கேள்வி - பதில்

கால நிலை

சாகுபடி முறைகள்

சாகுபடி நுட்பங்கள்

பயிர் பாதுகாப்பு

பருவம் மற்றும் இரகங்கள்

நாற்றங்கால் பராமரிப்பு

உர மேலாண்மை

அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள்



கால நிலை


ராகி பயிர் எந்த சூழலில் நன்றாக வளரும்?

ராகி, வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பயிராக இருப்பதால், மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். அதிக உயரமுள்ள இடங்களில் நன்றாக வளரக் கூடிய பண்புடையதால், இமாலாய மலைப் பகுதிகளில் 2,300 மீ உயரம் வரை சாகுபடி செய்யலாம். இது கடின வகைப் பயிர் என்பதால் மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இருமுறையிலும் பயிர் செய்யலாம்.

தென்னிந்தியாவில் எந்தெந்த இடங்கள் ராகி சாகுபடிக்கு ஏற்றவை?

தென்னிந்தியாவில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு (75-80 மற்றும் 10-15) ஆகிய பகுதிகள் ராகி சாகுபடிக்கு ஏற்றவை.

ராகி சாகுபடிக்கு ஏற்ற வெப்பநிலை மற்றும் மழையளவு என்ன?

ஆண்டு மழையளவு 700 மிமீ- 1200 மிமீ உள்ள இடங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.  ராகி பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும் போது மழையிருக்கக் கூடாது.  பயிர் பருவத்தில் வெப்ப நிலை 25 -32° சி வரை வேறுபடும்.

தமிழ்நாட்டில் சாகுபடிக்கு ஏற்ற பாசனப்பபயிர் இரகங்கள் யாவை?

 

பருவங்கள்

மாவட்டங்கள்

இரகங்கள்

பாசனப்பயிர்

மார்கழிப்பட்டமம்
(டிசம்பர்-ஜனவரி)

கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள்

கோ (ஆர்.ஏ) 14, கோ 9, கோ 13, டி.ஆர்.ஒய் 1

பாசனப்பயிர்

சித்திரைப்பட்டம்
(ஏப்ரல்-மே)

கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள்

கோ 9, கோ 13, கோ (ஆர் ஏ) 14

 

ராகி கோ (ஆர்.ஏ) 14 இரகத்தை தமிழ்நாட்டில் எந்தப் பருவத்தில் பயிர் செய்யலாம்?

பாசனப் பயிர் - மார்கழிப்பட்டம் (டிசம்பர்-ஜனவரி)
சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே)
மானாவாரிப்பயிர் - ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை)
புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்)

கோ (ஆர்.ஏ) 14 ராகி இரகத்தின் தானிய மகசூல் எவ்வளவு?

பாசனப் பயிர்     -   2892 கிலோ/எக்டர்
மானாவாரிப்பயிர் - 2794 கிலோ/எக்டர்

நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட கோ (ஆர்.ஏ) 14 இரகத்தை, தமிழ்நாட்டில் சாகுபடி செய்யலாமா?

ஆம்.  கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.

மேலே செல்க


பருவம் மற்றும் இரகங்கள்


கோ13  ராகி இரகத்தை தமிழ்நாட்டில் எந்த பருவத்தில் சாகுபடி செய்யலாம்?

பாசனப் பயிர் - மார்கழிப்பட்டம் (டிசம்பர்-ஜனவரி)
சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே)
மானாவாரிப்பயிர் - ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை)
புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்)

குறிப்பு: கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் பயிர் செய்யலாம்.

கோ 13 ராகி இரகத்தின் வயது என்ன?

வயது: மத்திய கால இரகம்
வயது (நாட்கள்)  : 95-100 நாட்கள்

கோ 13 ராகி இரகத்தின் மகசூல் என்ன?

பாசனப் பயிர்    - 3600 கிலோ/எக்டர்
மானாவாரிப்பயிர்- 2300 கிலோ/எக்டர்

கோ 9 ராகி இரகத்தின் வயது என்ன?

100 நாட்கள்

தமிழ்நாட்டில் கோ 9 ராகி இரகத்தை எந்த பருவத்தில் சாகுபடி செய்யலாம்?

பருவம்: பாசனப்பயிர் - மார்கழிப்பட்டம் (டிசம்பர்-ஜனவரி) - சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே)

பையூர் (ஆர்.ஏ) 2 ராகி இரகத்தின் வயது என்ன?

வயது: நீண்ட கால இரகம்
வயது (நாட்கள்): 115 நாட்கள்

பையூர் (ஆர்.ஏ) 2 இரகத்தின் தானிய மகசூல் என்ன?

மானாவாரி சூழலில் தானிய மகசூல் 3150 கிலோ/எக்டர் ஆகும்.

தமிழ்நாட்டின் வேளாண் காலநிலையில் அதிக மகசூல் தரக்கூய இரகம் ஏதேனும் உள்ளதா?

ஆம். டி.ஆர்.ஒய் 1 இரகம், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர, 4011கிலோ/ எக்டர் மகசூல் தருகிறது.

டிஆர்ஒய் 1 ராகி இரகத்தின் வயது மற்றும் பருவம் என்ன?

வயது: மத்திய கால இரகம்
நாட்கள்: 102 நாட்கள்
பருவம்: பாசனப் பயிர் - மார்கழிப்பட்டம் (டிசம்பர்-ஜனவரி)

கர்நாடகாவில் வெளியிடப்பட்டுள்ள இரகங்கள் யாவை?

ஜி.பி.யு 28, ஜி.பி.யு 26, ஜி.பி.யு 45, எம்.ஆர் 6, எல் 5

ஜி.பி.யு28 ராகி இரகத்தின் வயது என்ன?

வயது         :   மத்திய கால இரகம்
நாட்கள்      :  110-115 நாட்கள்

ஜி.பி.யு 28 ராகி இரகத்தின் தானிய மகசூல் என்ன?

தானிய மகசூல்     : 40-45 குவின்டால் ( பாசனப்பயிர்)
                                30-35 குவின்டால் (மானாவாரி)

கர்நாடகாவிற்கு ஏற்ற குறுகிய கால ராகி இரகம் எது?

ஜிபியு 26. இரகத்தின் வயது 90-100 நாட்கள் ஆகும்.

கர்நாடகாவிற்கு ஏற்ற மத்திய கால ராகி இரகம் எது?

ஜி.பி.யு45. இரகத்தின் வயது 104-109 நாட்கள் ஆகும்

கர்நாடகாவிற்கு ஏற்ற நீண்ட கால ராகி இரகங்கள் என்ன?

எல் 5 இரகத்தின் வயது 115-120 நாட்கள் ஆகும்.
எம்.ஆர் 6 இரகத்தின் வயது 120 நாட்கள் ஆகும்.

எம்.ஆர் 6 ராகி இரகத்தின் மகசூல் திறன் என்ன?

தானிய மகசூல்   : 45-50 குவின்டால்/எக்டர் (பாசனப்பயிர்)
30-35 குவின்டால்/எக்டர் (மானாவாரி)

ஜி.பி.யு 48 இரகத்தின் வயது மற்றும் மகசூல் என்ன?

வயது                     : குறுகிய கால இரகம்
வயது                     :  100 நாட்கள்
தானிய மகசூல்      :  37 குவின்டால்/எக்டர்

ராகி சாகுபடி செய்ய வேண்டிய பருவங்கள் யாவை?

முக்கியப் பருவம்    :   ஜூன்-செப்டம்பர்
பின் பருவம்         : ஜூலை-அக்டோபர்
கோடைப்பருவம்    :  டிசம்பர், ஜனவரி,  - மார்ச், ஏப்ரல்

ராகி பருவம் சார்ந்த பயிரா?

இல்லை.  ராகி பருவம் சார்ந்த பயிரல்ல,  ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

மேலே செல்க


சாகுபடி முறைகள்


இரண்டு சாகுபடி முறைகள் என்ன?

பாசன முறை மற்றும் மானாவாரி சாகுபடி முறை.

பாசனப் பயிர் சாகுபடியில் பின்பற்றப்படும் முறைகள் யாவை?

நேரடி விதைப்பு பயிர்
நடவுப் பயிர்
திருந்திய  ராகி சாகுபடி

மானாவாரிப் பயிரில் எந்த முறையில் உழவு செய்து நல்லது?

தரிசு உழவு செய்வது நன்று

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற விதைப்பு முறை எது??

வரிசை விதைப்பு

மானாவாரி ராகி பயிருக்கு தேவையான சராசரி மழை எவ்வளவு?

நன்கு பரவிய சீரான, 450-500 மி.மீ சராசரி மழை ராகி மானாவாரி சாகுபடிக்கு போதுமானதாகும்.

மானாவாரி பயிர் செய்யும் பொழுது வயலில் எவ்வாறு உழ வேண்டும்?

ஈரப்பதத்தை சேகரிக்க கோடை உழவு செய்யவும். இறக்கை கலப்பை கொண்டு ஏப்ரல்-மே இல் ஒரு முறை ஆழமாக உழுது, பின் நாட்டுக் கலப்பை கொண்டு இருமுறை உழுவது அவசியம். விதைப்பதற்கு முன் உழவியல் கருவிகள் மற்றும் பலபல் கொத்து கொண்டு உழுது, மென்மையாக நாற்றுப் படுக்கை தயார் செய்யவும்.

மானாவாரி ராகி வயலில், எவ்வளவு , பயிர் எண்ணிக்கை இருக்க வேண்டும்?

அதிகமான மகசூல் பெறுவதற்கு ஒரு எக்டரில் 4-5 லட்சம் செடிகள் இருக்க வேண்டும்.  இதைவிட குறைவாகவோ அதிகமாகவோ பயிர் எண்ணிக்கை இருந்தால் மகசூல் குறையக்  கூடும்.

மானாவாரி சாகுபடியில் ராகி விதைகளை எவ்வாறு விதைக்க வேண்டும்?

வரிசை விதைப்பு செய்வது நன்று வரிசைகளுக்கு இடையில் 22.5 - 30 செ.மீ இடைவெளி உள்ள விதை துளையிடும் கருவி கொண்டு விதைக்கவும்.

ராகி விதைகள் மிகவும் சிறியதாக உள்ளதால் (400 விதைகள்/கிராம்), ஒரு எக்டருக்கு 15-20 கிலோ விதை தேவை. இதில் 4 மில்லியன் இருக்கும். எனவே, விதை துளையிடும் கருவி பயன்படுத்தினாலும் செடிகளுக்கு இடையில் 7.5-10 செ.மீ இருக்குமாறு களைத்து விடவும்.         விதை மற்றும் உரமிடும் கருவி மூலம் வரிசை விதைப்பு செய்வது நன்று.  இதனுடன் மற்ற ஊட்டச்சத்துக்களும் இடவேண்டும்.

மானாவாரி ராகி வயலில், விதை முளைப்பு மோசமாக இருந்தால் எவ்வாறு சரிசெய்வது?

குறைவான மழை உள்ள பகுதிகளில் விதைக்கும் பொழுது, குறைவான ஈரப்பதத்தால், முளைப்பு பாதிக்கப்படக்கூடும்.  இந்நிலைகளில், எளிய நுட்பங்களான “விதை கடினமாக்குவதை” செய்வதன் மூலம் விதைகள் நன்றாக முளைக்கிறது.  அதோடு மட்டுமல்லாமல், பயிர் இளம் வயதிலேயே வீரியத்துடன் இருக்கும். வறட்சியைத் தாங்கக் கூடிய தன்மையை பெற்றிருக்கும்.

”விதை கடினமாக்குதல்” நுட்பத்தில் உள்ள செயல்முறை படிகள் யாவை?

