முன்னுரை
சுய தேவைக்கான வேளாண்மைக்காக மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் ராகிப் பயிருக்கு குறைவான ஊட்டச்சத்து தேவை. இதன் மகசூலும் குறைவாகவே உள்ளது. எனினும் நல்ல மண் வளம் உள்ள பகுதிகளில், அதிக மகசூல் பெற அதிக அளவில் ஊட்டச்சத்துகள் தேவை. தானிய மற்றும் வைக்கோல் உற்பத்தி திறனைப் பொறுத்து ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. விவசாயிகளின் சுய தேவைக்கான வேளாண்மை முறையில், வெளியுரம் மற்றும் தொழு உரம் இடாமல், சாகுபடி செய்யப்படும் ராகிப் பயிரில் ஒரு எக்டருக்கு 0.6 - 0.8 டன் மகசூல் கிடைக்கிறது.
தழைச்சத்து இடுவதன் மூலம் தானிய உற்பத்தி அதிகரிக்கிறது. மானாவாரியாக பயிர் செய்யப்படும் மத்திய கால இரகங்களுக்கு ஒரு எக்டருக்கு 60 கிலோ தழைச்சத்து இடப்படும். நீண்ட கால இரகங்களுக்கு ஒரு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்து இடப்படும். பாசனப் பயிருக்கு ஒரு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்து என அதிகமான தழைச்சத்து தேவை. கூடுதலாக ஒரு எக்டருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம் இடப்படுகிறது. தழைச்சத்து உரங்களுடன் சேர்த்து, ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மூலம், 7-12 டன்/எக்டர் தொழு உரம் பரிந்துரை செய்யப்படுகிறது.
பயிரின் வளர்ச்சி ஊட்டச்சத்தைச் சார்ந்துள்ளது. பயிரின் வளர்ச்சிக்கு, பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் ஆகிய இரண்டும் தேவை.
பயிருக்கு அதிக அளவில் தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டங்கள் ஆகும். இவற்றில் ஏதாவது ஒன்று மண்ணில் குறைவாக இருந்தால், அவற்றை அதிக அளவில் மண்ணில் இட வேண்டும்.
தழைச்சத்து (N) மணிச்சத்து (P) மற்றும் சாம்பல் சத்து (K) ஆகியன “முதன் நிலை பேரூட்டங்கள்” ஆகும். இவை தழை, சாம்பல் மற்றும் மணிச்சத்து உரங்களின் அடிப்படை ஆகும். சுண்ணாம்புச் சத்து (Ca) மெக்னீசியம் (Mg) மற்றும் கந்தகம் (S) ஆகியன “இரண்டாம் நிலை பேரூட்டங்கள்” ஆகும்
சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்துகள், நுண்ணூட்டச் சத்துகள் ஆகும். சிறிய அளவில் தேவை என்றாலும், கேழ்வரகுப் பயிரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நுண்ணூட்டங்களும் தேவை. அவை இரும்புச்சத்து (Fe) , மான்கனிசு (Mn), துத்தநாகம் (Zn), காப்பர் (Cu), மாலிப்டினம் (Mo), மற்றும் போரான் (B).
ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகளை பல்வேறு உரங்கள் வாயிலாக சரி செய்யலாம். இந்த உரத்தை அடியுரமாகவோ (அ) தழைகளில் தெளித்தோ (நுண்ணூட்டங்களுக்கு) செலுத்தலாம்
ராகியின் உற்பத்தித் திறனில் தழைச்சத்திற்கு பெரிய பங்கு உண்டு.
இலைகளுக்கு பச்சைநிறத்தை கொடுப்பதோடு ஒளிச்சேர்க்கைக்கும் தழைச்சத்து அவசியம்.
தழை வளர்ச்சிப் பருவத்தில் வேகமாக செடி வளர்வதற்கும், அதிகத் தூர்கள் உருவாகுவதற்கும், கதிர் பூட்டை வாங்கும் காலத்தில் நல்ல எடையுள்ள கதிர் மணிகள் உருவாவதற்கும் தழைச்சத்து தேவை.
அதிகமான தழைச்சத்து இட்டால் பயிர்களில் சாய்வு ஏற்படும்.
தழை வளர்ச்சிப் பருவத்திற்கும், கதிர் வெளியே வரும் தருணத்திற்கும் தழைச்சத்து மிகவும் அவசியம்
உரங்கள் மூலமாகவும் காற்றில் இருந்தும் தழைச்சத்து கிடைக்கிறது. (பயிர்கள் காற்றுவெளியில் இருந்து தழைச்சத்தை பெறுகிறது. தண்ணீர் மற்றும் மழை நீரில் இருந்து சிறிதளவு தழைச்சத்து கிடைக்கிறது)
தொழுவுரம், பசுந்தாள் உரம், ஆமணக்கு, புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, யூரியா, டைஅமோனியம் பாஸ்போர்ட், அமோனியம் நைட்ரேட், அமோனியம் சல்பேட் போன்றவை தழைச்சத்து ஆதாரங்கள் ஆகும்.
குறைபாட்டு அறிகுறிகள்
முதிர்ந்த இலைகள் இளம் பச்சை நிறத்திற்கு மாறிவிடும். பின இலைகள் வெளிர் மஞ்சளாகிவிடும்.
பற்றாக்குறை தீவிரமடையும் பொழுது இலைகள் காய்ந்துவிடும்.
இளம் இலைகள் பச்சையாக இருக்கும். பிற குறைபாடு உள்ள இலைகள், மெலிதாக, குட்டையாக எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
வயல் முழுவதும் மஞ்சள் நிறமாக குட்டையான, வளர்ச்சி குன்றிய செடிகளுடன் காணப்படும்.
தழைச்சத்தின் தேவை அதிகமாக இருக்கும் காலங்களிலும், தூர்பிடிப்பு மற்றும் பூப்பு தருணத்திலும், தழைச்சத்துக் குறைபாடு அதிக அளவில் தோன்றும்.
நிவர்த்தி:
தேவையாக, சரியான அளவு உரமிடவேண்டும்.
இயற்கை உரங்களான தொழுஉரம் ( 2 டன்/எக்டர்), பயிர்கழிவுகள், மக்கிய குப்பை போன்றவற்றை இடவேண்டும்.
