சாகுபடி முறைகள்

இந்தியாவில் பயிர் செய்யப்படும் உணவு தானியங்களுள் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும்.  காலநிலை, பயிரின் நிலை, மண்ணின் வகை மற்றும் நீர் வளம் பொறுத்து வெவ்வேறு மாநிலங்களில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. 

கேழ்வரகுப் பயிரில் இரண்டு வகையான சாகுபடி முறைகள் பின்பற்றப்படுகிறது. அவை

பாசனப்பயிர் சாகுபடி முறை

  • டிசம்பர்-ஜனவரி மற்றும் ஏப்ரல்-மே பருவங்களில் பாசனப் பயிர் சாகுபடி செய்யலாம்.

  • தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் முழுவதும் பாசனப் பயிர் சாகுபடி செய்யலாம்.

  • பருவ மழை துவங்கியவுடன் விதைக்க வேண்டும்.

  • வயலுக்கு போதுமான அளவு உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும் .

இதில் மூன்று முறைகள் பின்பற்றப்படுகிறது.  அவை,

மேலே செல்க

 

மானாவாரிப் பயிர் சாகுபடி முறை

  • மானாவாரி கேழ்வரகு சாகுபடிக்கு,  450-500 மி.மீ சராசரி மழையளவு போதுமானது.

  • இம்முறை ஜுன்-ஜூலை மாதத்தில் பின்பற்றப்படுகிறது.  ராபி பயிராக குளிர் காலத்தில், செப்டம்பர்-அக்டோபரில் தமிழ்நாட்டில் நடவு செய்யப்படுகிறது.

  • கோடைப் பாசனப் பயிராக ஜனவரி-பிப்ரவரியில் நடவு செய்யப்படுகிறது.
  • பொதுவாக சோளம், கம்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயிறு வகைகளுடன் கலப்பு பயிராகவோ, ஊடு பயிராகவோ கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.

  • தரிசு உழவு செய்து, மண்ணின் ஈரப்பதத்தை சேமிக்கலாம்.

  • இம்முறையில் வரிசை விதைப்பு முறை ஏற்ற ஒன்று. விதையிடும் கருவியை பயன்படுத்தி வரிசைக்கு வரிசை 22.5-30 செ.மீ இடைவெளிவிட்டு விதைக்கவும்.  விதை மற்றும் உரமிடும் கருவியை பயன்படுத்தி வரிசை நடவு செய்வது நன்று.

  • பரிந்துரைக்கப்படும் விதையளவு ஒரு எக்டருக்கு 15-20 கிலோ ஆகும்.

  • பூக்கும் தருணங்களில் வறட்சியைத் தடுக்க, மானாவாரி பகுதிகளில் முன்கூட்டியே விதைத்துவிட வேண்டும்.

  • மானாவாரி சாகுபடி முறையில், அதிக மகசூல் கிடைக்க சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரிப்பது அவசியம்.

  • விதை கடினப்படுத்துதல் முறையை மேற்கொள்வதன் மூலம் முளைப்புத் திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாற்றின் வீரியம் அதிகரிப்பதோடு வறட்சியை தாங்கும் திறனும் அதிகரிக்கிறது.

  • பரிந்துரைக்கப்பட்டுள்ள தழை:சாம்பல்:மணிச்சத்து, 40:20:20 கிலோ/எக்டர் என்ற உர அளவை பின்பற்றவும்.  50 சதவீத  உரத்தை விதைப்பின் போதும், மீதமுள்ள 50 சதவீதத்தை விதைத்து 35 நாட்கள் கழித்து இடவேண்டும்.

  • வரிசை விதைப்பு பயிரில், 2-3 இடை உழவு முறைகளை பின்பற்ற வேண்டும்.  மழை உத்தரவாதமுள்ள மற்றும் பாசனப்பயிர் பகுதிகளில் 2, 4 D சோடியம் உப்பை களை பின் கொல்லியாக  @ 0.75 கிலோ  /எக்டர் என்ற அளவில் விதைத்து 20-25 நாட்கள் கழித்து, களையை கட்டப்படுத்த தெளிக்கலாம்.