படி 1: விதைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  1 கிலோ விதைக்கு, 1 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தவும்.
படி 2: நீரை வடிகட்டிவிட்டு, விதைகளை ஈரத்துணியில் போட்டு, இரண்டு  நாட்களுக்கு கட்டி விடவும்.
படி 3: இந்நிலையில், விதைகள் முளைக்க துவங்கிவிடும்.
படி 4: விதைகளை ஈரத்துணியில் இருந்து அகன்றி உலர்ந்த துணியில் போட்டு 2 நாட்கள் வைக்கவும்.

படி 5: கடினமாக்கப்பட்ட விதைகளை, விதைப்பிற்கு பயன்படுத்தவும்.

நேரடி விதைப்பு பயிருக்கான விதையளவு மற்றும் இடைவெளி என்ன?

விதையளவு - 10 கிலோ/எக்டர், இடைவெளி 22.5 * 15 செ.மீ

திருந்திய ராகி சாகுபடியின் அம்சங்கள் யாவை?

குறைவான உள்ளீட்டு பொருள்களே பயன்படுத்தப்படுகிறது.விதை, இரசாயண உரங்கள், பூச்சி மற்றும் நோய்க் கொல்லிகள் குறைவான அளவில் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இயற்கை உரங்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.திருந்திய கேழ்வரகு சாகுபடியில், அதிகமான வேர்கள், கூடுதலான எண்ணிக்கையில் பெரிய கதிர்களைக் கொண்ட துார்கள், நன்கு முற்றிய நிரம்பிய அதிக எடையுள்ள கதிர்மணிகள் கிடைக்கும்.

திருந்திய ராகி சாகுபடியின் அடிப்படைகள் யாவை?

நடவிற்கு இளம்கன்றுகளை பயன்படுத்தவும்
கவனமாக நடவு
அகன்ற இடைவெளியில் நடவு செய்யவும்
களைக்கட்டுப்பாடு
நீர் நிர்வாகம்
இயற்கை உரங்கள்

திருந்திய ராகி சாகுபடிக்கான விதையளவு என்ன?

ஒரு எக்டருக்கு 1.25 கிலோ விதைகள் தேவை.

நடவு வயலில் நடவு செய்ய வேண்டிய நாற்றுகளின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்?

8-12 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நட வேண்டும்.

வயலில் எவ்வாறு நாற்றுகளை நட வேண்டும்?

நாற்றுகளை சதுர வடிவத்தில், குத்து ஒன்றுக்கு ஒரு நாற்று மட்டுமே நட வேண்டும்.

திருந்திய ராகி சாகுபடியின் பயன்கள் யாவை?

அதிக தானியம் மற்றும் வைக்கோல் விளைச்சல்
வயது 10 நாட்கள் குறைகிறது
குறைவான இரசாயண உரங்கள் பயன்படுத்தப்படுகிறது
குறைவான தண்ணீர் தேவை (சாதாரண முறையில் பாதி அளவு)
குறைவான பதர் தானியங்கள்
தானிய அளவு மாற்றமில்லாமல், தானிய எடை கூடுகிறது.
கூடுதலான முழு கேழ்வரகு
புயலை தாங்கும் தன்மையுடையது
உயிரியல் செயல்பாட்டினால், மண் வளம் மேம்படுகிறது
குளிர் தாங்கும் தன்மை பெற்றது

திருந்திய ராகி சாகுபடியின் குறைகள் என்ன?

  • நடவின் போது வேலையாட்கள் கிடைக்காமல் போகலாம்.  எனவே விவசாயிகள் பின்பற்றுவதற்கு இதனால் தயங்குகிறார்கள்.
  • விவசாயிகளுக்கு நிறைய அனுபவம் தேவைப்படுகிறது
  • திருந்திய கேழ்வரகு சாகுபடியை, ராபி பருவத்தில் பின்பற்றலாம். ராபி பருவத்தில், நீர்க்கட்டுப்பாடும் நல்ல சூரிய வெளிச்சமும் இருக்கும். ஆனால் காரீப் பருவத்தில் பருவ மழையை கணிக்க முடியாது. அதிக வெள்ளம் வரக்கூடும். இதனால் மண்ணின் காற்றோட்டத்தை பராமரிப்பது, விவசாயிகளுக்கு கடினமாக இருக்கும்.
  • ஏற்ற களை எடுக்கும் கருவிகள் இல்லை.
  • விவசாயிகள் பாரம்பரிய மனநிலையில் உள்ளனர்.
  • தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு இல்லை
  • அதிகமான வேலையாட்கள் தேவையென்பதால், திருந்திய கேழ்வரகு சாகுபடியை, பெரிய அளவில் உற்பத்தி செய்ய பயன்படுத்த முடியாது.

மேலே செல்க


நாற்றங்கால் பராமரிப்பு


ராகி விதைக்கு என்ன விதை நேர்த்தி செய்ய வேண்டும்?

5 மில்லி தண்ணீரில், 2 கிராம் கார்பன்டசீம் (அ) திரவம் 75%  4 கிராம் கலந்து, அதில் விதைகளை நன்றாக கலக்கி விடவும்.

How to treat ragi seeds with cow urine?

விதை நேர்த்திக்கு படிமுறைகள் உள்ளது.
1 மடங்கு மாட்டுகோமியத்தை 10 மடங்கு தண்ணீரில் கலக்கவும்.
இதில் ராகி விதைகளை போட்டு பதினைந்து நிமிடம் ஊறவைக்கவும்.
முதல் இரண்டு நிமிடத்தில் மிதக்கும் பதரான விதைகளை அகற்றிவிடவும்.
15 நிமிடம் கழித்து, நீரை கீழே ஊற்றி விட்டு, அடியில் உள்ள கடினமான விதைகளை அகற்றவும்.
விதைப்பிற்கு முன் நிழலில் உலர்த்தவும்.

ராகி விதையின் விதையளவு என்ன?

நேரடி விதைப்பு   - 15-20 கிலோ/எக்டர் (மானாவாரி பயிர்)

நடவு பயிர்         - 4-5 கிலோ/எக்டர் (பாசனப் பயிர்)

ராகி நாற்றங்கால் தயாரிக்க தேவைப்படும் நாற்றுப்படுக்கையின் அளவு என்ன?  எவ்வாறு தயார் செய்ய வேண்டும்?

1 எக்டர் நடுவதற்கு, 12.5 சென்ட் நாற்றங்கால் தேவை (500மீ).        37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 500 கிலோ தொழு உரத்துடன் கலந்து, நாற்றங்கால் படுக்கையின் மேல் சீராக பரப்பி விடவும்.

மேட்டுப்பாத்திகளின் அளவு என்ன?

3 மீ x 1.5 மீ அளவுள்ள பாத்திகளை குறிக்கவும்.  நீர்பாய்ச்ச இடையில், 30 செ.மீ இடைவெளி விடவும்.  படுக்கைகளுக்கு இடையில் உள்ள மண்ணை 15 செ.மீ தோண்டி, வாய்க்கால் ஏற்படுத்தவும்.

ராகி விதைகளை பூஞ்சாணத் தாக்கத்திலிருந்து பாதுகாக்க என்ன விதை நேர்த்தி செய்ய வேண்டும்?

சூடோமோனாஸ் 2 கிராம்/கிலோ விதை, கொண்டு ஒரு பாலித்தீன் பையில் விதைகளைப் போட்டு நன்றாகக் கலக்கி விடவும்.  அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்) கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

ராகி விதைகளை எவ்வாறு விதைக்க வேண்டும்?

நாற்றுப் படுக்கைகளில், 5 கிலோ விதைகளை சீராக விதைத்து, அதன்மேல் 200 கிலோ பொடி செய்த தொழு உரத்தை துாவி விடவும். அதன்மேல், படுக்கைகளை முழுவதும் மூடிவிடுவது போல், பொடிசெய்த 500 கிலோ தொழு உரத்தை இடவும்.

ராகி விதைகளை எவ்வளவு ஆழத்தில் விதைக்க வேண்டும்?

கேழ்வரகு விதைகளை 1 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.  ஆழமாக விதைத்தால், முளைப்பு பாதிக்கக்கூடும்.

ராகியில் நாற்றங்கால் பாத்திகளுக்கு நீர்பாய்ச்சுவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

ஒவ்வொரு பாத்திக்கும் ஒரு வழி விடவும்.        வழியாக தண்ணீர்விட்டு, நாற்றுப் படுக்கையின் அனைத்து வாய்க்காலையும் நன்றாக மூடிவிடவும்.  மேட்டுப்பாத்திகள் நனையும் வரை நீர்பாய்ச்சி, பின்பு நீரோட்டத்தை நிறுத்தவும். நாற்றுப்படுக்கைகளில் விரிசல் விழுகாதவாறு பாசன நீரின் அளவை முறையாக கட்டுப்படுத்தவும்.

ராகி பயிரில் அனைத்து மண் வகைகளுக்கும் ஒரே மாதிரியாக நீர் பாய்ச்சப்படுகிறதா?  அப்படி வேறுபட்டால் எவ்வாறு நீர் பாய்ச்ச வேண்டும்?

இல்லை. மண் வகைகளுக்கு ஏற்றவாறு பாசன முறை வேறுபடும்.

பாசன எண்ணிக்கை

செம்மண்

கடினமண்

முதல் முறை

விதைத்தவுடன்

விதைத்தவுடன்

இரண்டாம் முறை

விதைத்த 3 ஆம் நாள்

விதைத்த 4 வது நாள்

மூன்றாம் முறை

விதைத்த 3 ஆம் நாள்

விதைத்த 9 வது நாள்

நான்காம் முறை

விதைத்த 12 ஆம் நாள்

விதைத்த 16 வது நாள்

ஐந்தாம் முறை

வதைத்த 17 ஆம் நாள்

-

 

மேலே செல்க


சாகுபடி நுட்பங்கள்


ராகி சாகுபடிக்கு ஏற்ற மண் வகைகள் யாவை?

நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்கத் தன்மையுடைய, வண்டல் மண், ராகி சாகுபடிக்கு ஏற்றது. சிறிதளவு நீர் தேக்கத்தையும் கூட தாங்கும் தன்மை பெறுவதற்கு போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணிலும் ராகி சாகுபடி செய்யலாம்.

தென்னிந்தியாவில் ராகி சாகுபடிக்கு ஏற்ற மண் எது?

தென்னிந்தியாவில், செம்பொறை மண் மற்றும் மணல் கலந்த செம்பொறை மண்ணில், அதிக அளவில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.

ராகி நாற்றுகளை எவ்வாறு நடவு  செய்வது?  நடவின் அளவு என்ன?

ஒரு குத்துக்கு இரண்டு நாற்றுகள் நடவும்.
நாற்றுகளை 3 செ.மீ ஆழத்தில் நடவும்.
18-20 நாள் வயதுடைய நாற்றுகளை நடவும்.
15 செ.மீ x 15 செ.மீ இடைவெளியை பின்பற்றவும்.

ராகி வயலில் பின்பற்றப்பட வேண்டிய களையெடுப்பு முறைகள் பற்றி கூறுக?

நடவு செய்த 10 வது மற்றும் 20 வது நாளில் இரண்டு முறை கைக்களை எடுக்கவும்.
இளகிய மண்ணில் 15 ஆம் நாளில், களை வெட்டி கைக்களை எடுக்கவும்.கடின மண்ணில், 17 வது நாளில் களை வெட்டி கைக்களை எடுக்கவும்.  பிறகு, இருமண் வகைகளிலும், 30 மற்றும் 32 வது நாளில், களைவெட்டி, கைக்களை எடுக்கவும்.
கைக்களையெடுத்த 2-3 நாட்கள் விட்டு, களை காய்ந்தவுடன், நீர் பாய்ச்சவும்.