பரிந்துரை செய்யப்பட்ட உர அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும், மானாவாரி பயிருக்கு, கர்நாடகவில் 50 கிலோ தழைச்சத்தும், தமிழ்நாட்டில் 40 கிலோ தழைச்சத்தும் இடப்படுகிறது. பாசனப்பயிருக்கு கர்நாடகாவில் 100 கிலோ மற்றும் தமிழ்நாட்டில் 90 கிலோ தழைச்சத்து இடப்படுகிறது.
50% கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடவேண்டும்
மீதமுள்ள 50% தழைச்சத்தை இருபகுதியாகப் பிரித்து, விதைத்த 30 மற்றும் 50 ஆம் நாளில், மண்ணின் ஈரத்தைப் பொருத்து உரமிடவேண்டும்.
மழை உத்திரவாதமில்லாத இடங்களில், அடியுரமாக 50% உரமும், விதைத்த 35 நாட்களில் மீதி 50% உரமும் இடவேண்டும்.
2% யூரியா கரைசலை விதைத்த 40 மற்றும் 50 நாட்களில் தெளித்து கேழ்வரகில் தானிய மகசூலை அதிகரிக்கலாம்.
ராகிப் பயிரின் பொதுவான வளர்ச்சிக்கும், வீரியத்திற்கும் மணிச்சத்து தேவை.
ஒளிச்சேர்க்கை, ஊட்டச்சத்து மற்றும் சக்தி பரிமாற்றத்திற்கு மணிச்சத்து மிகவும் அவசியம்
பயிர் முதிர்ச்சியடைவதற்கும், இடர்பாடு நிலைகளைத் தாங்குவதற்கும் மணிச்சத்து அவசியம்
பயிரின் துரித வளர்ச்சிக்கு மணிச்சத்து அவசியம்
பூப்பிற்கும், வேர்வளர்ச்சிக்கும் இச்சத்து அவசியம்
நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதோடு, தண்டை வலிமை அடையச் செய்கிறது.
நடவின் போது, மணிச்சத்து நிறைந்த உரங்களை மண்ணில் இடுவதன் மூலம், பயிர் நல்ல நிலையான வேர் அமைப்பை உருவாக்கிக் கொள்கிறது. . நிலையான முதல் பருவ நிலையைப் பெறும்.
தானியம் மற்றும் வைக்கோல் மகசூலை அதிகரிக்கிறது.
தொழுஉரம், ஆமணக்கு புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, சூப்பர் பாஸ்பேட்(சிங்கிள்), சூப்பர் பாஸ்பேட்(டபுள்) சூப்பர் பாஸ்பேட்(டிரிப்பில்), பேசிக் ஸ்லேக், மசூரி, டைஅமோனியம் பாஸ்பேட் (ஸ்பிக்) போன்றவற்றில் இருந்து மணிச் சத்து கிடைக்கிறது.
குறைபாட்டு அறிகுறிகள்:
வளர்ச்சி பருவம் முழுவதும், பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றும்.
சக்தியை சேமித்தல், பரிமாற்றம் மற்றும் சவ்வு ஒருங்கிணைப்பு ஆகிய செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
பயிரின் ஆரம்ப கால நிலையில், இலைகளில் சிவப்பு அல்லது நிறத்திற்கு மாறியிருக்கும்
பற்றாக்குறை தீவிரமடையும் பொழுது, செடிகள் குன்றி, தூர்கள் குறைந்து, வேர் வளர்ச்சி குன்றி, முன்பே செடிகள் பூத்துவிடும்.
நிவர்த்தி:
நிலம் சாகுபடி செய்யாமல் இருக்கும் போது, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு, உழவின் மூலம் மண்ணில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. பயிர் கழிவுகள் மக்குவதற்கு ஏதுவாகிறது. இதனால் அடுத்து வரக் கூடிய பயிருக்கு, தழை வளர்ச்சி பருவத்தில் அதிக மணிச் சத்து கிடைக்கிறது.
அதிக மகசூல் தரக்கூடிய இரகத்தில் இருந்து, நல்ல தரமான, பல நோய் எதிர்ப்புதிறன் கொண்ட விதைகளை பயன்படுத்தி முறையாக நீர், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு நிர்வாகம் செய்து, வீரிய முள்ள பயிர்களை சரியான எண்ணிக்கை மற்றும் அடர்த்தியில் பராமரிக்கவேண்டும்.
கேழ்வரகு வைக்கோலை வயலிலேயே போட்டு உழுது, நீண்ட நாட்களுக்கு, மண்ணில் மணிச்சத்து நிலைக்குமாறு செய்யவும்.
பசுந்தாள் உரம் பயிரிட்டு, நிலத்திலேயே உழுது விடவேண்டும்
பல வருடங்களுக்கு, தொடர்ச்சியாக ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழுஉரம் இட்டு, பயிரின் மணிச்சத்து தேவையை நீண்ட நாட்களுக்கு பூர்த்தி செய்யலாம்.
விதைப்பின் போது சரியான அளவு மணிச்சத்து உரம் (30, 40 கிலோ/எக்டர்) இடவேண்டும்
பயிர் வேகமாக வளர்வதற்கு சாம்பல் சத்துஉதவுகிறது.
வறட்சியை தாங்கும் திறனை அளிக்கிறது.
நோய் மற்றும் பூச்சித்தாக்கத்தை குறைக்கிறது.
புரதம் உருவாக்கத்திற்கும், ஒளிச்சேர்க்கை மற்றும் உயர்ந்த தானிய தரத்திற்கும் உதவுகிறது.
தூர்பிடித்தல், கிளைகள் உருவாகுதல், தானிய அளவு மற்றும் எடை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
தொழுஉரம், ஆமணக்கு, புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்கள் வாயிலாகவும், பொட்டாஷ், பொட்டாசியம் சல்பேட் போன்ற இராசயன உரங்கள் வாயிலாகவும் மண்ணிற்கு சாம்பல் சத்து கிடைக்கிறது.
குறைபாட்டு அறிகுறிகள்:
வறட்சியான சூழலில், சாம்பல் சத்து குறைபாடு அறிகுறிகள் தென்படும்.