  • விதையை தூவி விதைக்கும் பயிரில், இடை உழவு செய்ய முடியாது என்பதால், இரண்டு முறை கைக்களை எடுத்து களையை கட்டுப்படுத்தலாம்.

  • முன் மற்றும் பின் விதைப்புக்களால், மகசூல் பாதிக்கப்படுகிறது.

இதில் இரண்டு முறைகள் பின்பற்றப்படுகிறது.  அவை,

மேலே செல்க

 

நேரடி விதைப்பு முறை

சாகுபடி குறிப்புகள்

  • விதையளவு: 10 கிலோ/எக்டர்

  • இடைவெளி: 22.5 * 15 செ.மீ

  • விதை தூவும் முறை அல்லது வரிசை விதைப்பு முறை மூலம் நேரடி விதைப்பு செய்யப்படுகிறது. 

  • பரிந்துரைக்கப்பட்டுள்ள இடைவெளியில், வரிசை விதைப்பு செய்யப்படுகிறது.  பின்பு உழுதோ, விலங்குகளை கொண்டு மிதித்தோ மண் மூடப்படுகிறது.

  • தழை, மணி, சாம்பல் சத்து ஒவ்வொன்றையும் 22.5 கிலோ/எக்டர் என்ற அளவில், விதைப்பிற்கு முன்பும், விதைத்து 21 நாட்கள் கழித்து மேலுரமாகவும் இடவேண்டும்.

  • பாசனப் பயிருக்கு பார் மற்றும் சால்கள் அமைக்க வேண்டும்.  வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சி, நல்ல வளர்ச்சியையும் அதிகமான மகசூலையும் பெறலாம்.

  • விதைத்த 3 வாரத்திற்கு பின் களையெடுக்க வேண்டும், மேல் உரம் இடுவதற்கு முன்  களையெடுப்பதை முடிக்க வேண்டும்.

  • பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த முறையாக பூச்சிக் கொல்லிகள் மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள் தெளிக்க வேண்டும்.

  • இரகம், பருவம் மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து விதைத்த 3-5 மாதங்களில் முதிர்ச்சி அடைந்துவிடும்.

  • கதிர்கள் மஞ்சள் பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் அறுவடை செய்ய வேண்டும்.

மேலே செல்க

நடவு முறை

சாகுபடி குறிப்புகள்

  • விதையளவு : 3-5 கிலோ/எக்டர்

  • இடைவெளி: பாசனப்பயிர்: 22.5 x 10 செ.மீ
    மானாவாரிப் பயிர்: 22.5-30 x 7.5-10 செ.மீ

  • நாற்றங்கால் வயலை நன்கு உழுது தயார் செய்ய வேண்டும்.  பாத்திகள் மற்றும் வாய்க்கால்கள் அமைத்து விதைகளை ஒரே சீராக விதைத்து மண்ணை கிளறிவிட்டு மூட வேண்டும்.

  • நாற்றுகள் மூன்று வாரமாகும் போது, வயலில் நடவு செய்ய வேண்டும்.

  • வயலை 3-4 முறை உழுது, தொழு உரம் அல்லது மக்கிய உரம் இட வேண்டும்.

  • நடவு செய்தவுடனயே நீர் பாய்ச்ச வேண்டும்.  வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால், பயிரின் வளர்ச்சி அதிகரித்து மகசூலும் அதிகரிக்கும்.

  • தழை, சாம்பல் மற்றும் மணிச்சத்து ஒவ்வொன்றையும் @ 22.5 கிலோ/எக்டர் விதைக்கும் முன் அல்லது நடுவதற்கு முன் இடவேண்டும்.  நடவு செய்து 21 நாட்கள் கழித்து 22.5 கிலோ/எக்டர் மேலுரம் இடவேண்டும்.

