்.

இரசாயன முறைகள்: எண்டோசல்பான் 35 EC @ 0.75 லி/எக்டர், கார்பரில் 50 WP @ 2.5 கிலோ/எக்டர், குளோர்பைரிபாஸ் 20 EC @ 2 லிட்டர்/எக்டர், பேசலோன் 35 EC @ 1.25 லிட்டர்/எக்டர் தெளிக்கவேண்டும்.

இயந்திர முறைகள்:

நடவு நேரத்தில் ராகி பயிரின் தண்டைச் சுற்றி அலுமினியம் சுருள்  அல்லது கார்போர்டு பேப்பர் வைத்து வெட்டுப் புழுக்கள் செடியை உண்பதைத் தவிர்க்கலாம். வெட்டுப் புழுக்களை சேகரித்து, அழிக்கவேண்டும்.

மேலே செல்க

 

5. துள்ளும் வண்டு


i.பாதிப்பின் அறிகுறிகள்

முதிர் வண்டு, இளம் செடிகளின் இலைகளைக் கடித்து ஓட்டைகளை உண்டாக்கும். நாற்றாகால் மற்றும் நடவு செய்யப்பட்ட இளஞ்செடிகளின் வீரியம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கும்.

 

ii.பூச்சியின் விபரம்

முதிர்ப்பூச்சி: வண்டுகள் அடர் ஊதா நிறத்தில், பெரிய பின் தொடைக் கண்டத்துடன் காணப்படும்.

 

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • நடவு வயலுக்கு அருகில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்தி புழுக்களுக்கு உணவில்லாமல் செய்து, பூச்சி வளர்ச்சியை தடை செய்யலாம்.

  • முந்தைய பயிரின் குப்பைகள் மற்றும் சருகுகளை அகற்றுவதால் வண்டுகள் குளிர் காலத்தில் குப்பைகளின் உள்ளே தஞ்சம் அடைவதைத் தவிர்க்கலாம்.

  • 10% பி.எச்.சி பூச்சி மருந்துத் துாள் இடலாம்.

  • துள்ளும் வண்டுக்கான பூச்சி கொல்லி மருந்து விதை நேர்த்தி: கார்போசல்பான் @ a.i./கிலோ விதை (3.88%) பூச்சி கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்ததில் பூச்சித் தாக்கத்தின் பாதிப்பு குறைந்து காணப்பட்டது.  அதேபோல், இமிடாகுளோப்ரிட் @  6 கிராம் மற்றும் 3 கிராம் a.i./ கிலோ விதை ( 4.66 மற்றும் 5.9%), தயாமீத்தாக்சாம் @ 3.5 a.i. /கிலோ விதை (6.13%) உபயோகப்படுத்தப்பட்டதில் பாதிப்பு குறைக்கப்பட்டது.

மேலே செல்க


6. கருப்பு கம்பளி புழு


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • புழுக்கள், இளம் இலைகளை உண்டு விடும். 

  • இலையின் பச்சை நிற  சதைப் பகுதியை சுரண்டி உண்ணும்.

  • இதனால்  இலைகள் பார்ப்பதற்கு  எலும்புக் கூடு போல தோன்றும்.

  • முடிவில் புழுக்கள் பயிரின் அனைத்து பகுதிகளையும் உண்டு, இலை நரம்புகள் மட்டும் எஞ்சி நிற்கும்

 

ii.பூச்சியின் விபரம்

முட்டை: செடிகளில் முட்டைகள் இடப்படுகின்றன.

புழு:
கருப்புத் தலையுடன் தடிமனாக இருக்கும்.  உடல் முழுவதும் முடிகள் இருக்கும்.

கூட்டுப்புழு:
மண்ணில் கூட்டுப்புழுவை உண்டாக்கும்.

முதிர் பூச்சி:
அந்துப்பூச்சி பெரியதாக, வெள்ளை நிறத்தில் காணப்படும்.  தலை, உடல் மற்றும் இறகுகளில் ஊதா நிறக் கோடுகள் காணப்படும்.


iii.கட்டுப்பாட்டு முறைகள்

களைகள் மற்றும் எஞ்சிய பயிர் கழிவுகளை அகற்றவேண்டும்.
       
பசுந்தாள் உரமிடுவதை தவிர்க்கவும்.  ஏன் எனில் பூச்சிகள் அவற்றில் முட்டை இடலாம்.  பதிலாக மக்கிய தொழு எரு இடவேண்டும்.
       
எண்டோசல்பான் 35 EC 2 மில்லி/லிட்டர், கார்பரில் 50 WP @ 4 கிராம்/லிட்டர், மீதோமைல் 40 WP @ 1.6 கிராம்/லிட்டர் தெளிக்கவேண்டும்.
       
மாலத்தியான் 5% @ 25 கிலோ/எக்டர் (அ) மீதைல் பாரத்தியான் 2% (அ) பென்வெலரேட் 4% துாள் இடவேண்டும்.

மேலே செல்க


7. வெட்டுக்கிளி


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • வெட்டுக்கிளியின் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகளும் அதிக அளவில் இலைகளை உண்ணும்.

  • இலைகளில் ஓட்டைகளை ஏற்படுத்தும். 

  • பாதிப்பின் நிலை தீவிரமடையும் பொழுது, இலைகள் உதிர்ந்து வயல் முழுவதும் மேயப்பட்டது போல தோற்றமளிக்கும்.

 

ii.பூச்சியின் விபரம்

முட்டை:  வெட்டுக்கிளிகள் மண்ணில் கொத்து கொத்தாக முட்டையிடும்.  நீளமான வளைவான மண் உறைகளிகளில் முட்டைகளை இடப்படுகின்றன.  வெள்ளை,மஞ்சள் பச்சை, அழுக்குநிறம் மற்றும் பல்வேறு பழுப்பு நிறத்தில் முட்டைகளைக் காணலாம்.

குஞ்சுகள்
:  புதிதாக பொறித்த குஞ்சுகள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  பிறகு சூரிய ஒளியில் வெளிப்படும் பொழுது, எடுப்பான நிறம் மற்றும் கோடுகளுடன் தோன்றும்.  வெட்டுக்கிளியின் குஞ்சுக்காலம் 30-50 நாட்கள் ஆகும்.