வறண்ட வானிலை மற்றும் அதனால் ஏற்படும் மண் மாற்றங்களினால் பயிர் மண்ணிலிருந்து உட்கொள்ளும் திறன் குறைகிறது
முதிர்ந்த இலைகளில் எலுமிச்சை மஞ்சள் நிற விளிம்புகளாக குறைபாட்டு அறிகுறிகள் முதலில் தோன்றும்.
பழுப்பு நிறத்திற்கு மாறி பிறகு இலை விளிம்புகள் காய்ந்து போவது மணிச்சத்து குறைபாட்டின் தீவிரத்தை குறிக்கும்.
நிவர்த்தி:
பயிரின் அடர்த்தியையும் இடைவெளியையும் மாற்றி அமைக்கவேண்டும்.
களைகளை அகற்றவேண்டும்
பருவத்திற்கு முன்னரே சாகுபடி செய்து, செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கவேண்டும்
அடிமண் இட்டு மண் ஆழத்தை அதிகப்படுத்தவேண்டும்
மானாவாரி பயிருக்கு, கர்நாடகாவில் ஒரு எக்டருக்கு 25 கிலோ மற்றும் தமிழ்நாட்டில் ஒரு எக்டருக்கு 20 கிலோ பொட்டாஷ் உரம் இடவேண்டும். பாசனப்பயிருக்கு, கர்நாடகாவில் ஒரு எக்டருக்கு 50 கிலோ மற்றும் தமிழ்நாட்டில் ஒரு எக்டருக்கு 45 கிலோ பொட்டாஷ் உரத்தை கைவிதைப்பு செய்து, நடவு(அ) விதைப்புக்கு முன் மண்ணில் கலக்கவேண்டும்.
1% பொட்டாசியம் குளோரைடு கரைசல் தெளிக்கவேண்டும்
நல்ல வளர்ச்சிக்கும், செல் சுவர் கட்டமைப்பிற்கு சுண்ணாம்பு அவசியம்
இரண்டாம் காரணியாக இருந்து பல்வேறு செல் மற்றும் செடியின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
டோலமைட் லைம், ஜிப்சம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் மூலம் சுண்ணாம்பு சத்தைப் பெறலாம்.
குறைபாட்டு அறிகுறிகள்
இலைகளின் பக்கவாட்டு விளிம்புகள் காய்ந்திருக்கும்
முதிர்ந்த இலைகள், பழுப்பு நிறத்திற்கு மாறி உதிர்ந்து விடும்
வளர்ச்சி முனைகள் குன்றி இறந்து விடும்.
குறைபாடு நிவர்த்திகள்:
தொழு உரம் (அ) வைக்கோல்(மண்ணில் கலந்து (அ) எரித்து) இட்டு மண்ணின் சுண்ணாம்பு சத்தை சரி செய்யவேண்டும்.
கேல்சியம் குளோரைடு (அ) சுண்ணாம்பு கரைசலை தழை வழியாக தெளித்து சுண்ணாம்பு பற்றாக்குறையை சரிசெய்யலாம்.
அதிக காரத்தன்மை கொண்ட சுண்ணாம்பு பற்றாக்குறை உள்ள களர் மண் - அதிகமான பொட்டாஷ் மண்ணிற்கு ஜிப்சம் இடவேண்டும்.
செடிகளில் பச்சையத்தில் ஒரு பகுதியாக மெக்னீசியம் உள்ளது. எனவே ஒளிச்சேர்க்கைக்கு இது மிகவும் அவசியம். பயிர் வளர்ச்சிக்கு செயல்படும் பல நொதிகளை ஊக்குவிக்க மெக்னீசியம் தேவை.
மண் தாதுக்கள், இயற்கை பொருள்கள், உரங்கள், டோலமைட் லைம்ஸ்டோன் ஆகியவற்றில் மென்னீசியம் கிடைக்கிறது.
குறைபாட்டு அறிகுறிகள்
மெக்னீசியம் பற்றாக்குறை உள்ள இலைகளில், நரம்பு இடைவெளி, மஞ்சள் நிறமடைந்துவிடும். அதிகமாக வெளிர்ந்த இலைகள் காய்ந்து விடும்
மெக்னீசியம் பற்றாக்குறை தீவிரமடையும் பொழுது, மேலோட்டமாக பார்த்தால் மணிச்சத்து பற்றாக்குறை போன்ற தோன்றும்.
நிவர்த்தி:
மெக்னீசியம் குளோரைடை இடவேண்டும்
2% மெக்னீசியம் கரைசலை தழைத் தெளிப்பாக தெளிக்கவேண்டும்
நொதிகள் மற்றும் விட்டமின் உற்பத்தி செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
பச்சையம் உருவாக உதவுகிறது
வேர் வளர்ச்சி மற்றும் தானிய உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
வீரியமுள்ள பயிர் வளர்ச்சிக்கும், குளிர் எதிர்ப்புத் திறனுக்கும் கந்தகம் உதவுகிறது.
மழை நீர் வாயிலாக மண்ணிற்கு கந்தகம் மண்ணிற்கு கிடைக்கிறது. குறைந்த தரமுள்ள உரங்களில் கந்தகம் தூய்மையற்ற பொருளாக கலக்கப்படுகிறது. ஜிப்சம் இடுவதன் மூலம், மண்ணில் கந்தகம் அதிகரிக்கிறது.
குறைபாட்டு அறிகுறிகள்
செடிகள் மஞ்சள் நிறமாக (அ) வெளிர்பச்சை நிறமாக மாறும்
இளம் இலைகள், மஞ்சள் (அ) வெளிர் பச்சை நிறமடைந்து, துனிகள் காய்ந்துவிடும்
கீழ் உள்ள இலைகளில் காய்ந்த அறிகுறிகள் இருக்காது.
குறைபாட்டு அறிகுறிகள்
வைக்கோலை அப்படியே அகற்றவோ (அ) எரிக்கவோ செய்யாமல் மண்ணில் சேர்க்கவேண்டும். வைக்கோலை எரிப்பதால், 40-60% கந்தகம் இழக்கப்படுகிறது.