ராகி நடவு வயலில், பாத்திகள் மற்றும் வாய்க்கால்களின் அளவு என்ன?

நில அமைப்பைப் பொருத்து, 10 மீ - 20 மீ வரை பாத்திகள் இருக்கலாம்.

மானாவாரி ராகியில் பின்பற்றப்பட வேண்டிய களைக்கட்டுப்பாடு முறைகள் யாவை?

வரிசை விதைப்புப் பயிரில், 2-3 முறை இடைஉழவு செய்யவும்.
மழை உத்திரவாதம் உள்ள இடங்களிலும், பாசன வசதி உள்ள இடங்களிலும், 2,4-டி சோடியம் உப்பு @ 0.75 a.i /எக்டர், முளைத்தப்பின் களைக்கொல்லியை விதைத்த 20-25 நாளில் தெளித்து, களையைக் கட்டுப்படுத்தலாம்.          முளைக்கும் முன் தெளிக்க வேண்டிய களைக்கொல்லி ஐசோபுரோடுரான் @ 0.5 a.i /எக்டர் தெளித்து களையை கட்டுப்படுத்தலாம்.

கைவிதைப்பு செய்த பயிரில் இடையுழவு செய்ய முடியாததால் இரண்டு முறை கைக்களை எடுத்து களையை கட்டுப்படுத்தலாம்.

ராகி பயிருடன் எந்தெந்த பயிர்களை, சுழற்சி முறையில் பயிர் செய்யலாம்?

தென் மாநிலங்களில், பச்சைபயிறு/உளுந்து/சோயா/கொள்ளு (அ) நிலக்கடலை போன்ற பயிர்களை ராகியுடன் பயிர் சுழற்சி செய்வதன் மூலம், இரசாயன உரங்கள் இடுவது குறைவதோடு, அதிகமான மகசூலும் கிடைக்கிறது.

ராகி -மக்காச்சோளம் (2 வருட பயிர்சுழற்சி) முறை ராகி-ராகி முறையைவிட அதிக மகசூல் கொடுத்துள்ளது.

ராகி பயிருடன் எந்தெந்த பயிர்களை ஊடுபயிர் செய்யலாம்?

மொச்சை/துவரை/காராமணி/பேய் எள்ளு/நிலக்கடலை மற்றும் பயிர்களுடன் ஊடுபயிர் செய்து கொள்ளலாம்.  நிலக்கடலையுடன், ராகி சார்பு  பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.  மலைப் பகுதிகளில், சோயாபீன்ஸ் பயிருடன் கலப்பு பயிர் செய்யப்படுகிறது.

ராகி பயிருடன் கடுகு ஊடுபயிர் செய்யப்படுகிறது. கடுகுப் பயிர் ராகியின் முன் பருவத்திலேயே பூத்து பொறி வண்டுகளைக் கவர்கிறது. பொறிவண்டுகள் ராகியை தாக்கக்கூடிய அசுவுணியை உண்கிறது. மழைபொய்த்தாலும் கடுகுப்பயிர் முதிர்ந்து மகசூல் கொடுத்து விடுதால், கடுகு உத்தரவாதப் பயிராகும்.

ராகி மற்ற பயிர்களுடன் எந்த விகிதத்தில் பயிர் செய்யப்படுகிறது?

ராகி + துவரை, 8:2 (அ) 6:2 விகிதத்தில் அதிக மகசூல் தருகிறது.
ராகி + மொச்சை, 8:1 விகிதத்தில் நல்ல உற்பத்தித் திறனை அளிக்கிறது.
ராகி+  தீவனச்சோளம் 8:1 விகிதத்தில் கர்நாடகாவில் அதிக மகசூல் திறன் கொடுத்துள்ளது.

ராகி + உளுந்து/பச்சைப்பயிறு, 8:2 விகிதத்தில், மற்ற ஊடுபயிர் முறைகளை விட அதிக லாபத்தை கொடுக்கவல்லது.

மேலே செல்க


உர மேலாண்மை


ராகி நடவு வயலுக்கான தழை, மணி மற்றும் சாம்பல் சத்து பரிந்துரை என்ன?

மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி உரமிடவேண்டும்.  மண் சோதனை அளவுகள் இல்லையெனில், 50-60 கிலோ தழைச்சத்து, 30-40  கிலோ மணிச்சத்து மற்றும் 20-30 கிலோ சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு தேவைப்படுகிறது.

ராகி நாற்றுகளை நடுவதற்கு முன் நடவு வயலில் எவ்வளவு தொழு உரம் இடவேண்டும்?

உழுவதற்கு முன் 12.5 டன்/எக்டர் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவை வயலில் பரப்பி, பிறகு உழுது மண்ணில் கலக்கி விடவும்.  (தொழு உரத்தை பரப்பியவுடன், அப்படியே மூடாமல் விட்டுவிடக் கூடாது. ஏன் எனில், சத்துக்களை இழக்க நேரிடும்.)

நடவு வயலில் எவ்வாறு உரமிட வேண்டும்?

முழு அளவு சாம்பல் மற்றும் மணிச்சத்து, பாதியளவு தழைச்சத்து ஆகியவற்றை விதைப்பின் போது இடவேண்டும்.  விதைப்பின் போது உரங்கள் முழுவதையும் 8-10 செ.மீ ஆழத்தில் மண்ணில் இடவேண்டும்.

மீதமுள்ள பாதியளவு தழைச்சத்தை இரண்டாகப் பிரித்து, விதைத்த 30 மற்றும் 50 ஆம் நாளில் இடவும்.

ராகி நாற்றுகளை நடுவதற்கு முன் பரிந்துரைக்கப்படும் உயிர் உரங்கள் யாவை?

நடுவதற்கு முன் 10 பாக்கெட்/எக்டர் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை, 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவும்.
2 டன் ஊட்டமேற்றப்பட்ட தொழு உரத்துடன், 100% மணிசத்து மற்றும் சாம்பல் சத்து உரம் கலந்து இட்டதில் கோயமுத்துாரில் அதிக மகசூல் பெற்றுள்ளனர்.

ராகி பயிருக்கு எவ்வளவு நுண்ணுாட்டம் இட வேண்டும்?  எவ்வாறு இட வேண்டும்?

12.5 கிலோ நுண்ணுாட்டக் கலவையை போதுமான அளவு மணலுடன் கலந்து 50 கிலோ/எக்டர் வருமாறு ஆக்கிக் கொள்ளவும்.

கலவையை படுக்கைகளின் மேல் சீராக பரப்பவும். மண்ணில் உள்ளே புதைத்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

அசோஸ்பைரில்லத்தை ராகி பயிருக்கு எவ்வாறு, எப்பொழுது இடவேண்டும்?

நடவின்போது, 5 பாக்கெட் (1000 கிராம்)/எக்டர் அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து, நாற்றுகளின் வேர்களை, கரைசலில் 15-30 நிமிடம் நனைத்து பின் நடவும்.

மானாவாரி ராகி பயிருக்கு எவ்வளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது?

மானாவாரி பயிருக்கு, மாநிலத்திற்கு மாநிலம், உர அளவு வேறுபடும்.  40:20:20 தழை,  சாம்பல் மற்றும் மணிச்சத்து பரிந்துரைக்கப்படுகிறது.  தொழு உரத்தை முறையாக  இடுவதன் மூலம், இரசாயண உரங்களின் திறன் அதிகரிப்படுகிறது.

எந்த முறையில், எந்த விகிதத்தில் உரங்களை இடலாம்?

சாம்பல் மற்றும் மணிச்சத்து முழுவதையும், விதைப்பின் போது இடவும்.  தழைச்சத்தை, ஈரப்பதத்தை பொருத்து இரண்டு (அ) மூன்று முறை இடலாம். நல்ல மழையும், ஈரப்பதமும் உள்ள பகுதிகளுக்கு, 50% தழைச்சத்தை விதைப்பின் போதும், மீதமுள்ள 50% உரத்தை விதைத்த 25-30 மற்றும் 40-45 நாட்களில் இடலாம்.  மழை உத்திரவாதம் இல்லாத இடங்களில், பாதியளவு தழைச்சத்தை விதைப்பின்போதும், மீதமுள்ள பாதியை விதைத்த 35 நாளிலும் இடலாம்.

மானாவாரி ராகி பயிருக்கு எவ்வளவு உயிர் உரம் பரிந்துரை செய்யப்படுகிறது?

விதைகளை அசோஸ்பைரில்லம் பிரேசிலென்ஸ் (தழைச்சத்து) நிலைப்படுத்தும் (பாக்டீரியா) மற்றும் அஸ்பர்ஜில்லஸ் அவமோரி (மணிச்சத்து கரைக்கும் பூஞ்சாணம்) @ 25 கிராம்/கிலோ விதை போதுமானதாகும்.

மானாவாரி ராகி பயிருக்கு  எவ்வாறு மருந்துளையும், உயிர் உரங்களை இடுவது?

விதைகளை முதலில் இரசாயனப் பொருட்கள் கொண்டு விதை நேர்த்தி செய்துவிட்டு, விதைப்பின் போது, கடைசியாக உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.

மானாவாரி ராகி பயிருக்கான உயிர் உர விதை நேர்த்தியின் செய்முறை பற்றி கூறுக?

படி 1 : பயிருக்கான உயிர் உரத்தை 25 கிராம்/கிலோ விதை என்ற அளவில்  பயன்படுத்தவும்.
படி 2: விதையில் நன்றாக உட்செலுத்துவதற்கு ஒட்டும் திரவம் தேவை.  இதற்கு, 250 மில்லி தண்ணீரில், 25 கிராம் வெல்லம் (அ) சர்க்கரையை 5 நிமிடம் கொதிக்க  விட்டு பின் ஆற விடவும்.
படி 3: விதைகளின் மேல் ஒட்டும் திரவத்தை பூசவும்.  பின் உயிர் உரத்தை விதைகளுடன் நன்றாக கலக்கி விடவும்.
படி 4:   உயிர் உரம் பூசப்பட்ட விதைகளை நிழலில் உலர்த்திக் கட்டியாக பார்த்துக் கொள்ளவும்.

படி 5:   விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்கவும்.

மேலே செல்க


பயிர் பாதுகாப்பு


ராகி பயிரில் எந்த இரகம் இலை குலை நோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது?

பையூர் (ஆர்.ஏ) 2 இலைக் குலை நோய்க்கு முழு எதிர்ப்பு திறனையும், கழுது மற்றும் கதிர் குலை நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறனையும் கொண்டுள்ளது.

கழுத்து மற்றும் கதிர் குலை நோய்க்கு, எதிர்ப்புத் திறன் கொண்ட ராகி இரகம் ஒன்றை கூறுக?

கோ (ஆர்.ஏ) 14

கர்நாடகாவில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற குலைநோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகம் ஏதேனும் உள்ளதா?

ஆம். எம் ஆர் 6 என்ற இரகம் கழுத்து மற்றும் கதிர் குலைநோய்கு எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது.  ஜி.பி.யு48 குலைநோய் தாங்கும் தன்மையுடையதாகும்.

ராகி நாற்றங்காலை எவ்வாறு பூச்சி மற்றும் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்?

5% வேப்பங்கொட்டை கரைசலை நாற்றங்காலில் தெளிக்கவும்.  தேவையெனில் மறுபடியும் தெளிக்கவும்.  சூடோமோனாஸ் @ 2 கிராம்/லிட்டர் தண்ணீர் கரைசல் தெளிக்கவும்.

தானியத்திற்கான ராகி பயிரில் எவ்வாறு பூச்சித் தாக்கத்தை தவிர்க்கலாம்?