  • விதைத்த மூன்று வாரம் கழித்து, களையெடுக்க வேண்டும், மேலுரம் இடுவதற்கு முன் களையெடுத்து முடிக்க வேண்டும்.

  • நோய் மற்றும் பூஞ்சாணக்கொல்லிகளை தெளித்து,  பூச்சி மற்றும் நோயை கட்டுப்படுத்த வேண்டும்.

  • இரகம், பருவம் மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து, விதைத்து 3-5 மாதங்களில் முதிர்ந்து விடும்.கதிர்கள் மஞ்சள் பழுப்ப நிறத்திற்கு மாறியவுடன் அறுவடை செய்யவும்.

மேலே செல்க


திருந்திய கேழ்வரகு சாகுபடி

திருந்திய கேழ்வரகு சாகுபடியை, கர்நாடகாவில் “கல்லி ராகி” என்று உள்ளூர் மொழியில் அழைக்கின்றனர். இதில், திருந்திய கேழ்வரகு சாகுபடி போன்றே, இராசாயன உரங்கள் சாராத சாகுபடி முறைகள்  பின்பற்றப்பட்டு, அதிக மகசூல் பெறப்படுகிறது.

திருந்திய கேழ்வரகு சாகுபடியில் குறைந்த இடுபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.  குறைந்த அளவு விதை, நீர், இராசாயன  உரங்கள் மற்றும் நோய்க் கொல்லிகளும், அதிகமான அளவு இயற்கை உரங்களும் பயன்படுத்தப்படுகிறது.  இவ்வாறு, சாகுபடி செய்யப்படும் கேழ்வரகில் பெரிய வேர்கள்,  அதிகமான துார்கள், பெரிய கதிர்கள் உருவாகின்றன.  நன்கு நிறைந்த அதிக மணியுடைய கதிர் மணிகள் கிடைக்கிறது.

திருந்திய கேழ்வரகு சாகுபடியில், நீர் வெள்ளப்பாய்ச்சல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக காய்ச்சலும், பாய்ச்சலும் முறையில் பாசனம் செய்யப்படுகிறது.

மேலே செல்க

 

நாற்றங்காலை எவ்வாறு தயார் செய்வது?

வறண்ட நிலையில் இருக்கும் பொழுது நிலத்தை தயார் செய்ய வேண்டும்.  தொழு உரம் இட்டு நன்றாக உழவேண்டும்.  தேவைப்பட்ட நீளமும், 1 மீ அகலமும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.  பாத்தியின் இருபுறத்தில் இருந்தும் மண் எடுத்து போட்டு மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.  மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், மழை அரித்து செல்லாமல் இருக்கவும், மூங்கில் தட்டைகள் நட வேண்டும்.  நடவு வயலுக்கு, அருகிலேயே நாற்றங்கால்  பாத்திகளை உருவாக்க வேண்டும்.  இதனால் நாற்றுகளை பிடுங்கி நடவு வயலுக்கு கொண்டு செல்லும் நேரம் குறைகிறது.

விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.  விதையை ஈரக்கோணியில் போட்டு 24 மணி நேரம் மூடி  வைக்க வேண்டும்.  விதைப்படுக்கையை சமம்படுத்த வேண்டும். படுக்கையின் மேல் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும்.  அதற்கு மேல் விதைகளை பரவலாக தூவவேண்டும்.   40 சதுர மீ பரப்பில் 1.25 கிலோ அளவு வதை போதுமானது.  தொழு உரம் மறுபடியும் இட்டு விதைகளைப் மூடவேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.  நாற்று படுக்கையில், எந்தவித இராசாயன உரங்களையும் இடக்கூடாது,  10-15 நாட்களில், நல்ல வளமான, வீரியமுள்ள நாற்றுக்கள் நடவுக்கு தயாராகிவிடும்.