முதிர்பூச்சி:
  தடித்த, பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும்.

 

iii.கட்டுப்பாட்டு முறைகள்

உழவியல் முறைகள்:

  • அறுவடைக்குப்பின் நிலத்தை சுத்தமாக, நன்றாக உழுது விடுவதன் மூலம், வெட்டுக்கிளியின் முட்டைகள் அழிக்கலாம்.  முட்டைகள் மண்ணில் மேற்பரப்பிற்கு வருவதால் அவை உலர்ந்து காய்வதுடன், பறவைகள் மற்றும் பிற பூச்சிகள் சாப்பிடுவதற்கு ஏதுவாக உழவு அமைகிறது.

  • கவர்ச்சி பயிரிடுதல்

  • முன் பருவத்திலேயே விதைத்து அறுவடை செய்யவேண்டும்.

  • கோடையில் உழுது, பயிரிடாமல் வைக்கவேண்டும்

  • பயிர் சுழற்சி முறையை பின்பற்றவேண்டும்

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

உயிரியல் முறைகள்:

  • சிலந்திகள் அதிக அளவில் வெட்டுக்கிளி குஞ்சுகளையும், முதிர்ப்பூச்சிகளையும் உண்கின்றன

  • கொப்பு வண்டு, தரை வண்டு மற்றும் பாச்சைகள் வெட்டுக்கிளியின் முட்டைகளை உண்கின்றன

  • வெதுவெதுப்பான, ஈரப்பதமான சூழலில் எண்டமாப்தோரா கிரிலி பூஞ்சாணம் வெட்டுக்கிளியை பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

  • நோசிமா லோசஸ்டே என்ற ஒட்டுண்ணி, முட்டை எண்ணிக்கை மற்றும் பூச்சி நடமாட்டத்தைக் குறைத்து,  வெட்டுக்கிளி  எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.

இரசாயன முறைகள்: எண்டோசல்பான் 35 EC 400 மில்லி, கார்பரில் 50 WP 400 கிராம் தெளிக்கவேண்டும்.

மேலே செல்க

 

8. பச்சாடைப் பூச்சி


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • செடியின் தசைகளில் ஊசி போன்ற உறிஞ்சு குழலை செலுத்தி உண்ணும்.

  • துளையிடப்பட்ட இடத்தை உடனடியாக கண்டு கொள்ள முடியாது.

  • முதிர் பூச்சி மற்றும் இளம் குஞ்சுகள் (2-5 ஆம் நிலை) வரை அனைத்தும் செடி தசைகளை உறிஞ்சி உண்ணக் கூடியவை.

  • செடியின் சதைப்பற்றான பகுதிகளையும், புதிதாக உருவாகும் பூக்களையும் அதிகம் விரும்பி உண்ணக்கூடியவை.

  • உண்ட சில நேரத்திற்கு பிறகும், பயிரில் உண்ட காயம் வெளியே தெரியும்.

  • பூ மொட்டுகளை உறிஞ்சுவதால் அவை இளம் வயதிலேயே உதிர்ந்து விடும்.

 

ii.பூச்சியின் விபரம்

முட்டை: இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் 40-130 என்ற எண்ணிக்கையில் (சராசரியாக 70-75) கூட்டம் கூட்டமாக இடப்படும். முட்டை இடப்பட்டவுடன் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்.  4-5 நாட்களில் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்.  அதன் பிறகு ஒரு நாள் கழித்து சிவப்பு ஆரஞ்சு நிறத்திற்கு மாறும்.  5-8 நாட்களில் குஞ்சு பொறித்து விடும்.

குஞ்சுகள்: அடர் பழுப்பு நிறத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை (அ) மஞ்சள் நிற கோடுகளுடன் காணப்படும்.  குஞ்சுகளுக்கு இறக்கை இருக்காது.  ஒரு வகையான வாடை தரக்கூடிய சுரபிகள் இருக்கும்.

முதிர் பூச்சிகள்: முதிர்பூச்சி கேடயம் போன்று,   இஞ்ச் நீளம் மற்றும் 5/16 இஞ்ச் அகலத்துடன இருக்கும்.  ஆப்பிள் (அ) இளம் பச்சை நிறத்தில் பெரும்பாலும் காணப்படும்.  சில பூச்சிகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.  முதிர்பூச்சிகளின் ஆயுட்காலம் பல மாதங்கள் வரை இருக்கும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • பயிர் வயலுக்கு அருகில் உள்ள களையை கட்டுப்படுத்தவேண்டும்.

  • வயலில் கவர்ச்சிப் பயிரை வளர்த்து, பச்சாடை பூச்சிகளை இடம் பெயர்க்கவேண்டும்.

  • டீலோனோமஸ் பொடிசி, டீலோனோமஸ் உட்டாகென்சீஸ் ஆகிய இரண்டு குளவி முட்டை ஒட்டுண்ணி பயன்படுத்தி, பச்சாடை பூச்சி பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

  • சிலந்தி, எறும்பு போன்றவை முட்டை மற்றும் இளம் குஞ்சுகளை உண்ணும்.

மேலே செல்க

 

9. கதிர் நாவாய் புழு


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • கதிர்நாவாய் பூச்சி கதிர் பருவத்தில் பயிரை தாக்குகிறது

  • உருவாகும் கதிர் மணிகளை உண்டு கதிரினுள் உள்ள தானியங்களை அழிக்கிறது

  • கதிருக்குள் நுாலினால் வளை பிண்ணுகிறது

  • அடர்த்தியான கதிர்கள் அதிகம் பாதிக்கப்படும்.  தாக்கப்பட்ட கதிர்கள், வெற்றுத்தோலுடன் பதராக காணப்படும்

ii.பூச்சியின் விபரம்

முட்டை:  உருண்டையான, கண்ணாடி போன்ற வெள்ளை நிற முட்டைகள்  (6-24 எண்ணிக்கை) கூட்டமாக காணப்படும்.  ஆரஞ்சு மஞ்சள் நிற முடிகளால் மூடப்பட்டிருக்கும்

புழு: கம்பளி புழு  சிறியதாக, அடர் பழுப்பு நிறத்தில், மஞ்சள் வளையத்துடன் குறைவான முடிகளுடன் காணப்படும்.  மஞ்சள் வளையத்தில் ஆரஞ்சு சிவப்பு நிற கோடுகள் இருக்கும்.  புழுக்காலம் 15-40 நாட்கள் ஆகும்.

