|
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
- பூச்சிகளின் உயிர்த் தொகை, குறிப்பிட்ட அளவிற்கு உயர்ந்து பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவது அல்லது பொருளாதார இழப்புகளை விளைவிப்பது, மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பது மற்றும் கால்நடைகளை பாதிப்பது ஆகியவையே பாதிக்கும் பூச்சி எனப்படுகிறது.
- பூச்சி ஒரு இடத்தில் பாதிக்கும் பூச்சியாகவும், மற்றொரு இடத்தில் அவ்வாறு இல்லாமலும் இருக்கும்.
- பூச்சிகள் பயிர்ச் செடிகளை உட்கொண்டு செடிகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது. மேலும் செடித் திசுக்களின் மேல் முட்டைகளை வைக்கின்றன. பூச்சி பயிரினை உட்கொள்வதால் ஏற்படும் இழப்புகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருக்கும்.
- எவ்வகையான பயிர் மகசூலிலும், 5 சதவிகிதம் இழப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாயிருக்கும் பூச்சித் தொகையின் அளவே, பூச்சி தகுநிலை எனப்படுகிறது.
- 5-10 சதவிகிதம் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளை சிறு பூச்சிகள் என்றும், 10 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் இழப்புகளை ஏற்படுத்தும் பூச்சிகளை முதன்மை பூச்சிகள் எனவும் பிரித்துக் கருதப்படுகிறது.
|