தானியத்திற்கான ராகி விதைகளை, 10% ஈரப்பதம் இருக்குமாறு நன்றாக உலர்த்தவும்.

ராகி விதைக்கு பயன்படுத்தப்படும் ராகி விதைகளில் எவ்வாறு பூச்சித் தாக்கத்தை கட்டுப்படுத்துவது?

விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டிய விதைகளை 1 கிலோ செயலுாட்டப்பட்ட கயோலின்/100 கிலோ விதை என்ற அளவில் நன்றாக கலந்து, சணல் கோணிப்பை அல்லது பாலித்தீன் உள்பூச்சி உள்ள கோணிப்பையில் சேமித்து வைக்கலாம்.

ராகி பயிரைத் தாக்க கூடிய முக்கிய நோய்கள் யாவை?

குலைநோய், நாற்றழுகல் வாடல் நோய், கரிப்பூட்டை அடிச்சாம்பல் நோய் மற்றும் தேமல் வைரஸ் ஆகியன கேழ்வரகில் தென்படும் முக்கியமான நோய்கள் ஆகும்.

ராகி பயிரில் மஞ்சள் நிற உருண்டைப் புள்ளிகள் எதனால் ஏற்படுகிறது?

குலை நோயினால்  இந்த அறிகுறிகள் காணப்படும்.  பைரிகுலேரியா கிரைசியஸ் கிருமி இந்நோயை ஏற்படுத்துகிறது.

குலை நோயின் அறிகுறிகள் யாவை?

நாற்றுப்பருவத்தில் இருந்து, தானியம் உருவாகும் வரை இந்நோய் தாக்கம் ஏற்படும்.  புள்ளிகள் நீள் உருண்டை வடிவத்தில் வெவ்வேறு  அளவுகளில் தோன்றும்.  முதலில், புள்ளிகள் மஞ்சள் விளிம்புகளுடன் சாம்பல் நிற மையத்துடன் காணப்படும். ஈரப்பதம் நிறைந்த வானிலையில் புள்ளியுடன் மையத்தில் சாம்பல் நிற பூஞ்சாண வளர்ச்சியிருக்கும். பின்னர் அப்புள்ளி வெள்ளை சாம்பல் நிறத்திற்கு மாறி இணைந்துவிடும். நாற்றுகளில் உள்ள புள்ளிகள் 0.3 - 0.5 செ.மீ அகலம் மற்றும் 1-2 செ.மீ நீளத்துடன் இருக்கும்.

தண்டுகளில் தாக்கம் ஏற்படும் பொழுது, கணுக்கள்  கருமையாகிவிடும்.  அதிகமான பாதிப்பு தண்டின் கழுத்துப் பகுதி பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. கழுத்து கருப்பாகி, பின்பு சுருங்கி விடுகிறது. கதிரின் அடிப்பகுதியிலும் நோய் தாக்கப்படலாம்.  இது கதிர்கிளைகளுக்கும் பரவக்கூடும். பாதிக்கப்பட்ட பகுதிகள் காப்பி நிறத்திற்கு மாறி, கதிர்கள் பதராகிவிடும்.  சுருங்கிய தானிய மணிகளே உருவாகியிருக்கும்.

எந்த பகுதியில் குலைநோய்த் தாக்கம் இருக்கும்?

குலைநோய், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது. இந்நோய் முதன்முதலாக தமிழ்நாட்டில் 1919 இல் கண்டறியப்பட்டது. இந்நோயினால் 50% வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படக்கூடும்.  நோய்த் தாக்கம் 25-30° சி வெப்பத்தில் அதிகம் காணப்படும்.  அதிகமான ஈரப்பதம் (92-95%) மற்றும் தொடர் துாறல் மழை நோய் தாக்கத்திற்கு ஏதுவான சூழல் ஆகும்.

குலைநோய் எவ்வாறு பரவுகிறது?

குலைநோய், விதையில் இருந்து, பரவக்கூடியதால் முதல் நிலை நோய்த் தாக்கம், விதையில் பிறந்த கொனிடியாக்கள் மூலமும், பிற பயிர்கள் மூலமும் பரவக்கூடும். இரண்டாம் நிலை நோய்த் தாக்கம், காற்றும் மூலம், பிற ஊன் வழங்கும் களை மற்றும் தானியப் பயிர்களிடம் இருந்து பரவுகிறது.

ராகி பயிரின் குலைநோய் பரவுவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?  முறையான கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகள் யாவை?

அதிகமான தழைச்சத்து இடுவதைத் தவிர்க்கவும்.
கார்பன்டெசீம் 1 கிராம்/கிலோ விதை கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
விதைத்த 10-12 நாட்கள் கழித்து நாற்றங்காலுக்கு 0.1% கார்பன்டெசீம் கரைசல் தெளிக்கவும்.  நோய்த்தாக்கம் 5% க்கு மேல் இருந்தால், நடவு செய்த 20-25 நாட்களில் தெளிக்கவும்.  தேவையெனில், 40-50 நாட்களில் மறுமுறை மருந்து தெளிக்கவும்.
அக்ரோசன் (அ) செரிசன் @ 2.5 கிராம்/விதை கொண்டு விதை நேர்த்தி  செய்யவும்.
சூடோமோனாஸ் 2 கிராம்/லிட்டர் கரைசலை நோய் அறிகுறி தென்பட்டவுடன் தெளிக்கவும்.  தேவையெனில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக தெளித்து, கழுத்து மற்றும் கதிர் குலைநோயைக் கட்டுப்படுத்தலாம்.
விதைகளை சூடோமோனாஸ் புளுரோசென்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். 10% சீமைக் கருவேல் இலைக் கரைசல் தெளித்து ஐபோமியா கார்னியா இலைக்கரைசல் தெளித்து குலைநோயின் தீவிரத்தை குறைக்கலாம்.

ஆரியோபஞ்சின் கரைசலை (100 பி.பி.எம்), கதிர்கள் வெளிவந்தவுடன் தெளிக்கவும்.  பிறகு இரண்டாம் முறையாக சூடோமோனாஸ் 2 கிராம்/லிட்டர் மருந்தை, 10 நாட்கள் கழித்து தெளித்து, கழுத்து மற்றும் கதிர் குலைநோயைக் கட்டுப்படுத்தலாம்.

ராகி நாற்றுகளில், செடிகள் பெரிதாகும் வரை தொடரும் காப்பி நிறப் புள்ளிகள் எதனால் ஏற்படுகிறது?

இந்த அறிகுறி டிரெச்லேரா நாடுலோசம் கிருமியால் வருகிறது. இதனை நாற்றுக்கருகல் நோய் என்கிறோம். இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் இந்நோய் காணப்படுகிறது. மற்ற தானிய வகைப் பயிர்களிலும் இந்நோய் காணப்படுகிறது. இந்தியாவில் சில வருடங்களாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இந்நோய் தீவிரமாக உள்ளது.

ராகி நாற்றுகளில், எவ்வாறு நாற்றுக்கருகல் அறிகுறியைக் கண்டுபிடிக்கலாம்?

சிறிய நீள்வட்டமாக, இளம் காப்பி நிறப் புள்ளிகள், இளம் இலைகளில், முதல் அறிகுறியாகத் தோன்றும். நாற்றுகள் வளர வளர, இப்புள்ளிகள், பெரிதாகி, நீண்டு, அடர் காப்பி நிறமாகி விடும்.  மேலும் இப்புள்ளிகள் அனைத்தும் இணைந்து, இலையில் பெரிய படைபோலத் தோன்றும்.  பாதிக்கப்பட்ட இலைகள், உதிர்ந்து, நாற்றுகள் செத்துவிடுகின்றன.  சில நேரங்களில், நாற்றுகளின், தண்டின் அடிப்பகுதி மற்றும் வேர்களில் நோய்த் தாக்கம் ஏற்படுவதால், நாற்றுகள் பின்னர் அழுகிவிடுகின்றன.

வளர்ந்த ராகி  பயிர்களில் எவ்வாறு நாற்றுக் கருகல் நோயைக் கண்டுபிடிப்பது?

வளர்ந்த பயிர்களில் இலை, இலையுறை, தண்டு ஆகியவற்றில் இலைப்புள்ளிகள் காணப்படும். இலைகளில் இப்புள்ளிகள் நீண்டு உருண்டையாக, அடர் காப்பி நிறத்திலும் இலைப்புள்ளிகள் மற்றும் தண்டில் சீரற்ற விளிம்புகள் உடைய புள்ளிகள் தோன்றும். கழுத்து பகுதியில் காப்பி நிறம் மற்றும் அடர் காப்பி நிற மாற்றம் தோன்றி, கழுத்து சதைகள் வலிமையிழந்து, கதிர்கள் உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும்.  பைரிக்குலேரியா நோய் போன்று கதிர்க் கிளைகள் அல்லது பாதியளவு கதிர்களில்  நோய் தென்படும்.  நாற்றங்காலில் நோய் தாக்கும் போது நாற்றழுகல் ஏற்படுகிறது.  பயிரின் கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் கதிர் பதராகி, தானிய மகசூல் பாதிக்கிறது.

நாற்றுக் கருகல் நோய் பரவுவதற்கு ஏற்ற  காலநிலைக் காரணிகள் யாவை?

நோய்த் தாக்கத்திற்கு ஏதுவான வெப்பநிலை 30-32° சி ஆகும்.  10-37°சி வெப்பம் மற்றும் 80-90% ஈரப்பதம் நோய்த்தாக்கத்திற்கு ஏதுவாக இருக்கும். கதிர் பூக்கும்போது மழை வந்தால் நோய் தாக்கத்திற்கு ஏதுவாக இருக்கும். இந்நோய்க் கிருமி திணை, காக்கா புல், குதிரை வால், கம்பு, சோளம் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களைத் தாக்குகிறது. விதைமூலம் பரவகூடும் என்பதால் பருவத்திற்கு பருவம் விதை மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விதையை நாற்றங்காலில் விதைக்கும்போது, இப்பூஞ்சாணக்கிருமி நாற்றுகளைத் தாக்கி அழுகச் செய்து கருக்கி விடுகிறது.  இரண்டாம் நிலை நோய்த் தாக்கம் காற்றில், கொனிடியா மூலம் பரவுகிறது.

நாற்று கருகல் நோய் பரவுவதைத் தடுக்க செய்ய வேண்டிய கட்டுப்பாடு முறைகள் யாவை?

கேப்டான் (அ) திரம் 4 கிராம்/கிலோ விதை கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
1.2 கிலோ/எக்டர் மான்கோசெப் தெளிக்கவும்.
1% போர்டோ கலவை (அ) காப்பர் ஆக்சிகுளோரைடு தெளித்து நோயைக் கட்டுப்படுத்தலாம்.

டைத்தேன் M -78, 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும்.

ராகி பயி்ர்கள் வளர்ச்சி குன்றி, அடித்தண்டுகாப்பி நிறத்தில், குத்தாக இலை உறையுடன் தோன்றுவது எதனால் காணப்படுகிறது?

ஸ்கிலிரோசியம் ரால்ப்சி என்ற நோய்க் கிருமி, ஏற்படுத்தும் வாடல் நோயினால் இந்த அறிகுறிகள் தென்படும்.  இந்நோய் அவ்வளவாக முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையென்றாலும், மழைக் காலங்களில் இது பெரிதும் பாதிக்கிறது. இந்தியா தவிர இலங்கையிலும் இந்நோய் காணப்படுகின்றது. மண்ணில் உள்ள ஓட்டுண்ணி நுாற்புழுக்களால் நோய் தீவிரமாகக் கூடும்.  இதனால் கர்நாடகாவில் சில பகுதிகளில் திடீர் நோய்த் தாக்கம் காணப்பட்டது. 1954 இல் கோயமுத்துாரில், வாடல் நோய் காணப்பட்டது.