மேலே செல்க


திருந்திய கேழ்வரகு சாகுபடியின் அடிப்படைத் தேவைகள்

i. நல்ல இளம் நாற்றுகளை, நடவுக்கு பயன்படுத்துதல்

முன் நடவு செய்தல்:

இரண்டு இலைகளுடன் கூடிய 10-15 நாட்கள் வயதுள்ள நாற்றுக்களை நட வேண்டும்.  இதனால் அதிகத் துார்கள் உருவாகுவதோடு, அதிகமான வேர்கள் வளர்கின்றன.  30 துார்களை எளிதில் பெறமுடியும் சில சமயங்களில் செடிக்கு 50 துார்களை கூட பெறலாம்.

நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை எடுத்தல்:

நல்ல தரமான 18”/15” உள்ள இரும்பு அட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.  நாற்றங்காலில், 3 இஞ்ச் ஆழத்திற்கு அடியில் இந்த இரும்பு அட்டையை,  உள்ளே செலுத்த வேண்டும்.  பிறகு மெல்ல தகட்டை வெளியே எடுக்க வேண்டும்.  இதனால் நாற்றுகள் மண்ணுடன் இரும்பு தகட்டின் மேல் வந்து விடும்.  நாற்றுகளை மண்ணுடன் நடவு வயலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு, நாற்றுகளை தனித்தனியே வேர்களுக்கு சேதமில்லாமல் மண்ணுடன் பிடுங்க வேண்டும்.  அகன்ற இடைவெளியில், சதுர வடிவில் நாற்றுகளை நடவும்.

நடவு வயலை தயார் செய்தல்:

நிலத்தை எப்பொழுதும் போல் நன்றாக உழ வேண்டும்.  இரண்டு மீட்டர் இடைவெளியில், 25 செ.மீ கால்வாய்கள் அமைக்க வேண்டும்.  கால்வாய் அமைக்க, தேவைப்பட்ட இடைவெளியில் குச்சிகளை, (2மீ, 30 செ.மீ) வயலின் வரப்புகளில் நட வேண்டும்.  வயலின் குறுக்கே 25 செ.மீ இடைவெளியில் கயிறு போட்டு, இரு கயறுகளுக்கும் இடையில் உள்ள மண்ணைத் தோண்டி இருபக்கமும் போட்டு, வாய்க்கால் அமைக்க வேண்டும்.  வயலை நன்றாக சமம்படுத்த வேண்டும்.  25 செ.மீ இடைவெளியில்  வாருகோல் கட்டையைப் பயன்படுத்தி கோடுகள் போட வேண்டும். பிறகு வாருகோல் கட்டை கொண்டு குறுக்கே கோடுகள் இழுக்க வேண்டும்.  இதன் மூலம் கிடைக்கும் சதுரக்கட்டங்களின் சந்திப்பு முனைகளில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 

  • கர்நாடகாவில், நடவு செய்த 15 மற்றும்  45 நாட்களுக்கு இடையில்,  “கொருகு” வை வயலின் குறுக்கே பல முறை இழுக்க வேண்டும்.  இதனால் இளம் செடிகள் ஒடியாமல், செடிகள் அதிக துார்கள் மற்றும் வேர்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.

  • கர்நாடகாவில், “யாதே குன்டே” என்ற நீண்ட கைப்பிடியுடன் பிளேட் கொண்ட கருவியை, இரு வரிசைகளுக்கு (45 செ.மீ) இடையிலும், செடிகளுக்கு இடையிலும், பயன்படுத்தி, மண்ணில் காற்றோட்டம் ஏற்ப்படுத்தப்படுகிறது. இதனால் களைகள் அகற்றப்படுகிறது.