கூட்டுப்புழு: மண்ணில் கூட்டுப்புழு உருவாகிறது.  இதன் காலம் ஒரு மாதம் ஆகும்.

முதிர் பூச்சி: முதிர் பூச்சிகள் பழுப்பு நிறத்தில் அடர் செதில்களுடன் கூடிய முன் இறகுகளை கொண்டிருக்கும்.  பின் இறகுகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். 

iii.கட்டுப்பாட்டு முறைகள்

உழவியல் முறைகள்: ஊடுபயிரிடுதல், விதைப்பு காலம், இடைவெளி, நீர்/ஊட்டச்சத்து மேம்பாடு போன்ற உழவியல் கட்டுப்பாட்டு முறைகள், சில இடங்களில் பூச்சியை கட்டுப்படுத்தும்

இரசாயன முறைகள்: மாலத்தியான மற்றும் 0.1% கார்பரில் தெளிக்க வேண்டும்.

இயந்திர முறைகள்:

  • நள்ளிரவு வரை விளக்குப்பொறி வைத்து முதிர் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்

  • இனக்கவர்ச்சிப் பொறிகளை @ 12/எக்டர் என்ற அளவில் பொருத்தி, பூக்கும் பருவம் முதல் கதிர் முதிரு வரை கதிர் நாவாய் புழுவின் ஆண் அந்துப்பூச்சிகளை கவரலாம்.

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மேலே செல்க

 

10. கதிர் நாவாய்ப் பூச்சி


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • பூச்சிகள் பூக்கும் பருவத்திற்கு முன் தோன்றி, பால் பருவம் வரை இருக்கும்.

  • பால் பருவத்தில் கதிர் இருக்கும் பொழுது குஞ்சுகளும், முதிர் பூச்சிகளும் தானியத்தில் உள்ள சாற்றை உறிஞ்சி விடுகிறது.

  • கதிர்களில் அதிகமான அளவில் குஞ்சுகளும், முதிர்பூச்சிகளும் காணப்படும்.

  • இந்த தாக்கத்தினால் தானியத்தின் தரம் குறைவதோடு, பாதிக்கப்பட்ட தானியம் மனித உணவிற்கு பயன்படாமல் போகிறது.

  • பூச்சித்தாக்கம் தீவிரமடையும் பொழுது கதிர் பதராகி வீணாகிறது.

  • பூச்சியின் பாதிப்பு முளைப்புத் திறனை குறைப்பதோடு, தானியங்களை பூசணத் தாக்கத்திற்கு ஏதுவாக்குகிறது.

 

ii.பூச்சியின் விபரம்

முட்டை: கொம்பை மற்றும் மத்திய மலர் பிரிவுகளுள் நீல நிறத்தில், சிகார் வடிவத்தில் உள்ள முட்டை இடப்படுகிறது.

குஞ்சுகள்: மெலிதாக பச்சை நிறத்தில் இருக்கும்.

முதிர் பூச்சிகள்:  ஆண் பூச்சி பச்சை நிறத்தில் இருக்கும்.  பெண்பூச்சி பச்சை நிறத்தில், பழுப்பு  நிற விளிம்புகளுடன் காணப்படும்

iii.கட்டுப்பாட்டு முறைகள்

உழவியல் முறைகள்:

  • பருவத்திற்கு முன்னர் நடவு செய்தால் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

  • பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும்.

இரசாயன முறைகள்: கார்பரில் 50 SP @ 3 கிலோவை 500 லிட்டர் தண்ணீர்/எக்டர் அல்லது எண்டோசல்பான் 4 D  @ 20 கிலோ/எக்டர் மருந்தை கதிர்களின் மேல் இட வேண்டும்.

 

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மேலே செல்க

 

11. வேர் அசுவுணி


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • அசுவுணி செடியின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன.

  • தாக்கப்பட்ட செடிகள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறி, வளர்ச்சி குன்றிவிடும்.

  • ஆங்காங்கே செடிகள் திட்டுதிட்டாக, வாடி, காய்ந்து காணப்படும்.

  • பயிர்களில் தேன்துளி தத்துப்பூச்சியின் கழிவுப் பொருட்களும், எறும்புகளும் காணப்படும்.  புல்களிலும் இந்த அறிகுறி காணப்படும்.

  • குஞ்சுகளும், முதிர்ப்பூச்சிகளும் பயிரின் அடிப்பாகத்தை தாக்கி பயிர்களின் வேரில் உள்ள சாற்றை உறிஞ்சும் செடிகள் வலுவிழந்து வாடிவிடும்.

 

ii.பூச்சியின் விபரம்

முதிர்பூச்சி சிறிதாக, முட்டை வடிவத்தில் இருக்கும்.  இதன் நிறம், பச்சை நிறத்திலிருந்து பழுப்பு வெள்ளை, மஞ்சள், அடர் ஆரஞ்சு நிறம் என பரவி இருக்கும்.

முதிர் பூச்சி இரு வகைகளில் இருக்கும்.  இறகு உள்ளவை மற்றும் இறகு இல்லாதவை ஆகும்.  இறகு உள்ளவை 1.5-2.3 மி.மீ நீளத்துடன், இறகு இல்லாதவை 1.5-2.5 மி.மீ நீளத்துடன் இருக்கும்.  எல்லா முதிர் அசுவுணிகளும் பெண் இனமாகவே இருக்கும்.  குஞ்சுகள் உருண்டையாக, மங்கிய பழுப்பு  நிறத்தில் இருக்கும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • பாசன நீரில் குரூட் ஆயில் கலந்து விடவேண்டும்.

  • டைமெத்தோயேட் 30 EC பூச்சிக்கொல்லி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து வேர்ப்பகுதியை நனைத்து வேர் அசுவுணியைப் கட்டுப்படுத்தலாம்.

  • 10% பி.எச்.சி துாளை செடியின் அடிப்பகுதியில் துாவவேண்டும்.

  • டைமெக்ரான் 100 EC (200 மில்லி/எக்டர் - 1000 லிட்டர் தண்ணீா்) தெளிக்கவேண்டும்.