ராகி பயிரில்  வாடல்/பழம் அழுகல் நோயின் அறிகுறிகள் யாவை?

பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி, பச்சையாக இருக்கும்.  பூஞ்சாணம் முதலில், தண்டின் அடிப்பாகத்தை தாக்கி பின்னர் இலை உறையைத் தாக்குகிறது. தாக்கப்பட்ட பகுதிகள் மென்மையாகி அடர் காப்பி நிறத்திற்கு மாறிவிடுகின்றன.  இலையுறை மற்றும் தண்டுக்கு இடையில் உள்ள புள்ளிகளில் பூஞ்சாணம் வளர்கிறது. இறுதியாக செடிகள் மடிந்து விடுகின்றன. புள்ளிகளின் மேற்புரத்தில், சிறிய, உருண்டையான அடர் காப்பி நிற பூஞ்சாண இழை முடிச்சுகள் காணப்படும்.

ராகி வாடல் நோய் எவ்வாறு பரவுகிறது?  அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

பூஞ்சாணம் இழை முடிச்சுகளாக மண்ணில் காணப்படுகின்றது. பாசனத் தண்ணீர் மற்றும் பண்ணைக் கருவிகள் மூலம் பரவுகிறது.  இக்கருவி பலனளிக்காத கிருமி என்பதால், பிற பூச்சி மற்றும் நுாற்புழுத் தாக்கத்தால் செடிகள் வலிமையிழக்கும் போது, கிருமிகள் செயல்படத் தொடங்குகின்றன. செடியின் வேர்களில் காயம் ஏற்பட்டாலோ, ஒட்டுண்ணி நுாற்புழுக்களால் ஏற்படும் காயத்தாலோ, அவற்றின் வாயிலாக பூஞ்சாணம் உள்ளே செல்கிறது. உள்ளே நுழைந்துவுடனேயே செடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கிவிடுகின்றன.  அதிகமான ஈரப்பதமும், அதிகமான வெப்பமும் (30°சி க்கு மேல்) நோய் பரவுவதற்கு ஏதுவாக உள்ளது.

இந்த நோய்க்கு எந்த கட்டுப்பாடு முறைகளும்,  இல்லை. செடிகளை வீரியத்துடன், சுகாதாரமாக, வடிகால் வசதியுடன் வைத்து போதுமான மண் சூழலுடன், நோய்த் தாக்கத்தை தவிர்க்க வேண்டும்.  ஆழமாக உழுது, தானிய வகையல்லாத பயிர்களுடன்  பயிர் சுழற்சி செய்து நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

ராகி கதிரில் கரிப்பூட்டையுடன், உரு மாறிய தானியங்கள் எதனால் ஏற்படுகிறது?

மெலானோப்சைக்கம் எல்லுசின்ஸ், கரிப்பூட்டை நோய்க்கிருமி கரிப்பூட்டை நோயை ஏற்படுத்துகிறது. தானியங்கள் உருவாகும்போது நோய்த்தாக்கம் ஏற்படுகிறது.  பாதிக்கப்பட்ட தானியங்கள் உருமாறி, தானியத்தினுள் கருமை நிறத்தில், பூசண வித்துக்களுடன் இருக்கும்.  சில கதிர்மணிகளே உருவாகியிருக்கும். கதிரில் ஆங்காங்கே இருக்கும்.

கரிப்பூட்டை நோய் முக்கியத்துவம் வாய்ந்ததா?  அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

இந்நோய் கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள சில பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது.காற்றின் மூலம் பரவுகிறது.  கதிரில் உள்ள சில தானியங்களே பாதிக்கப்படுகிறது.  உறையினுள் இருந்து பூசண வித்துக்கள் வெளியே வருகிறது.  அறுவடைக்கு பின்னால் அவை மண்ணில் விழுகின்றன.

இந்நோய் காற்றின் மூலம் பரவக் கூடியதால் இந்நோயைக் கட்டுப்படுத்துவது சிரமம்.  ஆனால்,  முறையான உழவியல் முறைகள் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.  கரிப்பூட்டை நோய்க்கு இரகங்களில் வேறுபாடு காணப்படுகிறது. எனவே நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட கண்டறிவது நன்று.

ராகி பயிர்கள் எதனால் குட்டையாக பதர்போன்று பிரஷ் போன்ற கதிர்களுடன் காணப்படுகின்றது?

ராகி பயிரில் அடிச்சாம்பல் நோயினால் செடிகள் குன்றிய பதர் போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றது.இதை “பசுங்கதிர் நோய் எனக் கூறலாம்.  விதை மூலம் நோய்க்கிருமி பரவுகிறது.  கர்நாடகாவில், 1947 இல் பசுங்கதிர் நோய்த் தாக்கம் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்நோய்த்தாக்கம் அவ்வளவாக இல்லை.

அடிச்சாம்பல் நோயின் அறிகுறிகள் யாவை?

பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி, குறுகிய இடைக்கணுக்களுடள், பதர் போன்று இருக்கும்.  இலைகள் மிக அருகில் தோன்றுவதால், பதர் போன்ற தோற்றத்தை அளிக்கும். இலைகள் இளம் பச்சை நிறத்திற்கு மாறிவிடும். கதிரில் அறிகுறி நன்றாகத் தெரியும்.  கதிர் பல்வேறு பிரிவுகளுடன் அபரிமித வளர்ச்சியினால் பிரஷ் போன்று தோற்றமளிக்கும்.

ராகி பயிரில் அடிச்சாம்பல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

பாதிக்கப்ட்ட செடிகளை பிடுங்கி உடனே அழித்து விட வேண்டும்.  பாதிப்பு அதிகமாகும் போது பயிருக்கு டைத்தேன் M -45 @ 2 கிராம்/லிட்டர் தண்ணீர் தெளிக்கவும்.

வயலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

ராகி பயிரில் மஞ்சள் தேமல், குட்டைச் செடிகள் மற்றும் மலட்டுத் தன்மை எதனால் ஏற்படுகிறது?

தேமல் வைரஸ், மஞ்சள் தேமல் அறிகுறியை ஏற்படுத்துகிறது.  தமிழ்நாட்டில் பல இடங்களில் தேமல் நோய் காணப்படுகின்றது. இந்நோய் ஏப்ரல்-மே இல் விதைக்கப் பெற்ற பயிர்களில் நோய் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கை, சிக்காடுலினா பைபங்க்டெல்லா மற்றும் சிக்காடுலினா சினைய், அதிகமாக இருப்பதால், நோய்த்தாக்கம் அதிகம் காணப்படும். ஏபிஸ் மெயிடிஸ் பூச்சி தேமல் நோய் அறிகுறியுடன் அதிகம் காணப்படும்.  இப்பூச்சிக்கு நோயை பரப்புவதில் அதிக பங்குண்டு.

ராகி பயிரில் தேமல் நோயின் அறிகுறிகள் யாவை?

பயிரின் அனைத்து வளர்ச்சிப் பருவத்திலும் நோயின் அறிகுறி தென்படலாம் என்றாலும், நடவு செய்த 4-6 வாரங்களில் அதிகமாகக் காணப்படும். முதல் அறிகுறி மஞ்சளடைதல், தேமல் அறிகுறி தோன்றி, செடிகள் வளர்ச்சி குன்றிவிடும்.  செடி முழுவதும், வெளிரி, குட்டையாகி மலடாக இருக்கும். செடிகள் கதிர் பருவததை பெரும்பாலும் அடைவதில்லை. அப்படி ஏதேனும் கதிர் பூத்தால் அதில் பதரான தானியங்களே மிஞ்சும்.  நோய் தீவிரமாகவும் பொழுது  செடிகள் இளம் வயதிலேயே வாடிவிடுவதால், பாதிக்கப்பட்ட செடியை துாரத்தில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம்.  நோய்த் தாக்கத்தின் போது பயிரின் வயதைத் பொறுத்து தானிய மகசூல் 100% வரை இருக்கக்கூடும்.  பாசனப்பயிருக்கு முன்னால் வறண்ட கோடையும் மழையின்றி வறட்சியும் இருந்திருந்தால் நோய்த் தாக்கத்திற்கு ஏதுவாக இருக்கும்.

ராகித் தேமல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக அகற்றவும்.          அதிகமான அளவு மணிச்சத்து உரங்கள் இடவும். இரு வாரத்திற்கு ஒரு முறை பூஞ்சாணக் கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி கலந்து தெளிக்கவும். இதனால் ஓரளவிற்கு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

ராகி பயிரில் மஞ்சள் புள்ளிகளும் கோடுகளும் எதனால் ஏற்படுகிறது?

பலவர்ண இலை நோயினால் மஞ்சள் கோடுகள் காணப்படுகிறது.  நோய் தீவிரமடையும் போது, இலைகள் முழுவதும் மஞ்சளாகிவிடும்.  நியுகிளியேகேப்டோ வைரஸ் இந்நோயை ஏற்படுத்துகிறது. சிக்காடூலைனா பைபங்டெல்லா, சிக்காடுலெனா சினைய் பூச்சிகள் நோயைப் பரப்புகிறது. இப்பூச்சிகளை கட்டுப்படுத்த 0.03% பாஸ்மிடான், 0.04% டையசினான் (அ) டைமேத்தோயேட் தெளிக்கவும்.

பலவர்ண இலை நோயின் முழு அறிகுறிகள் யாவை?

விதைத்த 45 நாட்களில், குருத்து இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் புள்ளிகள் முதல் அறிகுறியாக தோன்றும்.
பின்னர், புள்ளிகள் இணைந்து சிறிய கோடுகளாக மாறிவிடும்.
நோய் தீவிரமாகும் பொழுது செடிகள் மஞ்சளாகிவிடும்.
பாதிக்கப்பட்ட செடிகள் அதிகமான கணுக்கிளைகளையும், பூக்காத துார்களையும் உற்பத்தி செய்கின்றன.

கதிர்கள் வெளிவருவதில்லை.  நோய்த்தாக்கம் பயிரின் முற்பகுதி மற்றும் பிற்பகுதியில் ஏற்பட்டால், குறைவான கதிர்மணிகளே உருவாகும்.

ராகி பயிரில் எவ்வாறு பலவர்ண இலை நோயைக் கட்டுப்படுத்துவது?

பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றவும்.

மிதைல் டேமட்டான் (அ) மோனோகுரோட்டோபாஸ்@ 500 மில்லி/எக்டர் பூச்சிக்கொல்லியை நோய் அறிகுறி தென்பட்டவுடன் தெளிக்கவும்.  தேவையெனில் 20 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்து, பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

ராகியைத் தாக்கக் கூடிய சிறு நோய்கள் யாவை?

நுண்ணுயிரி இலைப்புள்ளி நோய், (சேந்தோமோனாஸ் கம்பெஸ்டிரிஸ் ஜீஸ் எல்லுசின்) மற்றும் நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் சேந்தோமோனாஸ் கொரகேனா

ராகியின் புற ஒட்டுண்ணிகள் யாவை?

ஸ்டிரைகா ஆசியாடிகா குன்ட்ஸ் மற்றும் ஸ்டிரைகா டென்சிபுளோரா பெந்த்.

ராகியைத் தாக்கக் கூடிய பூச்சிகள் யாவை?

பயிர்களைத் தாக்கக் கூடிய பூச்சிகளில், தண்டு துளைப்பான், அசுவுணி கம்பளிப்புழு, வெட்டுக்கிளி மற்றும் கதிர்நாவாய் பூச்சிகள் குறிப்பிடத்தக்கவை.