அறுவடைக்கு பின் வறண்ட நிலத்தை உழுது, சல்பைடு ஆக்சிஜனேற்றத்திற்கு வழி செய்யவேண்டும்
ஒரு எக்டருக்கு 15-20 கிலோ கந்தகம் இடுவதன் மூலம் அடுத்த இரண்டு ராகிப் பயிருக்கு தேவையான சத்து கிடைக்கிறது.
மற்ற ஊட்டச்சத்துகளை சரியாக பயன்படுத்தவும், சீர்படுத்தவும் போரான் உதவுகிறது
சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உற்பத்திக்கு போரான் உதவுகிறது
தானிய வளர்ச்சிக்கு போரான் மிகவும் முக்கியம்
போராக்ஸ் மற்றும் அங்ககப் பொருட்களில் இருந்து போரான் கிடைக்கும்
குறைபாட்டு அறிகுறிகள்
போரான் குறைபாடுகள் பொதுவாக வெளியே தென்படுவதில்லை. அதிக மழையளவு மற்றும் நீர்கரையோட்டம் உள்ள மண்ணில் போரான் குறைபாடு காணப்படும்
அதிக காரத்தன்மை உள்ள மண்ணில், போரான் சத்து, மண்ணிலேயே உள்ளடங்கி வெளிவருவதில்லை. மழைப் பருவங்களில், சத்துக் குறைபாடு தீவிரமாகும்
இலைகள் முறையற்றும் அங்கும் இங்கும் காணப்படும் செடியின் உயரமும் குறைந்துவிடும்
கதிர் உருவாகும் தருணத்தில் போரான் குறைபாடு தோன்றினால், செடிகளால், கதிர்களை உற்பத்தி செய்ய முடியாது.
இறுதியாக மோசமான தானிய உருவாக்கத்தினால் மகசூல் குறைந்து விடும்
நிவர்த்தி:
அதிகமான நீர்கரையோட்டத்தை தவிர்க்கவேண்டும்
களிமண் வகைகளுக்கு 2-3 கிலோ போரான் இடவேண்டும்
கரையக்கூடிய வடிவத்தில் போரான்(போராக்ஸ்) இடவேண்டும் (0.5-3 கிலோ/எக்டர்), நடவுக்கு முன் மண்ணில் இட்டு கலக்கவேண்டும் (அ) 0.1% தழைத் தெளிப்பாக, தழை வளர்ச்சி பருவத்தில் தெளிக்கவேண்டும்.
பச்சையம் உருவாகுவதற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம்
மண், இரும்பு சல்பேட், இரும்பு கீலேட் மூலம் இரும்புச் சத்து கிடைக்கிறது.
குறைபாட்டு அறிகுறிகள்
இடை நரம்புப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல், புதிய இலைகள் வெளிரி காணப்படும்
செடி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறும்
நிவர்த்தி:
பெரஸ் சல்பேட் (30 கிலோ இரும்புச்சத்து/எக்டர்) இடவேண்டும்
2-3% பெரஸ் சல்பேட் கரைசலை தழை தெளிப்பாக தெளிக்கவேண்டும்
கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் தழைச்சத்து சிதைமாற்றத்தில் ஈடுபடும் நொதிகளுடன் சேர்ந்து செயல்படுகிறது.
மான்கனீசு மண்ணில் இருந்து கிடைக்கிறது.
குறைபாடு அறிகுறிகள்
மான்கனீசு குறைவாகக் கிடைக்கும் சமயங்களில் இலைகளில், இடை நரம்புப் பகுதிகள் மஞ்சளாகக் காணப்படும்
மஞ்சள் நிறத்தோற்றம், ஆரம்பத்தில் பார்ப்பதற்கு இரும்புச்சத்து குறைபாட்டை போல தோன்றும்
இளம் இலைகள் லேசாக வெளிர் மஞ்சள் நிறமாகவும், முதிர் இலைகளை நல்ல வெளிச்சத்தில் காணும் போது இலையின் நரம்பு வலைகள் தெளிவாக தெரியும்
நிவர்த்தி:
ஒரு எக்டருக்கு 15-20 கிலோ மான்கனீசு சல்பேட் இடவேண்டும்
மான்கனீசு சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவேண்டும்
சிதைமாற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் பல நொதிகளின் பகுதியாக துத்தநாகம் உள்ளது
களர் மண் மற்றும் சுண்ணாம்புச் சத்து மிகுந்த மண்ணில் துத்தநாகக் குறைபாடு அதிகம் வருகிறது
குறைபாட்டு அறிகுறிகள்
செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்
இளம் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறி விடும்.
நிவர்த்தி:
விதைப்பு (அ) நடவிற்கு முன், துத்தநாக சல்பேட் 20-25 கிலோ/எக்டர் இட வேண்டும்
நடவிற்கு முன், ஒரு இரவு, கேழ்வரகு நாற்று வேர்களை 0.5% துத்தநாக சல்பேட் கரைசலில் நனைத்து வைக்க வேண்டும்.
தூர்பிடிப்பு தருணத்தில் துத்தநாக சல்பேட் கரைசலை தழை வழியாகத் தெளிக்க வேண்டும்.
பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்கள் இயற்கை உரங்கள் எனப்படும்
இயற்கை உரங்கள் மண்ணில் அங்ககப் பொருட்களை அதிகப்படுத்துகிறது. பயிர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை செடிகள் உட்கொள்ளக் கூடிய வடிவத்தில் அளிக்கிறது.
இயற்கை உரங்கள் இடுவதால், மண்ணில் அதிகமான நீர் சேமிக்கப்படுகிறது. மேலும் களிமண்ணின் வடிகால் தன்மை அதிகரிக்கிறது.
இயற்கை உரங்களில் உருவாகும் கரிம அமிலங்கள், மண்ணில் உள்ள சத்துக்களைக் கரைத்து பயிர்களுக்கு அளிக்கிறது.