  • எண்டோசல்பான் 35 EC @ 1000 மில்ல/எக்டர் (அ) கார்பரில் 50 WP @ 1 கிலோ/எக்டர் (500 லிட்டர் கரைசல்/எக்டர்) தெளிக்கவேண்டும்.

 

12. ராகி தத்துப்பூச்சி


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் இலைகள் மற்றும் தண்டின் அடிப்பகுதியில் சாற்றை உறிஞ்சி விடும்.

  • இலைகள் மஞ்சளடைந்து செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.

  • கேழ்வரகு தேமல் வைரஸ் நோயை பரப்புகிறது.

 

ii.பூச்சியின் விபரம்

குஞ்சு: வெளிர் பச்சை நிறத்தில், கண்ணாடி போன்று இருக்கும்.  குறுக்காக நடந்து கொண்டிருக்கும்.  குஞ்சுக்காலம் 7-9 நாட்கள் ஆகும்.

முதிர் பூச்சி: சிறியதாக பழுப்பு நிறத்தில், உளி வடிவத்தில் குஞ்சுகள் காணப்படும்.  முதிர் பூச்சி 2-3 வாரங்கள் வரை உயிர் வாழும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

டைத்தோயேட் 30 EC @ 1.7 மில்லி/லிட்டர் (அ) பாஸ்பமிடான் 100 ணிசி 0.5 மில்லி/லிட்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 EC 2 மில்லி/லிட்டர் தெளிக்கவேண்டும்.

மேலே செல்க

 

13. வேர் வண்டுப்புழு


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • வளர்ந்த செடிகள் மடிந்து விடும்.  இலைகள் மற்றும் இளந்தண்டுகள் கடிக்கப்பட்டு இருக்கும்.

  • புழுவானது வேர் மற்றும் வேர் கிளைகளை உண்டு  செடிகளை அழித்துவிடும்.

  • முதிர் வண்டுகள் இலைகள் மற்றும் இளந்தண்டுகளைக் கடிக்கும்.  மண்ணிற்கு அடியில் ஒரு செடியில் இருந்து, மற்றொரு செடிக்கு நகர்ந்து செல்லும்.

ii.பூச்சியின் விபரம்

  • புழு: ‘சி’ வடிவத்தில், சதைப்பாக, வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். பயிலின் அடிப்பாகத்தில் புழுக்கள் காணப்படும்.

  • முதிர் வண்டு அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

உழவியல் முறைகள்:

  • கோடையில், ஆழமாக உழுக வேண்டும்.

  • தொழு உரம் வண்டுகளை கவரக்கூடியது என்பதால், நன்கு மக்கிய தொழு உரத்தை பயன்படுத்த வேண்டும்.

  • பயிர் வகைகள், பருத்தி போன்றவற்றுடன் பயிர் சுழற்சி செய்ய வேண்டும்

  • பூச்சித் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முன் விதைப்பு செய்ய வேண்டும்.

இயந்திர முறைகள்: வெள்ளை வண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்.

உயிரியல் முறைகள்: பிரக்கோனிட், தட்டான் பூச்சிகள், டிரைக்கோகிரம்மாட்டிட்ஸ், என்.பி.வி பச்சை மஸ்கார்டின் பூசணம் போன்ற உயிரினங்களை சேகரிக்க வேண்டும்.

மேலே செல்க

 

14. மஞ்சள் அசுவுணி


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • குஞ்சுகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் செடியின் சாற்றை உறிஞ்சும்.

  • இலைகள் மஞ்சள் நிறமாகி, வளர்ச்சி குன்றி விடும்.

  • செடிகள் திட்டுதிட்டாக, வாடி, காய்ந்து விடும்.

  • அசுவுணி தேன்துளி கழிவுப்பொருள் மற்றும் எறும்புகள் செடிகளில் இருக்கும்.

ii.பூச்சியின் விபரம்

முதிர்பூச்சி: பச்சை மஞ்சள் நிற அசுவுணி பூச்சிகள் இருக்கும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

மீதைல் டெமட்டான் 25 EC @ 20 மில்லி/எக்டர் (அ) டைமெத்தோயேட் 30 EC @  20 மில்லி/எக்டர் தெளிக்க வேண்டும். (10 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிக அளவு கொண்ட தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

மேலே செல்க

 

15. பழுப்பு நிற அசுவுணி


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • முதிர் பூச்சிகள் மற்றும் குஞ்சுகளும்  பயிரின் இளம் தண்டிலும், இலையின் அடிப்பாகத்திலும் காணப்படும்

  • செடியின் சாற்றை உறிஞ்சி, பயிரின் வீரியத்தை அசுவுணி குறைக்கிறது

  •  இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன.

  • அசுவுணி தேன் துளி போன்ற கழிவுப்பொருளை வெளியிடுவதால், இது எறும்பு மற்றும் கரும்புகை பூசணம் உருவாக உணவுப் பொருளாக அமைகிறது.

  • தாக்கம் தீவிரமடையும் பொழுது வளர்ச்சி குன்றி, செடிகள் வாடி, காய்ந்து விடுகிறது. (ஆங்காங்கே திட்டுதிட்டாக).

ii.பூச்சியின் விபரம்

முதிர்பூச்சி: பழுப்பு நிறத்தில் காணப்படும். 

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • கோடை உழவு செய்யவேண்டும்

  • எதிர்ப்புதிறன் கொண்ட இரகத்தை உபயோகிப்பது

  • சரியான தருணத்தில் விதைப்பது

  • பயறு, சோளம் ஆகியவற்றுடன் ஊடுபயிர் செய்வது

  • ஆரோக்கியமான நாற்றை உபயோகிப்பது

  • 0.1% டைமெத்தோயேட் 30 EC @ 20 மில்லி /எக்டர் (அ) மிதைல் டெமட்டான் 25 EC@  20 மில்லி /எக்டர் தெளிக்கவேண்டும்.

மேலே செல்க

 

16. கூன்வண்டு


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • இளம் கூண் வண்டுப் புழு ராகி பயிரின் வேர்களை உண்ணும்.

  • இலைகள் ஏணி போல வெட்டப்பட்டிருக்கும். இலை ஓரங்கள் கடிக்கப்பட்டு செடிகள் திட்டுதிட்டாக வாடியிருக்கும்.