தழைவளர்ச்சிப் பருவத்தில், ராகியில் “நடுக் குருத்து காய்தல்" எதனால் ஏற்படுகிறது?

இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான் “நடுக்குருத்து காய்தல்” அறிகுறியை ஏற்படுத்துகிறது. நாற்றுப் பருவத்தில் இருந்து முதிர்ச்சி பருவம் வரை பாதிப்பு ஏற்படுகிறது.  புழுக்கள் நடுக்குருத்து இலைகளில் இருந்து, இலைகளை உண்டு, ஓட்டையை ஏற்படுத்துகிறது. இதனால், நடுக்குருத்து காய்ந்து, “நடுக்குருத்து காய்தல்” அறிகுறி தென்படும்.
இளஞ்சிவப்பு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ராகி சாகுபடியில் என்ன உழவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும்?
காய்ந்த நடுக்குருத்துகளைப் பிடுங்கி தீவனமாகவோ (அ) குப்பைக் குழியில் புதைத்துவிட வேண்டும்.
தானிய வகைப் பயிரல்லாத, பிற பயிர்கள் வகைப் பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்ய வேண்டும். இதனால், பூச்சியின் வாழ்க்கை சுழற்சி தடுக்கப்படுகிறது.
நள்ளிரவு வரை விளக்குப்பொறி வைத்து தண்டு துளைப்பான் அந்து பூச்சிகளை கவர்ந்த அழித்து விடவும்.
ராகி பயிரை நிலத்திற்கு மிக அருகில் அறுவடை செய்து, புழு மற்றும் கூட்டுப்புழு பருவங்களை முறியடிக்கலாம்.

சரியான அளவு தழைச்சத்து உரங்களை பிரித்து பயிருக்கு இடுவதன் மூலம், பயிரின் பூச்சிக்கு இலக்காகும் தன்மை குறைகிறது.

இளஞ்சிவப்பு தண்டு துளைப்பானை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?

முட்டைகள் பாசிபோல் உருண்டையாக, வரிசையாக 30-100 எண்ணிக்கையில் இடப்பட்டிருக்கும். புழுக்கள் ஆரஞ்சு சிவப்பு தலையுடன், இளஞ்சிவப்பு உடம்புடன் இருக்கும். கூட்டுப்புழு அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.  முதிர்பூச்சி மத்திய அளவில் மஞ்சள் பழுப்பு  நிற அந்துப் பூச்சிகளாக இருக்கும்.

இளங்சிவப்பு தண்டுப் புழுவைக் கட்டுப்படுத்த என்னென்ன பூச்சிக் கொல்லிகள் தெளிக்கலாம்?

மிதைல் பாரத்தியான் 50 EC /மில்லி/லிட்டர் (அ) பாஸ்பமிடான் 85 WSC 0.5 மில்லி/லிட்டர் (அ) டைமெத்தோயேட் 30 EC 1.7 மில்லி/லிட்டர் தெளிக்கவும்.
எண்டோசல்பான் 35 EC @ 1 லிட்டர்/எக்டர் மருந்தை, பயிர்கள் முளைத்தபின், 20 நாட்கள் இடைவெளியில் தெளித்து, பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

கார்பரில் 50 WP 1 கிலோ/எக்டர் தெளித்து இளஞ்சிவப்பு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.

இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான் கட்டுப்பாட்டிற்கான உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் யாவை?

உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளான டீலோமஸ் சிற்றினம், டிரைகோகிராமா மைனுாட்டம் (முட்டை ஒட்டுண்ணி) மற்றும் அபேன்டிலெஸ் பிளேவிபெஸ், பிரக்கான் டிரைனென்சிஸ் (முட்டை ஒட்டுண்ணி) மற்றும் டெராஸ்டைகஸ் ஐயாரி (கூட்டுப்புழு ஒட்டுண்ணி) ஆகியவற்றை பயன்படுத்தி இளஞ்சிவப்பு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.

ராகி பயிரில் நடுக்குருத்து காய்தலுடன் வேர் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?

வெள்ளைத் தண்டு துளைப்பான் இந்த அறிகுறிகளைத் தோற்றுவிக்கிறது. இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான் போன்ற அறிகுறிகள் காணப்படுகிறது. எனினும், கம்பளிப்புழு செடியின் வேர்ப் பகுதி அருகில் தாக்குகிறது. பாதிப்பு தீவிரமடையும் போது மத்திய தண்டு காய்ந்து, “நடுக்குருத்து காய்தல்” அறிகுறி தோன்றுகிறது.  தண்டு துளைப்பான் தாக்குதல் மிதமாக இருக்கும் பொழுது மஞ்சளாகிவிடும்.

வெள்ளைத் தண்டு துளைப்பான் மற்றும் இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான் அறிகுறிகளை எவ்வாறு வேறுபடுத்துவது?

இரண்டு வகைத் தாக்குதல்களிலும் பாதிப்பு அறிகுறிகள் வேறுபடும். இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான் இலைகளில் ஊசி ஓட்டைகளை ஏற்படுத்தும். ஆனால், வெள்ளைத் தண்டு துளைப்பான் செடிகளின் துார்களுக்கு அடித் தண்டில் தாக்குகின்றன.

வெள்ளைத் தண்டு துளைப்பான் முட்டைகளை சுமார் 100 எண்ணிக்கையில் கூட்டமாக இடுகின்றன.
புழு: பழுப்பு வெள்ளை நிறத்தில், மஞ்சள் தலையுடன் இருக்கும்.
கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில், இணைப்பு வகை கூட்டுபுழுக்களாக, தண்டினுள் கூட்டுப்புழுவாகும்.
முதிர்ப்பூச்சி: சிறிய அந்துப்பூச்சி முன் இறகுகள் பழுப்பு நிறத்தில் வெள்ளை பட்டையான விளிம்புகளுடனும், பின் இறகுகள் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

 

வெள்ளைத் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தும் வழிகள் பற்றி கூறுக?

கார்பரில் 50 WP 1 கிலோ/எக்டர் தெளிக்கவும்.
மிதைல் பாரத்தியான் 50 EC 1 மில்லி/லிட்டர் (அ) பாஸ்பமிடான் 85 WSC 0.5 மில்லி/லிட்டர் (அ) டைமெத்தோயேட் 30 EC 1.7 மில்லி/லிட்டர் தெளிக்கவும்.

ராகி பயிர்களில் இலைச் சுரண்டல் எதனால் ஏற்படுகிறது?

ராகி பயிரில்  பல பூச்சிகளினால் இலை திண்ணப்படுகிறது அவற்றுள் சில
லெப்பிடாப்டிரன் புழு ஸ்போடோப்டீரா எக்சிகுவா, வெட்டுப்பு புழு என்றழைக்கப்படும்.
லெப்பிடாப்டிரன் புழு எஸ்டிக்மின் லேக்டினியா, கருப்பு கம்பளி புழு என்றழைக்கப்படும்.

ஆர்தாப்டிரன் பூச்சி, வெட்டுக்கிளி

வெட்டுப்புழுத் தாக்கத்தை எவ்வாறு கண்டறியலாம்?

புழு, பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். நாற்றங்காலில் உள்ள இலைகளை புழுக்கள் உண்ணும்.

புழுக்கள் பகலில் மண்ணில் மறைந்து கொண்டு இரவில் இலைகளை உண்கின்றன. மண் கூடுகளில் மண்ணில் கூட்டுப்புழுவாகின்றன.  முதிர் பூச்சிகள் பழுப்பு நிறத்தில் வெள்ளைப் பின் இறகுகளுடன் காணப்படும்.

ராகி பயிரில் வெட்டுப்புழுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

1000 மில்லி எண்டோசல்பான் தெளிக்கவும்.
மாலத்தியான் 50 EC 2 மில்லி/லிட்டர் (அ) கார்பரில் 50 WP 40 கிராம்/லிட்டர் தெளிக்கவும்.

விஷப்பொறி: கோதுமை தவிடு - 1 கிலோ + மோனோகுரோட்டோபாஸ் (10 மில்லி) + சக்கரை 100 கிராம் + ஈரப்பதத்திற்கு தண்ணீர்.

ராகி இளஞ்செடிகளின் இலைகளில், சிறிய ஓட்டைகள் காணப்படுகிறது?  இந்த அறிகுறி எதனால் ஏற்படுகிறது?

கோலியாப்டிரன் வகையின் துள்ளும் வண்டு, கீடோக்னீமா பூசாயென்சிஸ் தாக்கத்தினால் இலைகளில் சிறிய ஓட்டைகள் காணப்படுகிறது.

ராகி வயலில் துள்ளும் வண்டு தாக்கத்தை எவ்வாறு கண்டறிவது?

கீழ்வரும் அறிகுறிகளைக்கொண்டு துள்ளும் வண்டு தாக்கத்தை கண்டறியலாம்.
பாதிப்பின் நிலை: முதிர்பூச்சி, நாற்றங்கால் மற்றும் நடவு செய்யப்பட்ட இளஞ்செடிகளின் இலைகளை உண்டு ஓட்டைகள் ஏற்படுத்தி பயிரின் வீரியத்தை குறைக்கிறது.

2.முதிர் பூச்சி: அடர்ந்த காப்பி நிற துள்ளும் வண்டு.

ராகி வயலில், துள்ளும் வண்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்னென்ன மருந்துகள் தெளிக்கலாம்?

நடவு வயலுக்கு அருகில் உள்ள களைகளை கட்டுப்படுத்தி புழுக்களின் சுழற்சி முறையை உணவில்லாமல் முறியடிக்கலாம்.
வண்டுகள் அடைவதற்கு ஏதுவாக உள்ள பழைய செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றவும்.
10% பி.எச்.சி துாவவும்.
விதை நோர்த்தி செய்தும், துள்ளும் வண்டைக் கட்டுப்படுத்தலாம். கார்போசல்பான் @ 6.25 கிராம்/கிலோ விதை (3.88%) (அ) இமிடாகுளோப்ரிட் @ 6 கிராம்  மற்றும் 3 கிராம்/கிலோ விதை (4.66 மற்றும் 5.9%) தையாமீத்தாக்சேம் @  3.5 கிராம்/கிலோ விதை (6.13%) கொண்டு விதை நோத்தி செய்து துள்ளும் வண்டு தாக்கத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
ராகி வயலில் ஒருவர் கருப்பு கம்பளிப்புழு தாக்கத்தை எவ்வாறு கண்டறியவது?
இலைகள் உண்ணப்பட்டிருக்கும்.  கீழ்க்கண்ட அறிகுறிகளை வைத்து, பூச்சித் தாக்கத்தை ஒருவர் கண்டறியலாம்.
செடிகளில் முட்டை இடப்பட்டிருக்கும்.
புழு: தடினமான கருப்பு தலையுடன், உடல் முழுவதும் முடியுடன் இருக்கும்.
மண்ணில் கூட்டுப்புழுவாகும்.

முதிர்பூச்சிகள் பெரிதாக வெள்ளை நிறத்தில் ஊதா கோடுகளுடன் காணப்படும்.

கருப்பு கம்பளி புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

10% பி.எச்.சி துாள் துாவவும்.

ராகி வயலில், வெட்டுக்கிளியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் பயிரின் இலைகளை உண்கின்றன. வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த, நீண்ட கால முறைகளான உழவு, பழைய பயிர் கழிவுகளை சுத்தப்படுத்துவது, கவர்ச்சிப் பயிர், முன் விதைப்பு மற்றும் முன் அறுவடை ஆகியவற்றை கையாள வேண்டும்.