தொழு உரம், உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள், மக்கிய உரம், மண் புழு உரம் மற்றும் தென்னை நார்க்கழிவு போன்ற பல வகையான இயற்கை உரங்கள் உள்ளன.
a. தொழு உரம்
|
b. உயிர் உரங்கள்
|
c. பசுந்தாள் உரம்
|
d. மக்கிய குப்பை
|
e. மண்புழு உரமிடுதல்
|
f. தென்னை நார்க்கழிவு
|
ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய குப்பை (அ) மக்கிய தென்னை நார்கழிவை வயலில் சமமாக இட்டு, பின் உழுது, நன்கு மண்ணில் கலக்கி விடவேண்டும்.
குறிப்பு: உரத்தை நிலத்தில் போட்டவுடன் மூடவேண்டும். இல்லையெனில், திறந்து கிடக்கும் பொழுது, சத்துக்களை இழக்க நேரிடும்.
அசோஸ்பைரில்லத்தில் வேர்களை நனைத்தல்: 5 பாக்கெட் (1000 கிராம்/எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (அ) 10 பாக்கெட் அசோபாஸ் (2000 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து கலவை தயார் செய்து, நாற்றின் வேர் பகுதிகளை இக்கரைசலில், 15-30 நிமிடத்திற்கு நனைத்து வைத்து, பிறகு நடவேண்டும்.
பாசனக் ராகி சாகுபடிக்கு, ஒரு எக்டருக்கு10 பாக்கெட் (2000 கிராம் எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் பாஸ்பரஸ் கரைக்கும் பாக்டீரியா (2000 கிராம்/எக்டர்) அல்லது 20 பாக்கெட் அசோபாஸ் (4000 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை, 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவுக்கும் முன் வயலில் இடவேண்டும்.
மானாவாரி ராகி பயிருக்கு, அசோஸ்பைரில்லம் பிரேசிலென்ஸ் (தழைச்சத்து நிலைப்படுத்தும் பாக்டீரியா) மற்றும் அஸ்பெர்ஜில்லஸ் அவாமோரி (மணிச்சத்து கரைக்கும் பூஞ்சாணம்) கொண்டு 25 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
வேறு ஏதாவது இரசாயனப் பொருட்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டியது இருந்தால், முதலில் அவற்றை முடித்து விட்டு கடைசியாக உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
மற்றொரு முறை: ஊட்டமேற்றப்பட்ட தொழு உரத்தை ஒரு எக்டருக்கு 2 டன் என்ற அளவில் 100% சாம்பல் மற்றும் மணிச்சத்துடன் கலந்து, பயிருக்கு அளித்ததில், கோயமுத்தூரில் அதிக மகசூல் பெற்றுள்ளனர்.
ராகி விதைப்பிற்கு முன் சணப்பு, தக்கை பூண்டு, வயல்பாறு, கொத்தவரை, மற்றும் செஸ்பேனியா ரோஸ்டிரேட்டா போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்து அவற்றை நிலத்திலேயே உழுது விடவேண்டும். அல்லது பசுந்தாள் இலைகளை கிளைரிசிடியா போன்ற மரங்களில் இருந்து சேகரித்து, நிலத்தில் இட்டு உழுதுவிடவேண்டும்.
பயிர் சுழற்சி (அ) ஊடுபயிர் முறையில் பயிர் வகைப் பயிர்களை ராகி பயிருடன் சாகுபடி செய்து, பசுந்தாள் உரத்திற்கு ஆதாரம் பெறவேண்டும்.
நாற்றங்காலில் ஒரு எக்டருக்கு 5 டன் என்ற அளவில் தொழு உரம் இடவேண்டும்
நடவு வயலில் 3-4 முறை உழுது தொழு உரம் (அ) மக்கிய எரு (அ) தென்னை நார்க் கழிவு ஒரு எக்டருக்கு 5 டன் என்ற அளவில் இடவேண்டும்.
பாசனக் ராகிப் பயிர் சாகுபடிக்கு, ஒரு எக்டருக்கு 10 பாக்கெட் (200 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு எக்டருக்கு 10 பாக்கெட் பாஸ்பரஸ் கரைக்கும் பாக்டீரியா(2000 கிராம்/எக்டர்) (அ) 20 பாக்கெட் அசோஸ் (4000 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் இடவேண்டும்.
மானாவாரி ராகி சாகுபடிக்கு, அசோஸ்பைரில்லம் பிரேசிலென்ஸ் (தழைச்சத்து நிலைப்படுத்தும் பாக்டீரியா) மற்றும் அஸ்பெர்ஜில்லஸ் அவாமோரி (பாஸ்பரஸ் கரைக்கும் பூஞ்சாணம்) போன்ற உயிர் உரங்களை @ 25 கிராம்/கிலோ விதை கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
உழுவதற்கு முன் ஒரு எக்டருக்கு 7-12 டன் தொழு உரம் இட்டு, பின் உழுது உரத்தை மண்ணில் சேர்க்கவேண்டும்.
பாசன ராகிப் பயிர் சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு 10 பாக்கெட் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு எக்டருக்கு 10 பாக்கெட் பாஸ்பரஸ் கரைக்கும் பாக்டீரியா (2000 கிராம்/எக்டர்) (அ) 20 பாக்கெட் அசோபாஸ் (4000 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் இடவேண்டும்.
மானாவாரி ராகி சாகுபடிக்கு, அசோஸ்பைரில்லம் பிரேசிலென்ஸ் (தழைச்சத்து நிலைப்படுத்தும் பாக்டீரியா) மற்றும் அஸ்பெர்ஜில்லஸ் அவாமோரி (பாஸ்பரஸ் கரைக்கும் பூஞ்சாணம்) உயிர் உரம் கொண்டு 25 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
பிற இரசாயனப் பொருட்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டியிருந்தால், முதலில் அதை முடித்த பின், கடைசியாக உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
அசோஸ்பைரில்லத்தில் வேர்களை நனைத்தல்: 5 பாக்கெட் (1000 கிராம்/எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா (அ) 10 பாக்கெட் அசோபாஸ் (2000 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து, கலவை தயார் செய்து, நாற்றின் வேர்ப்பகுதிகளை இக்கரைசலில் 15-30 நிமிடத்திற்கு நனைத்து வைத்து பிறகு நடவேண்டும்.