மேலே செல்க

 

ii. கவனமாக நடவு செய்தல்

நாற்றுகளை பிடுங்கி நடவு செய்யும் போது ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பது அவசியம். நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை மிக கவனமாக மண்ணுடன் பிடுங்கி, நாற்றை அதிக ஆழமில்லாமல் நட வேண்டும்.  நாற்றுடன் விதை நன்றாக ஒட்டியிருக்க வேண்டும்.  நாற்றை பிடுங்கியவுடன் அரை மணி நேரத்திற்குள் அல்லது  15 நிமிடத்திற்குள் நடவு செய்துவிட வேண்டும். இதனால் நாற்று அதிர்ச்சி, நாற்றுக்கள் உலர்ந்து போதல் தவிர்க்கப்படும்.

நாற்றுகளை நடும்பொழுது, வேர் நுனி பாதிக்காதவாறு கவனமாக, நடவு  செய்ய வேண்டும்.  வேர் நுனி  மேல் நோக்கி ‘J’வடிவத்தில் மடிந்து இருந்தால், அது திரும்ப பழைய நிலைக்கு  சாதாரணமாக வந்து வளர்வதற்கு ஒரு வாரம் ஆகிவிடும்.  எனவே நாற்றுகளை மண்ணில் அழுத்தக் கூடாது.  எனவே, ஒவ்வொரு நாற்றையும், மெதுவாக  மண்ணின் மேற்பரப்பிற்கு அருகிலேயே, வேர் சாய்வாக இருக்குமாறு நடவும்.  இதனால் வேர்கள் ‘J’ வடிவம் போன்று இல்லாமல், ‘L’ வடிவமாக இருக்கும் மற்றும் வேர்கள் கிழ்நோக்கி நன்றாக வளரும்.  சதுரக் கோடுகளின் சந்திப்பில்  மட்டும் ஒற்றை நாற்றை மட்டுமே நடவேண்டும்.

மேலே செல்க

 

iii. அகன்ற இடைவெளி

கேழ்வரகு செடிகளை, அகன்ற இடைவெளியில், அடர்த்தியில்லாமல் நடும் பொழுது, அதிகமான துார்கள்,  வேர்களின் வளர்ச்சி, கதிர் மணி முழுமையாக நிரம்புதல் ஆகியவற்றிற்கு ஏதுவாகுகிறது.  25 செ.மீ x 25 செ.மீ இடைவெளியில், சதுர வடிவில் நாற்றுகள் நடப்படுகிறது.  அகன்ற இடைவெளிவிடும் பொழுது, வேர்கள் வளர அதிக இடம் கிடைக்கிறது.  செடிகளுக்கு அதிக சூரிய ஒளி, காற்று மற்றும் சத்துக்கள் கிடைக்கிறது.  இதனால் அதிக வேர் வளர்ச்சி மற்றும் துார்கள் உற்பத்தியாகிறது.  சதுர வடிவ நடவு, இரு திசைகளிலும் களையெடுக்க வசதியாக்குகிறது.  இதனால் ஒவ்வொரு செடியின் வளர்ச்சிக்கும் அதிக இடம் கிடைக்கிறது.

மேலே செல்க

 

iv. களையெடுத்தல் மற்றும் காற்றோட்டம்

திருந்திய கேழ்வரகு சாகுபடி முறையில், வயலில், தண்ணீர் தேங்கி நிற்காததால், களைகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.  சாதாரண கைக்கொத்து (சுழலும் கொத்து) பயன்படுத்தி மண்ணைக் கிளறி விட்டு களையைக் கட்டுப்படுத்தவும்.  களைக் கொத்தை 2-3 முறை சுழற்ற வேண்டும்.  இதனால் களை மண்ணோடு மண்ணாக  சேர்ந்து விடுகிறது.  நடவு செய்த 10-12 நாட்களில், முதல் களையெடுத்து, களைகள் முளைக்கும் போதே அகற்றிவிடவேண்டும்.  10 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து களைகள் எடுக்க வேண்டும்.  சுழலும் கொத்து கொண்டு களையெடுப்பதால் நல்ல, காற்றோட்டம் மற்றும் அதிமான வேர் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், களையைக் கட்டுப்படுத்தி வேர்களுக்கு அதிக அளவில் பிராணவாயு மற்றும் நைட்ரஜன் கிடைக்க வழிசெய்யப்படுகிறது.  மண்ணோடு மண்ணாக  சேர்க்கப்பட்ட களைகளின் தழைகளினால், ஒரு எக்டருக்கு 1 டன் பசுந்தாள் உரம் ஒவ்வொரு களையெடுப்பின் போது சேர்க்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது.