ராகி பயிரின் கதிரை எந்த பூச்சி தாக்குகிறது?

லெபிடாப்டிரன் பூச்சியான, கதிர் நாவாய்ப் புழு, (சிட்டோடுரோகா சீரியலெல்லா) ராகி பயிரின் கதிர்களை உண்கிறது.

கதிர் நாவாய்ப் புழுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

முதிரும் கதிர்களுக்கு 5% பி.எச்.சி (அ) 4% கார்பரில், துாவவும்.  அல்லது 0.1% கார்பரில் தெளிக்கவும்.

ராகியில்  எதனால் இலைகள் மஞ்சளடைதல் எறும்புத் தாக்கமும், குன்றிய பயிர் வளர்ச்சியம் ஏற்படுகிறது?

அசுவுணி தாக்கத்தால், பாதிக்கப்பட்ட செடிகள் மஞ்சளாகி வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. அவை செடியின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாறை உறிஞ்சுகின்றன. செடிகள் திட்டு திட்டாக வாடி, காய்ந்து விடுகின்றன. அசுவுணியின் தேன் துளிக் கழிவுக்காக கரும்பு எறும்புகள் வருகின்றன. கருப்பு எறும்புகள் வேர் அசுவணியின் தாக்கத்தை உறுதி செய்கின்றன. புல் வகைகளிலும் அசுவுணி காணப்படுகிறது.

ராகி  பயிரில் அசுவுணி தாக்கத்தை எவ்வாறு உறுதி செய்வது?

தேன் துளி கழிவுப் பொருள் மற்றும் எறும்புத் தாக்கம்.
குஞ்சுகளும், முதிர்ப்பூச்சிளும் செடியின் அடித்தண்டைத் தாக்கி வேரின் சாற்றை உறிஞ்சும்.பாதிக்கப்ட்ட செடிகள், வலிமையிழந்து காய்ந்து விடும்.

இளஞ்சிவப்பு உருண்டை அசுவுணிகள் (டெட்ரானியூரா நைகிரி அப்டாமினாலிஸ் (அ) பச்சை மஞ்சள் அசுவுணிகள் (சிசேப்பிஸ் கிரேமினம்) (அ) காப்பி நிற அசுவுணிகள் (ஹிஸ்டிரோனியூரா செட்டேரியே) செடியின் அடித்தண்டில் காணப்படும்.

அசுவுணியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

பாசனத் தண்ணீரில் குருடு ஆயில் கலந்து விடவும்.
டைமெத்தோயேட் 30 EC மருந்தை 3 மில்லி/லிட்டர் தண்ணீர் கலந்து, பாதிக்கப்பட்ட செடியின் வேர் மண்டலத்தில் ஊற்றி, வேர் அசுவுணிடியை உறுதி செய்யவும்.
செடியின் அடிப்பாகத்தில், 10% பி.எச்.சி துாள் துாவவும்.
டைமெக்ரான் 100 EC (250 மில்லி) எக்டர் - 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

எண்டோசல்பான் 35 EC @ 1000 மில்லி/எக்டர் (அ) கார்பரில் 50கீறி @ 1 கிலோ/எக்டர் (500 லிட்டர் தெளிக்கும் கரைசல்) தெளிக்கவும்.

இலைகள் மற்றும் இளம்  தண்டு கடிக்கப்பட்டு வளர்ந்த செடிகள் இறந்து விடும்.  இந்த அறிகுறிகள் எதனால் ஏற்படுகிறது?

வண்டு வகையின் வேர்ப்புழு இந்த அறிகுறிகளை உண்டாக்குகிறது.  வேர்ப்புழு (ஹோலோடிரைகியா கான்சேன்குனியா) வேர் மற்றும் வேர்க்கிளைகளை உண்டு, இலைகள் மடியச் செய்கின்றன.  முதிர் வண்டுகள், இலைகள் மற்றும் இளந்தண்டுகளை கடித்து உண்கின்றன.  அவை மண்ணிற்கு அடியில் நகரக்கூடும் என்பதால், ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு நகர்ந்துவிடும்.

ராகி வேர்ப்புழு எவ்வாறு இருக்கும்?

வேர்ப்புழு, குண்டாக  ‘C’ வடிவத்தில், வெள்ளை மஞ்சள் நிறத்தில் செடியின் அடிப்பகுதியில் இருக்கும்.  முதிர் பூச்சி அடர் காப்பி நிறத்தில் இருக்கும்.

ராகி பயிரில் வேர்ப்புழுத் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

10% பி.எச்.சி துாளை (40 கிலோ/எக்டர்) நடவு வயலில், மண்ணில் கலந்து பிறகு நடவு செய்யவும்.

மேலே செல்க


அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள்


மானாவாரி ராகியை அறுவடை செய்ய சிறந்த தருணம் எது?

விதைத்த, 3-5 மாதங்களில், இரகத்தைப் பொறுத்து ராகி முதிர்வடைகிறது. நடுத்தண்டின் கதிர் மற்றும் 50% கதிர்கள் பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் அறுவடை செய்யலாம்.

ராகி பாசனப் பயிர் எப்பொழுது அறுவடைக்கு தயாராகிறது?

பாசனப் பயிரை நடவு செய்த 3-5 மாதங்களில் அறுவடை செய்யலாம்.  ஆனால் மானாவாரிப் பயிரை கதிர் மஞ்சள் பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் அறுவடை செய்ய வேண்டும்.

மானாவாரி ராகியில் என்னென்ன அறுவடை முறைகளைப் பின்பற்ற வேண்டும்?

மானாவாரி பயிர்களை தரையின் அடிமட்டத்தில் அறுத்து பயிர்களை 1 நாள் அல்லது இரண்டு நாள் வயலிலேயே காயவிட்டு பிறகு கதிரடிக்கும் இரண்டு மாதங்கள் வரை நிறுத்தி வைக்கவும்.  கதிர்களை குச்சியில் அடித்தோ, களை மாடுகள் கொண்டு தாம்பு அடித்தோ, கல் உருளைகள் கொண்டு கசக்கியோ தானியங்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. பிரித்த தானியங்களைத் துாற்றி சுத்தம் செய்யவும்.

பாசனக் ராகி பயிரில் செய்ய வேண்டிய அறுவடை முறைகள் பற்றி கூறுக?

ராகி பாசனப் பயிராக சாகுபடி செய்யும்பொழுது, நடவு செய்த 3-5 மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும்.  முதிர்ந்த கதிர்களை அறுவடை செய்யவும்.  3-4 முறை அறுவடை வயலில் உளள கதிர்களை சேகரிக்க விடலாம்.

அறுவடை செய்த கதிர்களை குவித்து வைத்து ராகி வைக்கோல் கொண்டு 2-3 நாட்கள் உலர்ந்தபின் கதிரடிக்கவும். பாசனப் பயிரின் ராகி வைக்கோல் தடிமனாக வெட்டுவதற்கு இலகுவாக இல்லாமல் இருக்கும்.  இதனை வெட்டிபோட்டு அடுத்த பயிருக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.

ராகியின் சராசரி மகசூல் என்ன?

ராகியின் சராசரி தானிய மகசூல் 5 மில்லியன் டன்/எக்டர் ஆகும்.  இரகத்தைப் பொருத்து தானிய மகசூல் அமையும். இரகத்தின் வயது, உயரம் மற்றும் துார்கள் எண்ணிக்கையை நேரடியாக சார்ந்து, மகசூல் வேறுபடும். வளைந்த கதிர்க்கிளைகளை விட நேரான கதிர்க்கிளைகளில் அதிக மகசூல் கிடைக்கும்.

ராகி கதிர்களை கதிரடிக்கும் போது, கருத்தில் கவனம் செலுத்த வேண்டியவை யாவை?

பசுங்கதிர்களை அறுவடை செய்திருந்தால், நல்ல விதைகளுடன் முதிராத விதைகள் கலக்கக் கூடும். மேலும் சுத்தம் செய்தல், துாற்றுதல் மற்றும் தரம் பிரித்தல் ஆகியவற்றில் சிரமம் ஏற்படக்கூடும். எனவே கதிர்களின் ஈரப்பதத்தை 15% க்கு உலர்த்தி, மூங்கில் குச்சி அல்லது கதிரடிக்கும் இயந்திரம் கொண்டு கதிரடிக்க வேண்டும்.

கதிரடித்தப்பின் ராகி கதிர்மணி விதைகளை எவ்வாறு தரப்படுத்துவது?

சூரிய ஒளியில் உலர்த்தும் முன் விதைகளை சுத்தம் செய்து விட வேண்டும். விதைகளை 12% ஈரப்பதத்திற்கு, உலர்த்தி பின் தரம் பிரிக்க வேண்டும். தரம் பிரிப்பதில் உள்ள அளவுகோல்கள்
பி.எஸ்.எஸ் 10 x 10 (துளை அகலம் 2.4 மி.மீ) - ஸ்கேல்பர்
பி.எஸ்.எஸ் 12 x 12  (துளை அகலம் 2.0 மி.மீ)- கிரேடர்
இதில் 10-15% தானிய அளவு குறையக் கூடும்.

ராகி விதைகளை அறுவடை செய்து, தரம்பிரித்த பின் எவ்வாறு கடினப்படுத்துவது?

விதைகளை 0.5% கால்சியம் குளோரைடில், 1:1 விகிதத்தில் முளைப்பு தெரியும் வரை ஊற வைக்கவும். பிறகு விதைகளை முந்தைய ஈரப்பதத்திற்கு காற்றில் உலர்த்தவும்.

அறுவடை செய்முறைகளுக்குப்பின் ராகி விதைகளை எவ்வாறு சேமிக்கலாம்?

காற்றின் ஈரப்பதம் குறைவாக உள்ள இடங்களில், குறுகிய கால சேமிப்பிற்கு, புதிய காடா துணியை பயன்படுத்தவும்.  நீண்ட நாட்கள் சேமிப்பதற்கு, ஈரப்பதம் உள்ள இடங்களில், 700 காஜ் பாலித்தீன் பைகள் பயன்படுத்தலாம்.  மெட்டல் டின்கள், மண் பானைகள் மற்றும் சணல் கோனிப் பைகளிலும் சேமிக்கலாம். கர்நாடகாவில் மண் குழிகளில், “ஹவேகு” ராகி சேமிக்கப்படுகிறது. ராகி விதைகள் பூச்சி மற்றும் பூஞ்சாணத்தை எதிர்க்கும் திறன் பெற்றிருந்தாலும் சேமிக்கும் பைகளில் லிண்டேன் துாவி வைப்பது நல்லது.

ராகி விதைகளில் எவ்வாறு மில்லிங் செய்யப்படுகிறது?

ஈரப்பதத்தில் ராகி தானியங்கள் அரவை செய்யப்படுகிறது. பிறகு, ஹேமர் (அ) பிளேட் மில் (அ) ரோலர் மாவு மில்லில் ஆவியேற்றப்படுகிறது.

புழுங்க வைப்பதின் மூலம் ராகி விதைகளின் தரத்தை முன்னேற்ற முடியுமா?

ராகியைப் புழுங்க வைப்பதன் மூலம், அதன் சன்னமான பதம் போய்விடுகிறது. பொறித்த ராகி மாவு நல்ல வாசனையுடன் இருப்பதால் அதனை திண்பண்டங்கள், மற்றும் பிற தென்னிந்திய இதர உணவுவகைகளான கஞ்சி, ரொட்டி, தோசை மற்றும் கூழ் செய்யப்பயன்படுத்தலாம்.

ராகி பயிரின் முளைமாவு செய்யும் திறன் எவ்வளவு?  முளை மாவு ராகி பயிரின் பயன் என்ன?