பருவ மழை துவங்கிய பின் சணப்பை விதைப்பு (18 கிலோ விதை/எக்டர்) செய்து பசுந்தாள் உரமிட்டு பயன் பெறலாம்.
ஒரு மாதம் கழித்து, செடிகள் 30 மீ உயரம் வந்தவுடன் நிலத்திலேயே உழுதுவிடவேண்டும்.
ஒரு வாரம் கழித்து ராகி நாற்றுகளை நடவு செய்யவேண்டும். இதன் மூலம் பயிரின் தானிய மகசூல் ஒரு எக்டருக்கு 350 கிலோ கூடுதலாக அதிகரித்துள்ளது
மண் பரிசோதனை அறிவுரைப்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாத இடங்களில், கீழ்க்கண்ட உர அட்டவணையை பின்பற்றவேண்டும்.
நடவுப் பயிருக்கு, தழைச்சத்தை இரண்டு முறை இடவேண்டும். 50% உரத்தை அடியுரமாகவும், மீதமுள்ள 50% உரத்தை முதல் களையெடுத்த பின், அதாவது, நடவு செய்த 20 நாட்கள் கழித்து இடவேண்டும்.
நேரடி விதைப்பு பயிருக்கு, தழைச்சத்தை அதாவது 25% அடியுரம், 20 ஆம் நாளில் 50% விதைத்த 35-40 நாளில் 25% என மூன்று தடவை இடவேண்டும்.
வ.எண் |
சூழ்நிலை/இரகம் |
விதைப்பு முறை |
தழை-சாம்பல்-மணிச்சத்து (கிலோ/எக்டர்) |
1. |
மானாவாரி |
நேரடி விதைப்பு |
40-30-20 |
நடவு |
50-40-25 |
||
2. |
மத்திய கால இரகம் |
நேரடி விதைப்பு |
50-40-25 |
நடவு |
50-40-25 |
||
3. |
பாசனப்பயிர் குறுகிய/மத்திய கால இரகம் |
நடவு |
60-40-30 |
உர அளவு பரிந்துரை – பாசனப்பயிர்
உரமிடும் எண்ணிக்கை |
சத்து பரிந்துரை |
நேரடி உரம் (கிலோ/எக்டர்) |
||||
தழைச் |
மணிச் |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
பொட்டாஷ் |
|
முதல்முறை -விதைப்பின் போது |
30 |
30 |
30 |
65 |
188 |
50 |
இரண்டாம் முறை-விதைத்த 30 மற்றும் 50 ஆம் நாளில் சம |
30 |
- |
- |
65 |
- |
- |
மொத்தம் |
60 |
30 |
30 |
130 |
188 |
50 |
குறிப்பு: நடவிற்கு முன் உயிர் உரம் பயன்படுத்தினால், தழைச்சத்தினை 25% குறைத்துக் கொள்ளலாம்.
வேளாண் துறை வடிவமைத்துள்ள நுண்ணூட்ட உரக் கலவையை 12.5 கிலோ என்ற அளவில் எடுத்து தேவையான அளவு மணலுடன் சுமார் 50 கிலோ அளவு வருமாறு கலந்து கொள்ளவேண்டும்.
பாத்திகளின் மேல் சீராக இடவேண்டும்
மண்ணில் புதையுமாறு கலக்கி விட கூடாது
மானாவாரி சூழலில், குறுகிய மற்றும் மத்திய கால இரக ராகி சாகுபடியில், உற்பத்தி திறனை பெருக்க, ஒரு எக்டருக்கு 60 கிலோ தழைச்சத்து போதுமானதாகும்.
பாசனப்பயிர் சாகுபடிக்கு, நீண்ட கால இரகங்களுக்கு ஒரு எக்டருக்கு 100-120 கிலோ தழைச்சத்தும், மத்திய கால இரகங்களுக்கு ஒரு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்தும், மாண்டியா பகுதிகளுக்கு (கர்நாடகா) போதுமானதாகும்.
பரிந்துரை செய்யப்பட்ட 100% உர அளவுடன், (தழை, மணி மற்றும் சாம்பல்), நாற்றுகளை உயிர் உரக்கலவையில் நனைத்து நடும் பொழுது, அதன் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது
உரஅளவு பரிந்துரை - பாசனப் பயிர்
உரமிடும் அளவின் எண்ணிக்கை |
தழை, மணி, சாம்பல் சத்து (கிலோ/எக்டர்) |
நேரடி உர அளவு (கிலோ/எக்டர்) |
||||
தழைச் சத்து |
மணிச் சத்து |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
பொட்டாஷ் |
|
முதல் முறை -விதைப்பின் போது |
50 |
50 |
50 |
108 |
312 |
83 |
இரண்டாம் முறை-விதைத்த 30 மற்றும் 50 ஆம் நாளில் சம அளவாக பிரித்து இருமுறை |
50 |
- |
- |
108 |
- |
- |
மொத்தம் |
100 |
50 |
50 |
216 |
312 |
83 |
குறிப்பு: உயிர் உரம் இடுவதாக இருந்தால் 25% தழைச் சத்து உரத்தை குறைத்துக் கொள்ளலாம்.
நூண்ணூட்ட உரக் கலவை இடுதல்
ஒரு எக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட உரத்தை 50 கிலோ வருமாறு மணலுடன் கலந்து கொள்ளவேண்டும்
கலவையை சீராக பாத்திகள் மேல் இடவேண்டும்
மண்ணில் புதையுமாறு கலக்கக் கூடாது
மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி உரமிடுவது நல்லது.
மண் பரிசோதனை செய்யவில்லையெனில், குறுகிய கால இரகங்களுக்கு (<100 நாட்கள்), 40 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து/எக்டர் இடலாம். மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களுக்கு, 60 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து/எக்டர் இடலாம்
தழைச்சத்து உரத்தை இரண்டாக பிரித்து, 50% அடியுரமாகவும், மீதம் 50% உரத்தை முதல் களைக்கு முன் மேலுரமாகவும் இடவேண்டும்.