களைக்கொல்லிகளை பயன்படுத்தலாமா?
களைக்கொல்லிகளைப் பயன்படுத்தக்கூடாது.  திருந்திய கேழ்வரகு சாகுபடியில், களைக்கொல்லிகள் பரிந்துரை செய்யப்படுவதில்லை. பதிலாக களைகள் மண்ணோடு மண்ணாக  சேர்க்கப்படுகிறது.

மேலே செல்க

 

v. நீர் மேலாண்மை

திருந்திய கேழ்வரகு சாகுபடி முறையில், தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.  முறையாக, சீரான பாசனம் செலுத்தி மண்ணை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலும்  மூலமாக பாசனம் செய்தால், காற்றுள்ள மற்றும் காற்றில்லா சூழலை மண்ணில் ஏற்படுத்தி, எளிதாக நுண்ணுாட்டங்கள் பயிர்களுக்கு வழங்கப்படுகிறது.  இதனால் வேர்கள் அழிந்து போவது தடுக்கப்படுகிறது. நீர் தேங்கிய நிலைமையில் இயந்திரம் மூலம் களையெடுப்பதால், மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கப்படுகிறது.  அதிக வேர் வளர்ச்சி உண்டாக்குவதால், மண்ணில் உள்ள சத்துக்கள் எளிதாக பயிர்களுக்கு சென்றடைகிறது.

மேலே செல்க

 

vi. இயற்கை உரங்கள்

மக்கிய குப்பை/தொழு எரு:

இராசாயன உரங்கள் இடுவதைக் காட்டிலும், தொழு எரு அல்லது மக்கிய குப்பை @ 10 டன்/எக்டர் இடப்படுவதால், போதுமான அளவு சத்துக்கள் கிடைக்கிறது.  பலதரப்பட்ட இயற்கை உரங்களை இட வேண்டும்.  இயற்கை உரங்கள், நுண்ணுயிர்களுக்கு உணவாக பயன்படுகிறது.

நோய் மற்றும் பூச்சிக்கட்டுப்பாடு:

திருந்திய கேழ்வரகு சாகுபடி முறையில், பூச்சி மற்றும் நோய்த் தாக்கம் குறைவாகவே உள்ளது. வளமான, வீரியமுள்ள செடிகளுக்கு நோய் மற்றும் பூச்சித் தாக்கத்திற்கான எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

மேலே செல்க

 

திருந்திய கேழ்வரகு சாகுபடி மற்றும் பாரம்பரிய சாகுபடி - ஓர் ஓப்பீடு:

வ.எண்
Conventional Method
SRI Method
1
ஒரு எக்டருக்கு 3-5 கிலோ விதை உபயோகப்படுத்தப்படுகிறது.
ஒரு எக்டருக்கு 1.25 கிலோ உபயோகப்படுத்தப்படுகிறது.
2
25-30 நாட்கள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது.

8-12 நாட்கள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது.

3

நாற்றுக்களை வேகமாக  பிடுங்கி, கழுவி, கட்டி, நடவு வயலுக்கு எடுத்துச் செல்லப்படுவதால், பயிருக்கு பாதிப்பும், அதர்ச்சியும் அழுத்தமும் ஏற்படுகிறது.