பிற தானியங்களைவிட ராகி் முளை மாவிற்கான (மால்டிங்) நொதிகளை பெற்றுள்ளது.  இந்த முளைத்த ராகி மாவை முளைத்த பச்சைப்பயறு மாவுடன் கலந்து தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கான  சத்துள்ள இதர உணவுகள் தயாரிக்கலாம்.  ராகி மாவை பாலுடன் கலந்து பானங்களாகக் குடிக்கலாம். தானியங்களை புளித்த பானங்கள் செய்யப் பயன்படுத்தலாம்.  விழாக் காலங்களில் வாசனை பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஏழை மக்களுக்கான உணவாக அரிசிக்கு பதிலாக ராகியை வழங்கலாமா?

அரிசி மற்றும் பிற தானியங்களை விட ராகி பயிரில் அதிகமான சத்துக்கள் உள்ளன. மாவு வகை உணவுகளான மரவள்ளி, பாலிஷ் மண்ணின் அரிசி (அ) மக்காச்சோளம் போன்றவற்றை உட்கொள்ளும் பல மில்லியன் மக்களுக்கு குறைவாக இருக்கும் மெத்தியோனைன் குறைபாடு, மெத்தியோனைன் அமினோ அமிலம் அதிகம் உள்ள கேழ்வரகை வழங்கலாம்.

ராகியின்  ஊட்டச்சத்து அளவு என்ன?

சத்து

அளவு%

ஈரப்பதம்

13.10

கொழுப்பு

1.30

கார்போஹைட்ரேட்

76.30

புரதம்

7.30

நார்ச்சத்து

10-12

சாம்பல்

2-3

சக்தி

328 கிலோ கேலரி

சுண்ணாம்புச்சத்து (கால்சியம்)

344 (மில்லி கிராம்)

இரும்புச்சத்து

3.9 (மில்லி கிராம்)

கரோடின்

42 (மில்லி கிராம்)

 

கோதுமை தானியங்களைப் போன்று ராகி உமியில் ஏதேனும் சத்துக்கள் உள்ளதா?

தானியத்தின் எடையில் 5.6% உமி உள்ளது.  இதில் பிற தானியங்கள் மற்றும் சிறு தானியங்களை விட அதிகமான சுண்ணாம்புச் சத்து உள்ளது.  மேலும் பிற சத்துக்களான பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தும் உள்ளது. ராகியில் புரோளமின் மற்றும் குளுடெயின் அமிலங்கள் உள்ளன.  மேலும், இந்த புரதத்தில், எல்லா அமின அமிலங்களும் உள்ளன. முளைக்கட்டிய ராகி  தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கான இதர உணவுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ராகி தானியங்களைக் கொண்டு என்னென்ன உணவுப் பொருள்கள் தயார் செய்யலாம்?

ராகி தானியங்களைக் கொண்டு தோசை, கேழ்வரகு உருண்டைகள், பான்கேக், சேமியா, மால்ட், பிஸ்கட், பீர், அப்பளம், தானிய மிக்ஸ் பிரெட் மற்றும் ரொட்டி தயாரிக்கலாம். தானியங்களைப் பயன்படுத்த புளித்தப் பானங்களில் (அ) பீர் தயாரிக்கலாம். விழாக்காலங்களில் நறுமண பானங்கள் தயாரிக்க தானியங்கள் உபயோகப்படுத்தபடுகிறது. ராகி வைக்கோல் வேலைக்கு பயன்படுத்தும் மற்றும் பால் கறக்கும் மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுகிறது.

ராகியில் சுகாதார ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் உள்ள நற்குணங்கள் யாவை?

நம் நாட்டில் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு கேழ்வரகு உணவாகக் கொடுக்கப்படுகிறது.  ராகி  மிக மெல்ல செரிமாணம் ஆவதால் ராகி உணவு உட்கொண்ட பின் இரத்தத்தில் குறைவான சர்க்கரை அளவு காணப்படுகிறது.  எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.  பெண்களுக்கு  குழந்தைப் பிறப்பு காலத்தில், இலைச்சாறு கொடுக்கப்படுகிறது.

நீண்ட நாளுக்கு உட்கொள்ளும்போது தொழு நோய், கல்லீரல் நோய்கள், அம்மை, நிமோனியா மற்றும் பெரிய அம்மை நோய்களை தடுக்க முடியும்.  ராகியில் அதிகமான சுண்ணாம்புச் சத்தும் நார்ச்சத்தும் உள்ளது.  சுண்ணாம்பு சத்து தேவைப்படும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ராகி  இதர உணவாக அளிக்கப்படுகிறது.

எவ்வாறு ராகி நூடுல்ஸ் செய்வது?

70 கிராம் கோதுமை மாவு, 30 கிராம் கேழ்வரகு மாவை பி.எஸ் 60 மெஷ் சல்லடையில் சலித்து 5 நிமிடம் ஆவியில் வைத்து, ஆற வைத்து பின் சலிக்கவும். பாஸ்தா செய்யும் இயந்திரத்தில் மாவை போட்டு கலக்கி, பின் 30 மில்லி தண்ணீர், 2 கிராம் உப்பு சேர்த்து முறுக்கி பிழிந்து எடுக்கவும்.  5 நிமிடம் நுாடுல்சை ஆவியில் வைக்கவும். அறை வெப்பத்தில் 8 மணி நேரம் வைக்கவும். பின் கேபினெட் உலர்த்தியில் 60சி வெப்பத்தில் 6 மணி நேரம் வைத்து உலர்த்தவும்.

ராகி சேமியா தயார் செய்வது எப்படி?

மாவு விகிதத்தில் மாற்றத்தை தவிர செய்முறையில் எந்த மாற்றமும் இல்லை.
ரீபைன்ட் கோதுமை மாவு - 30 கிராம்
முழு கோதுமை மாவு - 40 கிராம்

பாஸ்டா செய்யும் இயந்திரத்தில் மாவைப் போட்டு, கலக்கி, முறுக்கு பிழிந்து, ஆவியில் வைத்து உலர்த்தவும்.

ராகி இடியாப்பம் எவ்வாறு செய்வது எப்படி?

ராகி நுாடுல்ஸ் போன்று ராகி இடியாப்பத்திற்கும் மாவு விகிதத்தை தவிர செய்முறையில் எந்த மாற்றமும் இல்லை.
அரிசி மாவு   - 80 கிராம்
ராகி மாவு- 30 கிராம்

மாவை நன்றாகக் கலக்கி பாஸ்தா செய்யும் இயந்திரத்தில் போட்டு, முறுக்கி பிழிந்து, ஆவியில் வைத்து பின் உலர்த்தவும்.

ராகி மட்டி என்றால் என்ன?  எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?

ராகி மட்டி இந்தியாவின் கர்நாடக மாநில மக்களின் தனித்தன்மை வாய்ந்த உணவு வகையாகும். கர்நாடக கிராம மக்களிடையே இது பிரபலமாக உள்ளது.

கொதிக்கும் தண்ணீரில் ராகி மாவைக் கலந்து சிறிதளவு உப்பு போடவும்.  நன்றாக கலந்து மாவாக பிசைந்து கொள்ளவும். பிறகு டென்னிஸ் பந்து அளவிலான உருண்டை பிடித்து சூடாக பரிமாறவும். நெய் மற்றும் சாம்பாருடன் ராகி மட்டி உண்ணப்படுகிறது.

அரிசியுடன் எவ்வாறு ராகி மட்டி செய்வது?

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் மற்றும் ஒரு கைபிடி அளவு அரிசி எடுத்துக் கொள்ளவும்.  சிறிதளவு உப்பு போட்டு, கொதிக்க விடவும். மூடிவைத்து அரிசியை வேகவைக்கவும். பிறகு கேழ்வரகு மாவைக் கொட்டவும். இப்பொழுது கலக்கிவிடக் கூடாது. பிறகு மூடிவைத்து சில நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து, ஆவி தட்டை நிமிர்த்தும் வரை சூடேற்றவும். ஒரு மர அகப்பை வைத்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.  அடுப்பை  சிம்மில் வைத்து 15 நிமிடம் ஆவியில் சமைக்கவும்.  சமைத்தவுடன் ஆறவிட்டு, மட்டி உருண்டைகளை, கையாலோ (அ) ஐஸ்கிரிம் ஸ்கூப்பரிலோ தயார் செய்யவும். ராகி உருண்டைகளை ஒரு கப்பில் போட்டு சாம்பார் ஊற்றவும். ரொம்ப சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இல்லாமல் மிதமான சூட்டில் சுவையாக இருக்கும்.  மேலே சிறிதளவு நெய் துாவவும்.

“ராகி மால்ட்” எவ்வாறு செய்வது?

1 ஸ்பூன் ராகி மாவை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். அரை கப்  தண்ணீரை மெல்ல ஊற்றவும். கட்டியில்லாமல் கலக்கி விடவும்.  மாவை நேரடியாக கொதிக்கும் தண்ணீரில் போட்டால் கட்டியாகிவிடும்.  எனவே கொதிக்கும் போது, பால்/தண்ணீரில் கலந்து வைத்துள்ள ராகி மாவுக் கரைசலை ஊற்றவும்.  கட்டியாகாமல் நன்றாக கலக்கி விடவும். தண்ணீர் கொதிக்கும் முன்னர் மாவுக் கரைசலைக் கலந்தால் மாவு நன்றாகக் கலங்காமல் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது.  சிறிதளவு சக்கரை (அ) வெல்லம் மற்றும் சிறிதளவு ஏலக்காய்ப் பொடி கலக்கவும். சூட்டைக் குறைத்து மிதமான சூட்டிலும் சிம் சூட்டில் 5 நிமிடம் வைத்து, கலக்கி விடவும். அடுப்பை நிறுத்தவும். ஆறவைத்து மிதமான இளம் சூட்டில் ஒரு டம்ளரில் ஊற்றவும்.  இது இரண்டு கப் அளவு ராகி மால்ட் ஆகும்.

ராகி அல்வா செய்வது எப்படி?

ஒரு நல்ல கடாயில் 50 கிராம் நெய்யில், 100 கிராம் ராகி மாவை வறுத்து எடுக்கவும்.  தேங்காய் பால் பொடி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சூடேற்றவும். கெட்டியானவுடன் 100 கிராம் சர்க்கரை சேர்க்கவும். அல்வா கெட்டியானவுடன், 50 கிராம் நெய்விட்டு கலக்கி விடவும். பாத்திரத்தின் பக்கவாட்டில் இருந்து அல்வா ஒட்டிக்கொள்ளாமல், நெய்  அல்வாவில் இருந்து பிரியும் வரை கலக்கவும்.  துண்டாக பொடி செய்த முந்திரியை கலக்கவும்.நெய் தடவப்பட்ட டிரேயில் பரப்பி விட்டு, துண்டாக வெட்டிவிடவும்.

உடனடியாகப் பயன்படுத்துவதற்கான ராகி மிக்ஸ் தயார் செய்வது எப்படி?

ராகியை சுத்தம் செய்து, 12 மணி நேரம் ஊற வைக்கவும். 48 மணி நேரத்திற்கு வைத்து முளைக்க விடவும். 24 மணி நேரம் நிழலில் உலர்த்தி, பின் 70-75° சி இல் சூடேற்றவும். மாவுமில்லில் கொடுத்து அரைத்து பினி பி.எஸ் 80 மெஷ் சல்லடையில் சலிக்கவும். மால்ட் மாவு தயாரிக்க மாவுடன், பால் பொடி பொடியாக்கிய சக்கரை/வெல்லம் சேர்த்து குறைவான ஈரப்பதத்தில் பேக் செய்யவும்.

மேலே செல்க

 

காட்சியகம்