உர அளவு பரிந்துரை – பாசனப்பயிர்
உஉரமிடும் அளவின் எண்ணிக்கை | தழை, மணி, சாம்பல் சத்து (கிலோ/எக்டர்) | நேரடி உரம் (கிலோ/எக்டர்) | ||||
தழைச் சத்து | மணிச் சத்து | சாம்பல் சத்து | யூரியா | சூப்பர் பாஸ்பேட் | பொட்டாஷ் | |
முதல் முறை - விதைப்பின் போது | 30 | 30 | 30 | 65 | 188 | 50 |
இரண்டாம் முறை-விதைத்த 30 மற்றும் 50 ஆம் நாளில் சம அளவாக பிரித்து இருமுறை | 30 | - | - | 65 | - | - |
மொத்தம் | 60 | 30 | 30 | 130 | 188 | 50 |
உரமிடும் அளவின் எண்ணிக்கை |
தழை, மணி, சாம்பல் சத்து (கிலோ/எக்டர்) | நேரடி உரம் (கிலோ/எக்டர்) | ||||
தழைச் சத்து | மணிச் சத்து | சாம்பல் சத்து | யூரியா | சூப்பர் பாஸ்பேட் | பொட்டாஷ் | |
முதல் முறை -விதைப்பின் போது | 30 | 30 | 30 | 65 | 188 | 50 |
இரண்டாம் முறை-விதைத்த 30 மற்றும் 50 ஆம் நாளில் சம அளவாக பிரித்து இருமுறை | 30 | - | - | 65 | - | - |
மொத்தம் | 60 | 30 | 30 | 130 | 188 | 50 |
நூண்ணூட்ட உரக் கலவை இடுதல்
ஒரு எக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட உரத்தை 50 கிலோ வருமாறு மணலுடன் கலந்து கொள்ளவேண்டும்
அதனை சீராக பாத்திகள் இடவேண்டும்
மண்ணில் புதையுமாறு கலக்கக் கூடாது.
1. தூவும் முறை
2. விதை நேர்த்தி
3. நாற்று நேர்த்தி
4. மண்ணில் இடுதல்
5. இலைவழி உரமிடுதல்
வயலின் அனைத்துப் பகுதிகளிலும் உரங்களை சீராக பரப்புவதே தூவும் முறையாகும். அடர்த்தியாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு இம்முறை பொருந்தும். மண்ணை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள வேர்கள் கொண்ட பயிர்களுக்கு அதிகளவில் உரங்கள் அளிக்கப்படுகின்றன.
தூவும் முறை இருவகைப்படும்;
உரம் நன்றாக மண்ணில் கலக்கும் நோக்கத்துடன் கையினால் உரங்கள் வயல் முழுவதும் சீராக பரவுமாறு தூவப்படுகிறது.
நடவுக்கு முன் பரிந்துரை செய்யப்பட்டதில் பாதி அளவு தழைச்சத்தையும், முழு அளவு சாம்பல் மற்றும் மணிச்சத்தும் இடவேண்டும்.
கடைசி உழவிற்கு முன் உரக்கலவையை வயல் முழுவதும் பரப்பி விட்டு, இறுதியாக நாட்டு கலப்பை கொண்டு உரத்தை நன்றாக மண்ணில் கலக்கி விடவேண்டும்.
தமிழ்நாடு வேளாண் துறை வடிவமைத்துள்ள நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோ எடுத்துக் கொண்டு 50 கிலோ வருமாறு மணலுடன் கலந்து சீராக பாத்திகளில் பரப்பவேண்டும்.
அதிகமான காரத்தன்மை உள்ள மண்ணிற்கு அமோனியம் உரங்கள் இடுவதைத் தவிர்க்கவேண்டும். ஏன்னெனில், அம்மண்ணில் இருந்து அமோனியா ஆவியாக மாறி வெளியேறிவிடும். யூரியாவே சிறந்த தழைச்சத்து உரமாகும். சில நேரங்களில் வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியாவை இட்டு ஆவியாவதை தவிர்க்கலாம்.
வளரும் பயிர்களுக்கு, தேவைப்படும் வடிவத்தில், உடனடியாக தழைச்சத்து உரத்தை தூவும் முறையின் மூலம் அளிப்பதே மேலுரமிடுதல் எனப்படும்.
மீதமுள்ள 50% தழைச்சத்து, இரண்டு முறை, விதைத்த 25-30 மற்றும் 40-45 நாட்களில் இடப்படுகிறது.
விதை மற்றும் மண் மூலம் பரவக்கூடிய நோய்க்கிருமிகள் மற்றும் சேமிப்பு பூச்சிகள் அகியவற்றில் இருந்து, விதைகளை பாதுகாக்க பூஞ்சாணக் கொல்லி, பூச்சிக்கொல்லி (அ) இரண்டும் கலந்து விதைகளுக்கு அளிக்கப்படும் முறையே விதை நேர்த்தியாகும்.
விதை நேர்த்தி செய்வதால் குலைநோய் மற்றும் நாற்றழுகல் நோய் பரவுவது தடுக்கப்படுவதோடு முளைப்புத்திறனையும் அதிகரிக்கிறது.
அசோஸ்பைரில்லம் (600 கிராம்/எக்டர்) மற்றும் பாஸ்போ-பாக்டீரியா (600 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை 300-400 மில்லி அரிசி கஞ்சியுடன் விதைகள் கலக்கப்பட்டு நிழலில் உலர்த்தப்படுகிறது.
விதைகளை பிற இராசயனப் பொருட்களுடன் கலக்க வேண்டியது இருந்தால், அதை செய்து முடித்த பிறகு, உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
டிரைக்ளசோல் ஒரு எக்டருக்கு 8 கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யப்பட்டதில் ராகி குலைநோய் தாக்கம் குறைக்கப்பட்டது.
தரமான விதைகளை கார்பென்டசீம் 2 கிராம்/கிலோ விதை (அ) கேப்டான் 4 கிராம்/கிலோ விதை (அ) திரம் 75% WDP @ 4 கிராம் மருந்தை 5 மில்லி தண்ணீர்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.
1 பகுதி மாட்டுக் கோமியம் +10 பகுதி தண்ணீரில் ராகி விதைகளை கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
உயிர் உரங்களை கொண்டு விதை நேர்த்தி செய்தல்
பயிருக்கு தேவையான உயிர் உர ஊடகத்தை ஒரு கிலோவுக்கு 25 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவேண்டும்.