  • செடிகளை இழுத்தால் உடனடியாக வந்துவிடும். கூண் வண்டுப்புழு வேர்களை உண்ணும்.

  • முதிர் வண்டுகள் இலைகளை உண்டுவிடும்.

 

ii.பூச்சியின் விபரம்

முட்டை: முட்டைகள் சிறியதாக, முட்டை வடிவத்தில்,பழுப்பு நிறத்தில் காணப்படும்

புழு: ‘சி’ வடிவத்தில், பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில், பழுப்பு நிறத் தலையுடன் கால் இல்லாமல் காணப்படும்.

கூட்டுப்புழு: பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில் முதிர் வண்டுகள் போல இருக்கும்.  மண் கூடுகளில் கூட்டுப்புழுவாக மாறும் .

முதிர்வண்டு: வெள்ளை கலந்த சாம்பல் நிறத்தில், மேல் புறத்தில் ஆங்காங்கே புள்ளிகளுடன் இருக்கும்.  முகம் சிறிதாக, நான்கு பாகத்துடன், முன்பக்கத்தில் அகன்று இருக்கும்.  உணர் கொம்புகள் வளைந்து காணப்படும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

அடிக்கடி  களை வெட்டி, இடையுழவு செய்து, கூண் வண்டு புழுக்களை அழிக்கவேண்டும்.

 

 

Disease


  1. குலைநோய்

  2. நாற்று கருகல் நோய்

  3. வாடல் நோய்

  4. கரிப்பூட்டை நோய்

  5. அடிச்சாம்பல் நோய்

  6. தேமல் நோய்

  7. பல வர்ண இலை நோய்

  8. நுண்ணுயிர் இலைப்புள்ளி நோய்

மேலே செல்க

 

1. குலைநோய்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • நாற்று பருவம் முதல் கதிர் பருவம் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கம் ஏற்படலாம்.

  • விதை முளைத்த இரண்டு வாரத்திற்கு பின் நோய் தாக்கத் துவங்கும்.  மிக விரைவாக நாற்றங்கால் முழுவதும் பரவுவதோடு நடவு வயலிலும் பரவும்.

  • சிறிய வட்டமான நீண்ட புள்ளிகள் இலைகளில் முதலில் தோன்றும்.  பின்னர் நீண்ட உருண்டையான பிறை வடிவ புள்ளிகளாக நாற்றங்கால் பருவத்தில் தோன்றும்.  இளம் இலைகள் நாற்றங்காலிலேயே முழுவதும் காய்ந்துவிடும்.

  • நடவு வயலில் நீண்ட உருண்டையான புள்ளிகள் தோன்றும்.  பின்னர் அவை ஒன்றாக இணைந்து, இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.

  • அதிக பட்சமான பாதிப்பு கழுத்துப் பகுதிக்கு ஏற்படும்.  கழுத்துப் பகுதி, கருப்பாகி பின்னர் சுருங்கிவிடும்.

  • கதிரின் அடிப்பகுதியில் நோய் தாக்கம் ஏற்படுகிறது.  ராகி கதிரின் தொகுப்புகளுக்கும் பரவி, பின்னர் கதிர் தண்டில் இருந்து ஒடிந்து விடும்.  பாதிப்படைந்த பகுதிகள் பழுப்பு நிறத்தில் மாறி, கதிர் பதராகி பின் சுருங்கிய தானியங்களே உருவாகும்.

ii.நோய்க் காரணியின் விபரம்

  • பூசண இழை வளர்ச்சி செல்களுக்குள்ளும் செல்களுக்கு இடையிலும் காணப்படும்.

  • ஈரப்பதம் உள்ள சூழலில் உருண்டையான புள்ளியின்  நடுவிலிருந்து பல கொனிடியாவும், கொனிடிய தாங்கிகளும் காணப்படும். இதன் விளைவாக புள்ளி பார்ப்பதற்கு புகைமூட்டத்துடன் காணப்படும்

  • இலைத்துளைகள் அல்லது வெளிப்புற செல்கள் வாயிலாக கொனிடியத்தாங்கிகள் வெளியே வரும். இவை கிளைகளுடன் அடர் நிறத்தில் காணப்படும்

  • கொனிடியத்தாங்கிகளின் நுனியில் கொனிடியா தோன்றும்.

  • கொனிடியா 3 செல்களுடன், நிறமற்று, தடுப்புகளுடன் இருக்கும்.

  • கொனிடியா முளைப்பு குழாய்களுடன் முளைத்து இலைகளை தாக்கி பின்னர் இலைத்துளைகள் அல்லது வெளிப்புற செல்கள் வழியாக உதிர்ந்து விடும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • நோயற்ற விதைகளை பயன்படுத்தவேண்டும்

  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட கோ (ஆர் ஏ) (14) பையூர் (ஆர்.ஏ) -2, ஜி.பி.யு-28, ஜி.பி.யு-456, ஜி.பி.யு-48, லி-5 போன்ற இரகங்களை பயிர் செய்யவேண்டும்.

  • முறையான இடைவெளி மற்றும்  நடவு முறைகளை பின்பற்றவேண்டும்.

  • முன் விதைப்பு செய்து நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம்

  • சூடோமோனாஸ் 2 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.  முதல் அறிகுறி தென்பட்டவுடன் உடனடியாகத் தெளிக்கவேண்டும்.  பின்னர் பூப்புப் பருவத்தில் 15 நாட்கள் இடைவெளியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக தெளிக்கவேண்டும்.

 

 

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  • விதைகளை சூடோமோனாஸ் புலோரசென்ஸ் கொண்டு @ 6 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.  சீமைக் கருவேல் (புரோசோபிஸ் ஜிலிபுளோரா) இலை கரைசல் (10%), ஐபோமியா கார்னியர் இலைக் கரைசல் (10%) தெளிக்கவேண்டும்.

  • ஆரியோபஞ்சின் (100 பி.பி.எம்) கரைசலை 50% கதிர் வெளிவந்தவுடன் முதலில் தெளிக்கவேண்டும்.  பின்னர் 10 நாட்கள் கழித்து சூடோமோனாஸ் (2 கிராம்/லிட்டர் தண்ணீர்) தெளிக்கவேண்டும்.