மண்ணை மெதுவாக தோண்டி நாற்றுக்கள் எடுக்கப்படுகின்றன. நாற்றுக்களை வேகமாக பிடுங்காமல், கழுவாமல், கட்டாமல் எடுத்துச் செல்லப்படுகிறது.
4
செடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக  நடப்படுகிறது.
நாற்றுகள், சதுர வடிவில் நடவு செய்யப்படுகிறது.
5
3-4 செடிகள் ஒரு குத்தாக நடப்படுகிறது.
ஒரு குத்துக்கு ஒரு செடி மட்டும் நடப்படுகிறது.
6

பரிந்துரை செய்யப்பட்ட தழை, சாம்பல் மற்றும் மணிச்சத்து உரங்கள் இடப்படுகிறது.

இயற்கை உரங்கள் இடப்படுகிறது.  தற்பொழுது அடி உரம் மட்டும் இடப்படுகிறது.மேலுரம் இடப்படுவதில்லை.


வேலைக்கு அதிக ஆட்கள்  தேவைப்படுகிறதா?

வேலைக்கு அதிக  ஆட்களும், திறனும் தேவையென்பதால், திருந்திய சாகுபடி முறையை பின்பற்றுவதில் சில விவசாயிகள் முதலில் தயக்கம் காட்டுகின்றனர்.  முதலில் திருந்திய கேழ்வரகு சாகுபடிக்கு 50-100% அளவிற்க ஆட்கள் அதிகமாக  தேவைப்படும்.  நடவிற்கும் களையெடுப்பதற்கும், முதலில் அதிக ஆட்கள் தேவை.  மகசூல் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிப்பதால் வேலையாட்களுக்கு ஆகும் செலவு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.  நாட்கள் போக, போக இந்த செலவு குறைகிறது.  திருந்திய சாகுபடிக்கான முறைகள் மற்றம் தொழில்நுட்பங்கள் என்ன வேண்டுமென்று வரையறுத்துவிட்டால் நல்ல லாபகரத்தைத் தருகிறது.

மேலே செல்க

 

திருந்திய கேழ்வரகு சாகுபடியின் பயன்கள்

  • அதிக மகசூல் மற்றும் வைக்கோல் கிடைக்கிறது.

  • பயிரின் வயதில் 10 நாட்கள் குறைகிறது.

  • குறைவான இரசாயனப் பொருட்கள் பயன்பாடு

  • குறைவான அளவு நீர் தேவை (பாரம்பரிய அளவில் பாதியளவு போதும்)

  • பதர்களின் அளவும் குறைகிறது

  • தானிய அளவு மாறாமல், தானிய எடை அதிகரிக்கிறது

  • புயலை தாங்கும் திறன் பெற்றுள்ளது

  • உயிரியற் செயல்பாடுகளினால், மண்ணின் வளம் அதிகரிக்கிறது

  • குளிரைத் தாங்கும் திறன் கொண்டது.

மேலே செல்க


திருந்திய கேழ்வரகு சாகுபடியின் குறைகள்

  • பயிர் செய்யப்படும் ஆரம்பநிலைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும். இதனால் விவசாயிகள்

  • இம்முறையை பின்பற்றுவதில் தடை ஏற்படுகிறது.

  • இம்முறையைக் கையாளுவதற்கு விவசாயிகளுக்கு  அதிக அனுபவம் தேவை.

  • ராபி பருவத்தில், அதிக நீர் கட்டுப்பாடும், சூரிய ஒளியும் நன்றாக இருப்பதால், இப்பருவம் நல்ல பலனைத் தருகிறது.  காரீப் பருவத்தில், பருவ மழையினை நிர்ணயிக்க முடியாது.  அப்படி மழை பெய்தாலும் நீர் தேங்கி நின்று மண்ணின் காற்றோட்டம் பாதிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு பராமரிப்பு செய்வது கடினமாகிறது.

  • ஏற்ற களைக் கருவிகள்  கிடைப்பதில்லை

  • பாரம்பரிய முறை தங்கிவிடுகிறது.

  • தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.  திருந்திய கேழ்வரகு சாகுபடிக்கு, அதிக ஆட்கள் தேவையென்பதால், பெரிய அளவில் சாகுபடி செய்ய இம்முறை பொருந்தாது.

மேலே செல்க

காட்சியகம்