விதைகளில் நன்றாக ஒட்டுவதற்கு ஒட்டும் கரைசல் அவசியம். இதற்கு 250 மில்லி தண்ணீரில், 25 கிராம் வெல்லம் (அ) சர்க்கரையை கரைத்து, 5 நிமிடம் கொதிக்க விடவேண்டும். இவ்வாறு தயாரித்த பின் ஆறவைக்கவேண்டும்.
விதைகளின் மேல் தேவையான அளவு ஒட்டும் கரைசலை கலந்து, பிறகு உயிர் உர ஊடகத்தை விதைகளுடன் கலந்து, விதைகளின் மேல் படுமாறு நன்றாகக் கலக்கி விடவேண்டும்.
விதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க விதைகளை நிழலில் உலர்த்தவேண்டும்.
நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்தவேண்டும்.
அசோஸ்பைரில்லத்தில் வேர்களை நனைத்தல்: 5 பாக்கெட் (1000 கிராம்/எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக்கெட் (1000 கிராம்/எக்டர்) பாஸ்போபாக்டீரியா (அ) 10 பாக்கெட் அசோபாஸ் (2000 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து, நாற்றின் வேர்ப் பகுதிகளை 15-30 நிமிடம் கரைசலில் நனைத்து பின் நடவு செய்யவேண்டும்.
பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதற்கு உரங்களை மண்ணில் இடுவதே சிறந்த முறையாகும்.
இலைவழி உரமிடுவதைவிட மண்ணில் இடுவது சிறந்ததாகும்.
இதனால் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள் உட்கொள்ளும் திறனையும் அதிகரிக்கிறது.
வேளாண் துறையின் நுண்ணூட்டக் கலவையை ஒரு எக்டருக்கு 12.5 கிலோ எடுத்து, 50 கிலோ அளவு வருமாறு மணலுடன் கலந்து கொண்டு பாத்திகள் மேல் சீராக இடவேண்டும்.
10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்) மற்றும் 10 பாக்கெட் பாஸ்பரஸ் பாக்டீரியா (2000 கிராம்) அல்லது 20 பாக்கெட் அசோபாஸ் (4000 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து, நடவுக்கு முன் இடவேண்டும்.
உயிர் உரங்களை மண்ணில் கலத்தல்: அசோஸ்பைரில்லம் (2 கிலோ/எக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா (2 கிலோ/எக்டர்) எடுத்து, 20-25 கிலோ மக்கிய எருவுடன் கலந்து ஒரு இரவு வைக்கவேண்டும். விதைப்பு (அ) நடவிற்கு முன் வயலில் இட்டு, மண்ணில் நன்றாகக் கலக்கவேண்டும்.
ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கொண்ட உரக் கரைசலை, வளரும் செடிகளுக்கு, இலை வழியாகத் தெளிப்பது, இலைவழி உரமிடுதல் ஆகும்.
உரங்களை தண்ணீரில் கலந்து இலைகளில் தெளிப்பதன் மூலம், ஊட்டச்சத்துக்களை, இலைகள் எளிதில் எடுத்துக் கொள்கின்றன.
தெளிக்கும் கரைசலின் அடர்த்தியில் சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் இலைகள் கருகி விடும்.
நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, தாமிரம், போரான், துத்தநாகம் மற்றும் மான்கனீசு போன்றவற்றை அளிப்பதற்கு இலைவழி உரமிடுவதே சிறந்த முறையாகும். உரத்துடன் சில சமயங்களில் பூச்சிக் கொல்லிகளும் சேர்த்து தெளிக்கப்படுகிறது.
2% யூரியா கரைசலை விதைத்த 40 மற்றும் 50 ஆம் நாளில் இலைவழியாக தெளிப்பதன் மூலம் ராகி தானிய மகசூல் அதிகரிக்கும்.
1% பொட்டாசியம் குளோரைடு கரைசலும் இலை வழியாக தெளிக்கப்படுகிறது.
நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை ஏற்படும் போது, அவற்றை இலை வழியாகத் தெளிக்கலாம்.
|
|
|
மண் வளம்: மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உபயோகத்திற்கு ஏற்றவாறு ஆயத்தம் செய்தல், மண்ணிற்கு ஏற்ற பயிர் ரகங்கள் சாகுபடி, உழவியல் முறைகள் மற்றும் பயிர் திட்டத்தை பின்பற்றுதல்.
இராசயன உரம்: சூப்பர் குருணைகள், யூரியா, அமிலத்தன்மை நிறைந்த மண்ணில் உள்ள ராக் பாஸ்பேட்டை நேரடியாக பயன்படுத்துதல், ஒற்றை சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தேவையை பொறுத்து உரமிடவேண்டும்.
இயற்கை உரங்கள்: வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்களின் இடைவிளைவுப் பொருள்களான தொழு உரம், கழிவு, பயிர் கழிவுகள், கழிவு நீர், கழிவுப் படிவு, தொழிற்சாலைக் கழிவுகள்.
தொழு உரம் (அ) மக்கிய குப்பை (அ) தென்னை நார்க் கழிவு 12.5டன்/எக்டர் இடவும்.
உயிரியல் உரங்கள்: உயிரியல் உரங்கள் இடுவதன் மூலம் 15-40 கிலோ தழைச்சத்து/எக்டர் கிடைக்கிறது. அசோஸ்பைரில்லம் (2 கிலோ/எக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா (2 கிலோ/எக்டர்) உயிர் உரங்களை 20-25 கிலோ மக்கிய எருவுடன் கலந்து ஒரு இரவு வைக்கவும். பிறகு விதைப்பு (அ) நடவின் போது, மண்ணில் கலந்து விடவேண்டும்.
நடவிற்கு முன் 10 பாக்கெட்/எக்டர் அசோஸ்பைரில்லம் (2 கிலோ) ஊடகத்தை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவிற்கு முன் இடவேண்டும்.
அசோஸ்பைரில்லம் (1000 கிராம்/எக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா (1000 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை தண்ணீரில் கலந்து, நாற்றின் வேர்களை நனைத்து பிறகு நடவு செய்யவேண்டும்.