  • கார்பன்டசிம் @ 2 கிராம்/கிலோ விதை கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

  • உப்புத் தண்ணீர் மற்றும் மாட்டுக் கோமியத்துடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.

  • விதைத்த 10-12 நாட்களுக்கு பிறகு, 0.1% கார்பன்டசிம் மருந்தை நாற்றங்காலில் தெளிக்கவேண்டும்.

  • நடவு செய்த 20-25 நாட்கள் மற்றும் 40-45 நாட்களுக்கு பிறகு மறுமுறை தெளிக்கவேண்டும்.

  • அக்ரோசன் ஜி.எண் (அ) செரிசன்  2.5 கிராம்/கிலோ விதை (அ) டிரைகுளோசோல் @ 1 கிராம்/கிலோ விதை கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

  • 50% கதிர் பூப்படைந்தவுடன் சாஃப் 0.2 சதம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.  10 நாட்கள் கழித்து பிறகு வேப்பம் விதை சார்ந்த கரைசலை தெளித்து கழுத்து மற்றும் கதிர் குலைநோயை கட்டுப்படுத்தலாம்.

  • நடவு செய்யும்போது பாதிக்கப்பட்ட இலை நுனிகளை வெட்டிவிட்டு பிறகு, இலை மற்றும் தண்டுப் பகுதியை போர்டோ கலவையில் நனைத்து நடவு செய்யவேண்டும்.

மேலே செல்க

 

2. நாற்று கருகல் நோய்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • ஆண்டு முழுவதும் தொடர் மழை பெய்யும் வருடங்களில் அதிகமான நோய் தாக்கம் இருக்கும்.  ராகி செடியின் ஆயுட்காலம் முழுவதும் கருகல் நோய் வரும் என்பதால், பயிரின் அனைத்து பாகங்களும் நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

  • நாற்று மற்றும் பயிர் பருவம் என இரு காலங்களிலும் நோய்க் கிருமி தாக்கும்.

  • சிறிய, முட்டை வடிவமான இளம் பழுப்பு நிற புள்ளிகள், இளம் இலைகளில் காணப்பட்டு, பின்னர் அடர் பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும்.

  • புள்ளிகள் அனைத்தும் இணைந்து இலைகளில் பெரிய கருகல் புள்ளியாக மாறிவிடும்.  பாதிப்படைந்த இலைகள் கருகி, முடிவில்  நாற்றுகள் கருகிவிடும்.

  • வளர்ந்த செடிகளில் நீண்ட அகன்ற அடர் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.

  • பழுப்பு அல்லது அடர் பழுப்பு நிறப் மாற்றுப்புள்ளிகள் கழுத்துப்பகுதிகளில் தோன்றும்.  இதனால் கழுத்துத் தசைப் பகுதிகள் பலமிழந்து போகும்.  கதிர்களின் காம்பு உடைந்து செடியில் கதிர்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.

  • நாற்றங்காலில் நோய் தாக்கும் போது நாற்றழுகல் ஏற்படுகிறது. அதே சமயம் வளர்ந்த செடிகளைத் தாக்கும் பொழுது கழுத்துப் பகுதி பாதிப்படைந்து, கதிர் பதராவதல், தானிய மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

  • இந்நோய் விதைமூலம் தோன்றக் கூடியதால் முதல் நிலை நோய் தாக்கம் விதையினால் ஏற்படுகிறது.

  • இரண்டாம் நிலை நோய் தாக்கம், காற்று வழிக் கொனிடியா, எஞ்சிய நோய் தாக்கப்பட்ட செடி பகுதிகள், வைக்கோல் மூலம் பரவுகிறது.

ii.நோய்க் காரணியின் விபரம்

  • பூசண இழை வளர்ச்சி செல்களுக்குள்ளும் செல்களுக்கு இடையிலும் காணப்படும்.  அவை தடுப்புகளுடன் இளம் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

  • கொனிடியா நேராகவும் (அ) வளைந்தும் தடுப்புகளுடன், அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.  கொனிடியத்தாங்கிகளின் நுனியில் கொனிடியா தோன்றும்

  • கொனிடியத்தாங்கிகள் கெட்டியான சுவருடன் உருண்டையாக, நேராகவோ (அ) வளைந்தோ, இளம்பச்சை நிறத்தில் 3-10 தடுப்புகளுடன் காணப்படும்.

  • பூசண வித்துகள் இலைத் துளைகள் அல்லது எப்பிடெர்ம் செல்கள் வழியாக முளைக்கும்.

  • ஒரு கொனிடியத்தாங்கி 11 பூசண வித்துகளை உருவாக்கலாம்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

உழவியல் முறைகள்: நோய் தாக்கம் ஏற்பட்ட செடிகளை கண்டவுடன் உடனடியாக பிடுங்கி அழித்து விடவேண்டும்.

இராசாயன முறைகள்:

  • கேப்டான் (அ) திரம் @ 4 கிராம்/கிலோ விதை கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

  • மேன்கோசெப் @ 1.2 கிலோ/எக்டர் தெளிக்கவேண்டும்.

  • 1% போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு (அ) டைத்தேன் Z -78 (2 கிராம்/எக்டர்/லிட்டர் தண்ணீர்) தெளிக்கவேண்டும்.

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மேலே செல்க

 

3. வாடல் நோய்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட செடிகள் பச்சை நிறத்தில் வளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும்

  • மண்ணின் மேற்புறத்திற்கு சற்று மேலே உள்ள தண்டின் அடிப்பகுதியில் நோய் தாக்கும்.

  • பூஞ்சாணம் முதலில் தண்டின் அடிப்பகுதியைத் தாக்கி, பின்னர் இலை உறைக்கும், தண்டு பகுதிக்கும் பரவுகிறது.  பாதிக்கப்பட்ட பகுதி மென்மையாகி அடர் பழுப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது.

  • இலைகள் விறைப்பு தன்மையை இழந்து வாடி, காய்ந்து போகிறது. செடிகள் முதிர்வதற்கு முன்னே காய்ந்து விடும்

  • அடித்தண்டு பகுதி மற்றும் கணுப் பகுதிகளில் வெள்ளை நிற பூஞ்சாண இழைகள் தோன்றும்.

  • சிறிய உருண்டையான, அடர் பழுப்பு நிற பூசண இழை முடிச்சுக்களை தண்டில் மேல் காணலாம்.

ii.நோய்க் காரணியின் விபரம்

  • பூஞ்சாண இழைகள் செல்களுக்குள்ளும் செல்களுக்கு இடையிலும் உற்பத்தியாகி ஊன் வழங்கும் சதைகளை ஆக்கிரமிக்கின்றன.

  • ஓம்புயிர் மற்றும் வளர்ப்பு ஊடகம் ஆகிய இரண்டிலும் பூஞ்சாண இழை வித்துக்களை உருவாக்கலாம்

  • பூஞ்சாணம் அடித்தள வித்துக்களை பெற்றுள்ளது

  • அடித்தள வித்துக்களில் 2-4 ஸ்டெரிக்மேட்டா இருக்கும்

  • பெசிடியோஸ்போரீஸ்  நீள் வட்டமாக, நிறமற்று மென்மையாக இருக்கும்

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • செடிகளை சுகாதாரமாகவும், வீரியத்துடனும் பராமரிக்கவேண்டும்

  • நல்ல வடிகால் வசதி தேவை

  • விதைப்பதற்கு முன் ஆழமாக உழவேண்டும்

  • தானிய வகையல்லாத பயிருடன் பயிர் சுழற்சி மேற்கொள்ளவேண்டும்

  • நோய் தாக்கப்பட்ட இடத்தில் காப்பர்ஆக்ஸிகுளோரைடு @ 1.25% நனைக்கவேண்டும்

மேலே செல்க

 

4. கரிப்பூட்டை நோய்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • கதிரில் மணிகள் உருவாகும் போது இந்நோய் தாக்கம் ஏற்படுத்தும்

  • கரிப்பூட்டை மணிகள் கதிரின் ஆங்காங்கே நிறைந்திருக்கும்

  • பாதிக்கப்பட்ட தானிய மணிகள் புற வீக்கத்துடன் தோன்றும்.  இவை சாதாரண மணிகளை விட பெரிதாகத் தோன்றும்.

  • நோய் தாக்கிய முதல் தருணத்தில் பச்சையான வீங்கிய கதிர் மணிகளை காணலாம்.

  • பச்சை நிற பூஞ்சாண வித்துக் குவியல் இளஞ்சிவப்பு பச்சை நிறத்தில் மாறி, இறுதியாக அடர்த்தியான கருப்பு நிறத்தில் மாறிவிடும்

 

ii.நோய்க் காரணியின் விபரம்

  • பூசண வித்துக்கள் உருண்டையாகவும், 7-11 மைக்ரான் விட்டத்துடன் இருக்கும்.

  • மேற்புற வித்துக்கள் அடர்த்தியான ஆழத்துடன் சொறசொறப்பான மேற்பரப்புடன் காணப்படும்

  • பூசண வித்துக்கள் நீரில் எளிதாக முளைத்து தடுப்புடன் கூடிய பூஞ்சாண இழைகளை உற்பத்தி செய்யும்

  • பூசண வித்துக்கள் நுனியிலும், பக்கவாட்டிலும் உற்பத்தியாகும்

iii.கட்டுப்பாட்டு முறைகள்

நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை பயன்படுத்த வேண்டும்.

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மேலே செல்க

 

5. அடிச்சாம்பல் நோய்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • தாக்கப்பட்ட செடிகள் குட்டையாக, குறுகிய இடைக்கணுக்களுடன் இருக்கும்.

  • இலைகள் மிக அருகில் தோன்றுவதால் கொத்து போல தோன்றும்.

  • இலைகள் வெளிர் பச்சை நிறமாக மாறிவிடும்.

  • கதிர்களில் அறிகுறிகள் நன்றாகத் தெரியும்.  இயல்பான நிலையில் இருந்து மாறுபட்ட உருமாறிய கதிர்க்கிளை கொண்டிருக்கும்.

  • கதிர் பார்ப்பதற்கு “பிரஷ்” போலத் தோன்றும்.

ii.நோய்க் காரணியின் விபரம்

  • தாக்கப்பட்ட செடிகளின் தண்டு, இலை மற்றும் அடித்தண்டுகளில் பூசண இழைவளர்ச்சி ஊடுருவிக் கிடக்கும்.

  • சில கணுக்குருத்துக்கள் மட்டும் நோய் தாக்கத்திலிருந்து தப்பி, பூசண இழை வளர்ச்சியில்லாத, சுகாதாரமான துார்களை தோற்றுவிக்கும்.  பூசண இழைவளர்ச்சி வேர்களுக்கு பரவுவதில்லை.

  • தடுப்பில்லாத, பல உட்கருவுடைய, உயிர்கணுக்களுக்கு  இடையே பூசண இழைகளை காணலாம்.  பூசண இழைகள் காற்று குழாயுடன் இணைந்து  கிருமியை இலை உறைகளுக்கு எடுத்துச் செல்லும்.

  • பூசண இழைகள் பல கிளைகளுடன் தோன்றி, காற்றுக் குழாய் திசுகளுக்கு சென்றுவிடும்.  மேல் புற இலைகளின் இலை உறைகளில் அதிகம் தோன்றும்.

  • காற்றுக் குழாய்களுடன் முதலில் இணைந்து, பிறகு இலைப்பகுதிகளில் பூசண இழை வளர்ச்சி அதிகமாகக் காணப்படும்.

  • வித்துப்பை தாங்கிய பூசண இழை, இலைத் துளைகள் வழியாக வெளியே வரும்.  ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட எலுமிச்சை நிற வித்துப் பைகள் தோன்றும்.

  • வித்துப்பைகள் வேகமாக முதிர்ச்சி அடைந்து, 50 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்கும் வித்துக்களை வெளியிடும்.

  • வித்துக்கள் முட்டை வடிவத்தில் இருக்கும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • பாதிக்கப்பட்ட செடிகளை எரித்து, அழிக்க வேண்டும்.

  • வயலைச் சுத்தமாக வைக்கவேண்டும்.

  • பாதிப்பு தீவிரமடையும் பொழுது, பயிருக்கு டைத்தேன், வி-45 நோய்க் கொல்லிகளை 2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

மேலே செல்க

 

6. தேமல் நோய்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • பயிர் வளர்ச்சியின் அனைத்து பருவங்களிலும் நோய்த் தாக்கம் ஏற்படும்.  நடவு செய்த 4-6 வாரங்களில் நோய்த்தாக்கம் அதிகமாகத் தென்படும்.

  • பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாவதே முதல் அறிகுறியாகும்.  பின்னர், தேமல் அறிகுறி தோன்றி, பயிர்கள் வளர்ச்சி குன்றிவிடும்.

  • செடி முழுவதும் வெளிரி, குட்டையாகி மலட்டு தன்மையாகிவிடும்.

  • பாதிப்படைந்த செடிகள் அவ்வளவாக கதிர் பருவத்தை அடைவதில்லை.  அப்படி வந்தாலும் பதரான கதிர்களே உருவாகும்.

  • அழுகல் நோயில் தோன்றுவது போல, அடித்தண்டில் அடர் பழுப்பு நிற புள்ளிகளை கவனமாக உற்றுப் பார்க்கும் பொழுது காணலாம்.  மண்ணின் தளத்திற்கு மேல் இடைநிலை வேர் உற்பத்தியிருக்கும்.  தண்டின் வெடித்த பாகங்களில் பூசணம் காணப்படும்.

  • நோய் தீவிரமாகும் பொழுது செடிகள் முதிர்வுக்கு முன்பே வாடிவிடும்.  பாதிக்கப்பட்ட பயிரை துாரத்தில் இருந்தே கண்டுபிடித்து விடலாம்.

  • நோய் தாக்கத்தின் போது பயிரின் வயதைப் பொறுத்து, 100% வரை தானிய இழப்பு ஏற்படக்கூடும்.

  • பாசனப் பயிரில் வறண்ட வெயிலும், வறட்சியான சூழலும், நோய்த் தாக்கத்திற்கு ஏதுவாக இருக்கும்.

ii.நோய்க் காரணியின் விபரம்

கரும்பு தேமல் வைரஸ் மற்றும் மக்காச் சோள குட்டை தேமல் வைரஸ் கிருமிகள், ராகி பயிரில் தேமல் நோயை ஏற்படுத்தக் கூடும்.

வைரான்கள் புரதக் கூட்டுடன் இருக்கும்.  உறை இருக்காது.  புரதக் கூடு நீண்டு, சுருள் பக்க ஒற்றுமையுடன் இருக்கும்.  புரதக் கூடு நுால் இழையாக, 730-755 நே.மீ நீளம் மற்றும் 13 நே.மீ அகலத்துடன் இருக்கும்.  ஆக்சியல் கெனால் தெரியாது.  அடிப்படை சுருளை மட்டும் காணமுடியும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • பாதிக்கப்ட்ட செடிகளை அகற்ற வேண்டும்.

  • பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்.

  • அதிக அளவிலான மணிச்சத்து உரங்கள் இட்டும், இருவாரத்திற்கு ஒருமுறை, பூசணக் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லி கலந்து தெளித்தும் நோயின் தீவிரத்தை குறைக்க முடியும்.

மேலே செல்க

 

7. பல வர்ண இலை நோய்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • விதைப்பு செய்த 45 நாட்களில் பல வர்ண இலை நோய் மேல் இலைகளில் மஞ்சள் புள்ளிகள் போல தோன்றும்.

  • பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி, வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும்.

  • புள்ளிகள் இணைந்து கடைசியாக கோடுகள் போல தோன்றும்.

  • பாதிப்பு தீவிரமடையும் பொழுது செடிகள் முழுவதும் மஞ்சளாக மாறும்.

  • நோய் தாக்கப்பட்ட செடிகளில் அதிக அளவிலான கணுக்கிளைகளும், கதிர் உற்பத்தி செய்ய முடியாத துார்களும் தோன்றும்.

  • நோய் தாக்கத்தின் முதல் மற்றும் கடைசி கட்டங்களில் வெளிவரும் கதிரில், மணிகள் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஆங்காங்கே இருக்கும்.

  • இலைத் தத்துப் பூச்சிகள், சிக்காடுலினா பைபங்டெல்லா மற்றும் சிக்காடுலினா சினைய் இந்நோயினை பரப்பும் பூச்சிகள் ஆகும்.

ii.நோய்க் காரணியின் விபரம்

நோய் காரணியான  நியுகிளியோகேப்டோ வைரஸ்(அ) உருளைக் கிழங்கு மஞ்சள் குட்டை வைரஸ் உருளை வடிவத்தில் காணப்படும்.  380 x 75 நே.மீ என்ற அளவில் இருக்கும்.  இதன் மூடப்பட்ட நீளம் 178-224 நே.மீ, அகலம் 59-76 நே.மீ ஆகும்.  இதன் ஆக்சியல் குழாய் தெளிவாக 8 நே.மீ விட்டத்தில் காணப்படும்.

iii.கட்டுப்பாட்டு முறைகள்

  • பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றவேண்டும்.

  • அறிகுறி தென்பட்டவுடனேயே மிதைல் டெமட்டான் (அ) மோனோகுரோட்டோபாஸ் 500 மில்லி/எக்டர் என்ற அளவில் 20 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்து நோய் பரப்பும் பூச்சியைக் கட்டுப்படுத்தவேண்டும்.

மேலே செல்க

 

8. நுண்ணுயிர் இலைப்புள்ளி நோய்


i.பாதிப்பின் அறிகுறிகள்

  • இலைகளில் அறிகுறிகள் தோன்றும்.  வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.  புள்ளிகள் நீண்டு  இலை நரம்பு வரை பரவும்.

  • முடிவில் பழுப்பு நிறத்திற்கு மாறும்.  நோய் தீவிரமடையும் பொழுது இலைகள் உதிர்ந்து விடும்.

  • சில நேரங்களில், கதிர்க் காம்பில் கீறல்கள் தோன்றும்.

ii.நோய்க் காரணியின் விபரம்

இந்த நோய் நுண்ணுயிரி கம்பி வடிவத்தில் இருக்கும்.  நுனியில் ஒரு புற இழையுடன் காணப்படும். 

iii.கட்டுப்பாட்டு முறைகள்
நல்ல ஆரோக்கியமான மற்றும் வீரியமுள்ள விதைகளை நடவிற்கு பயன்படுத்தவேண்டும்.

மேலே செல்க

காட்சியகம்